search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vice presidential election"

    • மார்கரெட் ஆல்வா தேர்வில் தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் புகார்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க திரிணாமுல் முடிவு

    கொல்கத்தா:

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரசின் முடிவு எதிர்க்கட்சிகளுக்கும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இந்த தேர்தலில் பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படும் போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தாபானர்ஜி விரும்பினார், அது நடக்காது என்று தெரிந்த உடன் ஓடிவிட்டார். அனால் காங்கிரஸ் பின்வாங்க வில்லை.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதல்வர் மம்தா உதவவில்லை. அவர் பாஜகவுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க விரும்புகிறார்கள்.

    பாஜகவிற்கும் திரிணாமுல் இடையே ஒரு புரிதல் உள்ளது. ஜெகதீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது அவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    • துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.
    • மனுதாக்கல் செய்ய வருவோரின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது.

    இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 5ம் தேதி தொடங்கியது. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.

    வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற 22-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள். மட்டுமே வாக்களிப்பார்கள். பாராளுமன்றம் மற்றும் மேல்சபையைச் சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால் ஓட்டுப்பதிவு பாராளுமன்றத்தில் மட்டுமே நடக்கிறது.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தங்கர் இன்று மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    • துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது.
    • இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்குவங்க கவர்னரான ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதை முறைப்படி அறிவித்தார்.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான ஜெகதீப் தங்கருக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவரும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ் குமார் அறிவித்தார்.

    ×