search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinay Kwatra"

    • அமெரிக்க தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து கடந்த ஜனவரியில் ஓய்வுபெற்றார்.
    • வினய் குவாத்ரா விரைவில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்றார்.

    இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் குவாத்ராவை நியமனம் செய்து இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வினய் குவாத்ரா விரைவில் அமெரிக்க தூதராக பதவி ஏற்பார் என தெரிவித்துள்ளது.

    வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால், இந்தியா-அமெரிக்க உறவுகளில் உறுதியையும் தொடர்ச்சியையும் கொண்டு வருவார் என்பதற்காக வினய் குவாத்ராவுக்கு தூதர பதவி வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

    வினய் குவாத்ரா சமீபத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டார்.
    • இவர் தற்போது தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராக இருந்து வருகிறார்.

    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆக வினய் குவாத்ரா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் ஜூலை 14-ம் தேதி முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவர் தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் ஆக இருந்து வருகிறார்.

    1989-ம் ஆண்டு பிரிவு ஐ.எப்.எஸ். அதிகாரியான இவர், ஜூலை 15-ம் தேதிமுதல் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

    • இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.
    • கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.

    இந்தச் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. மேலும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக அவா்கள் தொிவித்தனா்.

    இந்தச் சந்திப்பின் மூலம் இருநாட்டு உறவுகளும் மேம்படுத்துவதற்கான உறுதியை இருதரப்பினரும் உறுதிபடுத்தி உள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டாில் தொிவித்துள்ளாா்.

    ×