என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "victims"
- பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார் முகமது.
- சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். அதிலும் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது. அதை கண்முன் நிறுத்தும் விதமாக பாலஸ்தீன தந்தை ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிறந்து 4 நாட்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்த முகமது அபு அல்- கும்சான் என்ற அந்த தந்தைக்கு தனது மனைவியும் குழந்தைகளும் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதலில் இறந்துவிட்டனர் என்ற அதிர்ச்சியே மிஞ்சியது.
மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் ஃபாலா பகுதியில் நடந்த தாக்குதலில் முகமதின் மனைவி, பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள் அசைல்[Aysel] மற்றும் அசெர் [Asser] உயிரிழந்துள்ளனர். கையில் இரண்டு பிறப்புச் சான்றிதழ்களை ஏந்தியவாறு முகமது கதறி அழும் வீடியோ போரின் கொடுமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அரசியல் தலைவர்களும் ஆயுத வியாபாரிகளும் லாபம் அடைவதற்காக உருவாக்கப்பட்ட போர் காலங்காலமாக அப்பாவி மக்களின் தலையிலேயே விடிவது மனிதக்குலத்தின் மீள முடியாத சாபம் ஆகும்.
Palestinian man who went to get birth certificates, returned tonfind his wife and children murdered... pic.twitter.com/3qxDLe8Rji
— Southland Post (@SouthlandPost) August 14, 2024
- தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுயப்பட்டிருந்தனர்.
- 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து அடைத்தது. இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி போன்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீ சார் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுவிலக்கு அமலாக்க துறை டி.எஸ்.பி சண்முகம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் டாஸ்மாக் கடைகளை சோத னையிட்டனர். ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் இரவு முதல் காலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. வெளியூர் ஊரிலிருந்து ஈரோடுக்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு அதன் பிறகே உள்ளே அனு மதிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மூலப்பட்டறை, பஸ் நிலையம், வீரப்பன்ச த்திரம் போன்ற பகுதிகளிலும் வாகன சோதனை நடைபெற்றது.
இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, சத்தியம ங்கலம், பெருந்துறை, மொட க்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய நடந்த சோதனை இன்று காலையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.
- ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.
- உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவரவில்லை.
ஜம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், கோயிலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். டிரோன்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவரவில்லை.
அவர்கள் உள்ளுர் வாசிகள் கிடையாது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஷிவ்கோடா கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. டிரோன்கள் மூலம் அப்பகுதிகளில் ராணுவம் தீவிர சோதனையில் இறங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரியாசி மாவட்டத்தில் இதற்குமுன் தீவிரவாத தாக்குதல் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
- ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .
மெக்சிகோவில் புதிய அதிபர் பதியேற்ற ஒரு நாளுக்குள் பெண் மேயர் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக மெக்சிகோவில் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் இடதுசாரி அரசியல்வாதியும் முன்னாள் மேயருமான கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ அதிபாராக தேர்வான 24 மணி நேரத்துக்குள் கோட்டிஜா நகர பெண் மேயரான யோலாண்டோ சான்செஸ் ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .
கடந்த 2021 மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்செஸ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். 3 நாட்கள் கழித்து அவர் மீட்கப்பட்டதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 4) அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாக அரசு தரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தரப் பிரதேச மாநிலம் கைஸர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கரண் பூஷன் சிங் போட்டியிடுகிறார்.
- கரண் பூசன் சிங்கிற்கு சொந்தமான கான்வாய் SUV கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூசன் சிங் மீது இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிய நிலையில், பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் நடப்பு மக்களவைத் தேர்தலில் அவருக்கு எம்.பி சீட் வழங்காமல் அவரது மகன் கரண் பூஷன் சிங்கிற்கு பாஜக, எம்.பி சீட் வழங்கியது.அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் கைஸர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கரண் பூஷன் சிங் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசம் கோண்டா மாவட்டம் கர்னைல்கஞ்ச் பகுதியில் சென்றுகொண்டிருந்தகரண் பூசன் சிங்கிற்கு சொந்தமான கான்வாய் SUV கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஹோசூர்பூர் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் மோதியதில் பைக்கில் வந்துகொண்டிருந்த 17 வயது சிறுவனும், 24 வயது இளைஞனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மீது மோதி வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 60 வயது மூதாட்டி மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரில் கரண் பூசன் சிங் இருந்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
- இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
- இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
- ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ.9 கோடி வழங்க வேண்டும்.
