search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "warning sign"

    • வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அபாயகரமான புதைக்குழி உள்ளது.
    • வனத்துறையினர் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், மத்தே வாடா அடர்ந்த வனப்பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே அபாயகரமான புதைக்குழி உள்ளது. மெல்ல திறந்தது கதவு சினிமாவில் வருவதுபோல இந்த புதைகுழி உள்ளது.

    புதைகுழிக்குள் சிக்கி யாரும் பலியாக கூடாது என்பதற்காக புதை குழியை சுற்றிலும் இரும்பு கம்பிகள் கொண்டு தடுப்பு அமைத்து இருந்தனர். மேலும் எச்சரிக்கை பலகை அமைத்துள்ளனர்.

    இந்த நிலையில் வாரங்கல் மாவட்டம், அல்லோடுவை சேர்ந்த நரேஷ் (வயது 30). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்தே வாடா வனப்பகுதிக்கு வந்தார். புதைக்குழியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளை தாண்டி சென்றார். அப்போது நரேஷ் புதைக்குழிக்குள் விழுந்தார்.

    மார்பு வரை அவரது உடல் புதைந்த அதிர்ஷ்டவசமாக முழுவதும் மூழ்கவில்லை.

    புதைக்குழி உள்ளதால் அந்த பகுதிக்கு யாரும் செல்வது இல்லை. புதை குழிக்குள் சிக்கிய நரேஷ் 2 நாட்களாக உயிருக்கு போராடியபடி கூச்சலிட்டு கொண்டே இருந்தார்.

    ரெயில்வே தண்டவாளம் அருகே ரெயில் டிராலி டிரைவர் ஒருவர் வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வாலிபர் கூச்சலிடுவதை கேட்டார். அவர் சென்று பார்த்தபோது வாலிபர் புதைக்குழிக்குள் சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.


    இதுகுறித்து மத்தே வாடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாததால் கயிறு கட்டி புதைக்குழி இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் கயிறு மூலம் புதைக் குழியில் இருந்து நரேஷை மீட்டனர்.

    மீட்கப்பட்ட நரேஷ் மயக்க நிலையில் இருந்ததால் அவரை மத்தே வாடா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வாரங்கலை சேர்ந்த வாலிபர் எதற்காக மத்தே வாடா வந்தார். தற்கொலை செய்து கொள்ள புதைக்குழியில் இறங்கினாரா என நரேஷுக்கு மயக்கம் தெளிந்த பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • இந்த சாலையில் அதிக அளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
    • பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த ஓரசோலை பகுதியில் நடந்த சாலை விபத்தில் கிருஷ்ணா புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து இறந்தவரின் உறவினரான மற்றொருவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விபத்து ஏற்பட்ட ஒரசோலை சாலை பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து கூறியதாவது:- இந்த சாலையில் மட்டும் வருடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுவதாகவும், விபத்தில் சிக்கியவர்களில் 5 முதல் 6 பேராவது இறந்து விடுகின்றனர். பலர் பெரும் காயங்களுடன் கை, கால்களை இழந்து தவிக்கின்றனர். மேலும் இந்த சாலையில் 300 மீட்டர் அளவிற்கு வேகத்தடை இல்லாததும் ஒரு காரணம் என தெரிவித்தனர். இதனால் சாலையில் அதிக அளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் இந்த சாலையை விபத்து பகுதியாக அறிவித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க உத்தரவிட்டார்.
    • விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுத மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிகார்பாளையம் வளைவு சாலையில் எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அப்பகுதியில் கள ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, நாகூர்-நன்னிலம்-நாச்சியார் கோவில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள சிகார்பாளையம் வளைவு சாலையில், வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் சாலை தடுப்பாண்கள், பிரதிபலிப்பான் விளக்குகள், சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

    இவ்ஆய்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் கார்த்திகா, நன்னிலம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், நன்னிலம்
    காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×