என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wasted"
- தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ளது.
- கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.
திருப்பூர் :
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர், ஒரத்துப்பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும் ஆறாக உள்ள நிலையில், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களின் கழிவு நீர் செல்லும் வடிகாலாக மாறி விடுகிறது.
நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13ம் நூற்றாண்டுகளில் 45 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட 23 தடுப்பணைகளும், 31 குளங்களும் மட்டுமே வரலாற்றை சுமந்த வண்ணம் எஞ்சி உள்ளது. மீதமிருந்த குளங்கள் காணாமல் போயும், தடுப்பணைகள் உடைக்கப்பட்டும் உள்ளது.
கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கு மூலம் நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு நிரம்பி வருகிறது. கடந்த 9ந் தேதி நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரத்துப்பாளையம் அணைக்கு 4230 கன அடி நீர் வரத்து வந்தது. அதன் பின் படிப்படியாக நீர் வரத்து குறைந்து தற்போது 630 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த 13 நாட்களில் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ள நீரின் அளவு சுமார் 15 டிஎம்சி.க்கு மேல் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒவ்வொரு ஆண்டும் நொய்யல் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 டிஎம்சி., வரை மழைத்தண்ணீர் காவிரியில் கலந்து வருகிறது. ஏற்கனவே கொங்கு சோழர்கள் ஆட்சி காலத்தில் நொய்யல் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணைகள் மூலம் குளங்கள் நிரப்பபட்டாலும், இன்னும் ஏராளமான தடுப்பணைகள் உடைக்கப்பட்டும்,உடைந்தும் கிடக்கிறது.
இவ்வாறு உடைக்கப்பட்ட தடுப்பணைகள் மூலம் அருகில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டதற்கான தடயங்கள் உள்ளது. இவ்வாறு உடைந்த தடுப்பணைகள் பொதுப்பணித்துறை ஆவணங்களில் இருக்கிறதா என்பது கூட தெரியாத நிலையில், பயன்பாட்டில் இல்லாத தடுப்பணைகள் குறித்து அரசு ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ள குளங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 3 நாட்களாக குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
- இந்த நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடக்கிறது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை-டவுன் சாலையில் குளத்தங்கரை பள்ளிவாசல் அருகே கடந்த 3 நாட்களாக குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இந்த நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலை சேதம் அடைவதோடு அந்த வழியாக செல்கின்ற வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் வேகமாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பள்ளத்தில் இறங்கும்போது அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது அசுத்தமான தண்ணீர்பட்டு வருகிறது.
எனவே தண்ணீர் வீணாகாமல் தடுக்க உடனடியாக குடிநீர் குழாய் பழுதை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர்:
தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை பெய்ததின் காரணமாக முல்லை பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரித்து 142 அடி நீர்மட்டம் எட்டியது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து வைகை அணைக்கு இரைச்சல் பாலம், பெரிய குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து மதுரை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாயத்திற்காக பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேலூர் பகுதியில் ஒருபோக பாசனத்திற்காக நேற்று முன்தினம் வந்தடைந்தது.
மேலூர் ஆத்துக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பெரியாறு கால்வாய் மதகு பழுதாகி உடைந்துள்ளது. இதனால் சுந்தரப்பன் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாமல் வீணாகி வெளியேறுகிறது. 2 நாட்களாக அந்த தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் காலி இடத்தில் புகுந்தது. இதனால் அந்த இடமே தீவு போல் காட்சியளிக்கிறது.
பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்