- இதில் 200 நபா்களுக்கு மட்டும் ரூ.2 கோடி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள ரூ.7 கோடி நிவாரணத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்புக்கு பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கத் தலைவா் கே.வி.எஸ்.மணிகுமாா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூா் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட திருப்பூா், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட வட்டங்களில் கடந்த 2019 முதல் 2022 ம் ஆண்டு வரை சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்கள், பாதிக்கப்பட்டவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ.9 கோடி வழங்க வேண்டும்.
இதில் 200 நபா்களுக்கு மட்டும் ரூ.2 கோடி நிவாரணத்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள நபா்களுக்கு வழங்க வேண்டிய சுமாா் ரூ.7 கோடி நிவாரணத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல தாராபுரம் கோட்டத்தில் சுமாா் 900 நபா்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தொகையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவீனத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
- பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் வழிகாட்டுதலின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.
மயிலாடுதுறை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சாலை விபத்தால் எற்படும் உயிரிழப்பை குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்துக்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மை காக்கும் 48திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள் பிற மாநிலத்தவர் வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும்கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரைகட்டணமின்றி மருத்துவ சிகிச்சைஅளிக்கப்படும்.
தேர்தெடுக்கப்பட்ட81 மருத்துவ சிகிச்சை முறைகளு க்கு நபர் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சம்வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
மேலும் இத்திட்டத்தில் சாலை விபத்தில்பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாகஅனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம்வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81) சிகிச்சை அளிக்கப்படும் 48 மணி நேரத்திற்குமேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சைநடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் வழிகாட்டுதலின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளிமேற்கொள்ளும் சிகிச்சை திட்டத்தில் அங்கீகரிக்கப்ப ட்டிருத்தல் நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவ மனையிலேயே மேல் சிகிச்சை தொடரலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவ மனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார்காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சை பெற விரும்பினால், நோயாளியைநிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனி நபரோசெ லுத்தி சிகிச்சை தொடரலாம்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 2327 நபர்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இத்திட்டத்தில் பயன டைந்த மயிலாடுதுறை மாவட்டம்சின்னக்குடியை சேர்ந்த ஜனகன் என்பவர் தெரிவித்தாவது நான் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழந்து பலத்த காயமடைந்து மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
நம்மைகாக்கும் 48 திட்டத்தால் தற்போது மூச்சு குழாயில் குழாய் பொருத்தப்பட்டு குணமடைந்து வருகிறேன் முதலமைச்சருக்கு நன்றி.அராயபுரத்தை சேர்ந்த அன்புமணி தெரிவித்தாவது நான் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் நேருக்குநேர் மோதியதில் பலத்த காயம டைந்து அரசு பெரியார் மருத்துவமனையில் இத்திட்ட த்தில் சிகிச்சை பெற்று முதல் அமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.
- தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.
சென்னிமலை:
தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பெருந்துறை நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளோடு குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.
மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் தனது நாட்டினருக்கு அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கையில், பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்தோ அல்லது விடுக்காமலோ மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும். சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வாகனங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.
எனவே, இலங்கைக்கு செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
சுற்றுலா தலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில் செல்லும்போது, சுற்றிலும் நடப்பனவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள். ஊடகங்களில் உடனடி செய்திகளை கவனியுங்கள். அதற்கேற்ப உங்கள் பயண திட்டத்தை மாற்றி அமையுங்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் நடப்பு நிலவரத்தை பார்த்து வாருங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல், கனடாவும் இலங்கை செல்லும் தனது நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வெளிநாடுகளில் கனடா மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, கனடா அரசு அவ்வப்போது நம்பகமான தகவல்களை அளித்து வருகிறது. அதற்கேற்ப கனடா நாட்டினர் தங்களது பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம்.
இலங்கைக்கு செல்வது உங்களது விருப்பம். வெளிநாடுகளில் உங்களது தனிப்பட்ட பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SriLankablasts #Colomboblast
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈஸ்டர் பெருநாளில் இலங்கையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்