search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetables vendor"

    • அஸ்ரப் அலி யூசுப்புக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
    • அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை 

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் அஸ்ரப் அலி யூசூப் (வயது 34). காய்கறி வியாபாரி. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் அஸ்ரப் அலி யூசூப்புக்கு காளம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இவர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அஸ்ரப் அலி யூசூப்பின் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவியை பிரிந்து கள்ளக்காதலி வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று கள்ளக்காதலி வீட்டில் இருந்த அஸ்ரப் அலி யூசூப் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பேரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    தஞ்சையில் பொதுமக்கள் கூடும் மார்க்கெட்டு முன்பு வியாபாரியை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரவிந்த், தனது மோட்டார் சைக்கிளில் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட் முன்பு வந்த போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென வழிமறித்தனர்.பின்னர் அவர்கள் 4 பேரும், அரவிந்தை சர மாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கை, கால்களில் வெட்டு விழுந்தது.

    இதனால் அரவிந்த் ‘ காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..’ என்று கூச்சல் போட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் , குடும்ப பிரச்சினை காரணமாக அரவிந்த் மீது மர்ம கும்பல் வெட்டியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பட்டப்பகலில் பொதுமக்கள் கூடும் மார்க்கெட்டு முன்பு வியாபாரியை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×