என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "was arrested"
- அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த செல்வகுமார் என்பவரை கைது செய்தனர்.
- 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் மற்றும் போலீசார் அங்கு அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த கோவை மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் செல்வகுமார் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 2 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கழிவுகளை கொட்ட கூடாது என்று பேரூராட்சி நிர்வாகத்தால் அறிப்பு பலகை வைக்கப்பட்டது.
- அதனையும் மீறி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட செம்புளிச் சாம்பாளையம் பகுதியில் கழிவுகளை கொ ட்ட கூடாது என்று பேரூரா ட்சி நிர்வாகத்தால் கடந்த மாதம் அறிப்பு பலகை வைக்கப்பட்டது.
அவ்வாறு கொட்ட வரும் வாகனத்தின் மீதும், வாகனத்தின் உரிமை யாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என்று பேரூரா ட்சி நிர்வா கத்தின் மூலம் அறிவிப்பு பலகை வைக்கப்ப ட்டிருந்தது.
அதனையும் மீறி அந்தபகு திக்கு வந்த கழிவுக ளை ஏற்றி வந்த லாரியை பொது மக்கள் சிறை பிடித்தனர். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கவிதா, நில வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட நார் தொழிற்சாலை நடத்து வரிடத்தில் பேச்சுவார்த்தை செய்து இனி இதுபோல் கழிவுகளை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்ததை அடு த்து அங்கிருந்து பொதும க்கள் கலைந்து சென்றனர்.
இதனால் செம்புளி ச்சாம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை செய்தனர்.
- கடையில் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை செய்தனர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட கூலிப், ஹான்ஸ் பாக்கெட், விமல் பான் மசாலா பாக்கெட் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடையில் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
- 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ 3,900 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
அப்போது கோபி அடுத்த அக்கரை கொடி வேரி, காமராஜ் புறம் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் பாக்கெட், விமல் பாக்கு, கூலிப் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்தி ருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிர மணியம் (50) என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்து ஒரு கிலோ 266 கிராம் போதைப் பொரு ட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேப்போல் சத்திய மங்கலம் சப்- இன்ஸ்பெ க்டர் விஜயன் சத்தி-புது குய்யனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தபோது ஒருவர் சந்தேக ப்படும் படி நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார்(23) என்பதும் சட்ட விரோதமாக மது விற்பனை யில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ 3,900 பறிமுதல் செய்யப்பட்டது.
- விவசாயியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.
மதுரை
மதுரை நரியம்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 53), விவசாயி. இதே பகுதியில் கணேஷ்குமார் (31) என்பவரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நரியம்பட்டி கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் வரி வசூல் செய்யப்பட்டது. அப்போது பணம் விவகாரம் தொடர்பாக சுகுமாறன்- கணேஷ்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேருக்கும் இடையில் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சுகுமாறன் நரியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த கணேஷ்குமார் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைதொடர்ந்து கணேஷ்குமார் கல்லால் சுகுமாறனை தாக்கினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
இதுதொடர்பாக சுகுமாறன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ்குமாரை கைது செய்தனர்.
- முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
- பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி, நல்லூர் பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது பு.புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளி சாணார்பதி அருகே ஒரு பகுதியில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி (60) என்பதும், அவர் அந்த பகுதியில் முட்புதரில் மது பாட்டில்களை மறைத்து வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மறைத்து வைத்து இருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு வாலிபர் அவரிடம் வந்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு என்று கேட்டுள்ளார்.
- இதற்கு பூவேந்தன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்து உள்ள சின்ன மடத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பூவேந்தன் (வயது 28). இவர் பெருந்துறை பகுதியில் இருசக்கர வாகன டீலர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் சரளை சென்று விட்டு பெருந்துறை வந்து கொண்டி ருந்தார். பெருந்துறை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது அவருக்கு போன் வந்தது. இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் வந்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு என்று கேட்டுள்ளார். இதற்கு பூவேந்தன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதையடுத்து அந்த வாலிபர் அவரை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வாலிபர் ஏற்கனவே என் மேல கொலை வழக்கு உள்ளது. பணம் கொடுக்க வில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி யதாகவும் கூறப்படுகிறது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூவேந்தன் சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர்.
இது குறித்து பூவேந்தன் பெருந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். பெருந்துறை சப்-இன்ஸ்பெ க்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசா ரணை நடத்தினார்.
இதில் அவர் விஜய மங்கலம் சேரன் நகரை சேர்ந்த மணிகண்டன் (26) என தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மணிகண்டன் சிறையில் அடைக்க ப்பட்டார்.
- கோவிலின் உண்டியலை வேல் கம்பியால் உடைத்துக் கொண்டிருந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாதையனை கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் பகுதியில் பாலமரத்து முனியப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் ஏதும் கிடையாது. திறந்தவெளியில் உள்ள இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் கோவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் போட்டு கொண்டே கோவிலை நோக்கிச் சென்றனர்.
அப்போது கோவிலின் உண்டியலை வேல் கம்பியால் உடைத்துக் கொண்டிருந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடினான். இதுகுறித்து கோவில் பூசாரி அம்மாசைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து அம்மாசை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய திருடனை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பயிற்சி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது ஊமாரெட்டியூரை அடுத்த கோலக்காரனூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியான நின்ற ஒரு வாலிபரை போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
மேலும் விசாரணையில் இந்திரா நகரை சேர்ந்த மாதையன் (36) என்பதும், பாலமரத்து முனியப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்றதும் தெரிய வந்தது.
இவர் தற்காலிகமாக சேலம் இரும்பாலை பகுதியில் தங்கி கட்டிடப்பணிக்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். தனது தாய், தந்தையை பார்க்க ஊருக்கு வந்தவர் திருட்டு செயலில் ஈடுபட்டு ள்ளது என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாதையனை கைது செய்து பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- வீட்டில் காயத்துடன் மர்மமான முறையில் காதர்மொய்தீன் இறந்து கிடந்தார்.
- சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி கருங்கல்பாளையம் போலீசார் லோகுவை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகர், 4 -வது வீதியைச் சேர்ந்தவர் காதர்மொய்தீன் (62). பெயிண்டர். தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் காயத்துடன் மர்மமான முறையில் காதர்மொய்தீன் இறந்து கிடந்தார். கருங்கல்பாளையம் போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதர்மொய்தீன் பிரேத பரிசோதனை முடிவு வெளி வந்தது.
அதில் விலா எலும்பு உடைந்து நுரையீரலில் குத்தியதில் காதர் மொய்தீன் இறந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கருங்கல் பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த லோகு (34) என்ற கட்டிட தொழிலாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர் மொய்தீனை கொன் றதை ஒப்புக் கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
காதர் மொய்தீன், லோகு பல இடங்களில் ஒன்றாக வேலை பார்த்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி மதுவும் அருந்தி வந்துள்ளனர்.
காதர் மொய்தீன் அடிக்கடி நாகூர் சென்று பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். அங்கு வீட்டு வேலை செய்ய ஒரு பெண் தேவை என்று கேட்டுள்ளார். இதையடுத்து லோகுவின் மனைவியை அங்கு வேலைக்கு சேர்த்து உள்ளார்.
இந்நிலையில் மனைவி மாயமானதாக நினைத்து லோகு ஆத்திரத்தில் இருந்து உள்ளார். நாகூரில் அவர் வேலை செய்வதும் அதற்கு காதர் மொய்தீன் தான் காரணம் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த 7-ந் தேதி இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது லோகு, காதர் மொய்தீனை கைகளால் தாக்கியும், நெஞ்சு விலா எலும்பு பகுதியில் கால்களால் ஏறியும் மிதித்துள்ளார்.
இதில் மொய்தீன் மூச்சுத் திணறி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதனை அடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்கமாக மாற்றி கருங்கல்பாளையம் போலீசார் லோகுவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
- பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சத்தியமங்கலம் வரதம்பாளையம் அருகே உள்ள தியேட்டர் பக்கத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அந்த பெட்டிக்கடை யை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த பெட்டி கடையில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்றது தெரியவந்தது.
இது குறித்து விசாரித்த போது சத்தியமங்கலம் பண்ணாரி யம்மன் நகரை சேர்ந்த ரங்கசாமி (75) என்பவர் அந்த பெட்டி க்கடை யை நடத்தி வந்தது தெரிய வந்தது.
10 லாட்டரி சீட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரங்கசாமி இடமிருந்து ரூ.17, 950 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர்.
- பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் மூட்டையை இறக்கி வைத்தார்.
- இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்து அவரிடம் இருந்த ரேஷன் அரிசி மற்றும் மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உத்தரவின் பேரில் போலீசார் கண்கா ணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளுடன் வந்த வாலிபரை அவருக்கு தெரியாமல் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.
அவர் பவானி காடையாம்பட்டி பகுதியில் ஒரு கொட்டகையில் மூட்டையை இறக்கி வைத்தார்.
இதைப்பார்த்த போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து அங்கு சோதனை செய்தனர்.
அதில் ஈரோட்டில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 1,900 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானி துருப்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோதரன் (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தாமோதரனை கைது செய்து, அவரிடம் இருந்த 1,900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டினையும் பறிமுதல் செய்தனர்.
- அருள்தாஸ் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
- இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவுக்கு உட்பட்ட எல்லீஸ்பேட்டை பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (46). இவர் தனது வீட்டின் அருகிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் செல்வி கடையில் இருந்தபோது அதே பகுதியில் உள்ள மாதா கோவில் வீதியை சேர்ந்த அருள்தாஸ் (49). தொழிலாளி இவர். மதுபோதையில் கடைக்கு வந்து கடனாக சிகரெட் தருமாறு கேட்டுள்ளார். செல்வி சிகரெட் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து அருள்தாஸ் கடையினுள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடி ஜாடியை தூக்கி கீழே போட்டு உடைத்தும், செல்வியை தகாத வார்த்தையால் திட்டியும் தகராறு செய்துள்ளார்.
இதனால் செல்வி அருகில் உள்ள தனது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். அப்போதும் விடாமல் அருள்தாஸ் கதவை எட்டி உதைத்து செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்த அருள்தாஸ் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள்தாசை கைது செய்தனர்.
பின்னர் அவர் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்