search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water inflow increased"

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 104.99 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.

    நேற்று 20ஆயிரத்து 158 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 20ஆயிரத்து 933 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 13ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 104.47 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 104.99 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam

    மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக இருக்கும் நிலையில், மேலும் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இனிவரும் நாட்களில் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    கடந்த 17-ந்தேதி 10 ஆயிரத்து 42 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 18 ஆயிரத்து 86 கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 24 ஆயிரத்து 764 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 13ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், 700 கனஅடி கால்வாய் பாசனத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.37 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 104.07 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரேநாளில் žஅடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் ஏற்கனவே 104 அடியாக இருக்கும் நிலையில், மேலும் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 21,700 கனஅடியாக குறைந்தாலும் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
    ஒகேனக்கல்:

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு சென்றது. மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பியது. இரண்டரை லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இதனால் 2 மாதங்களுக்கு மேல் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு நீடித்தது. மேலும் சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. வெள்ளத்தில் மெயின் அருவி தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தன. குப்பைகளும் தேங்கி கிடந்தன. குப்பைகளை அகற்றி விட்டு புதிதாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. பெண்கள் குளிக்கும் அருவி அருகே இருந்த சுவர்களும் சேதம் அடைந்து இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் சீரமைத்தனர்.

    82 நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் 29-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடி முதல் 15 ஆயிரம் கனஅடி வரை வந்தது. கடந்த 3 நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதியான கொள்ளேகால் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை 10,700 கனஅடியாக வந்த நீர்வரத்து, நேற்று காலை 27,500 கன அடியாக உயர்ந்தது.

    இதனால் ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் ஆயுத பூஜை விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லுக்கு ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இன்று நீர்வரத்து 21,700 கனஅடியாக குறைந்தது. என்றாலும் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    இதே அளவில் நீர்வரத்து இருந்தால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒகேனக்கல் நீர் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயன்படுவதில்லை. குடிநீருக்கு மட்டுமே பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆறு பள்ளமான பகுதியில் செல்வதாலும் தருமபுரி மாவட்ட விவசாய பகுதிகள் மேடான பகுதியில் அமைந்துள்ளதாலும் இந்த நீரை விவசாயத்திற்கு பயன் படுத்தாத நிலை இருந்து வந்தது.

    தற்போது இந்த நீரை பம்பிங் செய்து குடிநீர் தொட்டிகளில் ஏற்றி குழாய் மூலம் 238 ஏரிகளிலும், அணைகளிலும் நிரப்ப புதிய திட்டத்தை தருமபுரி மாவட்ட நிர்வாகம் மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தருமபுரி மாவட்டம் செழிப்படையும்.

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம் பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 7,400 கன அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 6,200 கன அடியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம் பாளையம் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். #Hogenakkal

    கிருஷ்ணா நதிநீர் வருகையால் பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் காத்திருக்கின்றன. #PoondiLake
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பூண்டி, சோழவரம், புழல் ஆகிய ஏரிகளும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியும் சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்த ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது.

    3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் கடந்த 29-ந் தேதி 19 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது. அந்த ஏரி வறட்சியின் விளிம்பில் காட்சி அளித்தது.

    இந்தநிலையில் தமிழகம்-ஆந்திரா நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 29-ந் தேதி கிருஷ்ணா நதிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 589 கன அடி வீதம் பூண்டி ஏரிக்கு வந்தது.

    தற்போது பூண்டி ஏரியில் 582 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 563 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 230 கன அடி வீதம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இதன் மூலம் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 491 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 307 மில்லியன் கனஅடியும், 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவுடைய சோழவரம் ஏரியில் 17 மில்லியன் கனஅடியும் தண்ணீர் உள்ளன.

    கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்படும் பட்சத்தில், பூண்டி ஏரியின் நீர்மட்டம் மீண்டும் சரிவில் செல்லும் நிலை ஏற்படும். இதனால் புழல் ஏரியின் நீர்மட்டமும் வெகுவாக குறையும் சூழல் ஏற்படும்.

    தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வடகிழக்கு பருவமழை இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வடகிழக்கு பருவமழை தான் கைகொடுக்கிறது.

    வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை காட்டிலும் அதிகமாக பெய்யும் பட்சத்தில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படாது. பருவமழை பொய்த்துவிட்டால், கோடைகாலத்தில் குடிநீருக்காக பரிதவிக்கும் நிலை ஏற்படும்.

    எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளும், நீர்பிடிப்பு பகுதிகளும் காத்திருக்கின்றன. #PoondiLake
    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்காளக நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

    கர்நாடக மாநிலத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டராம்பாளையம் ஆகிய காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மாலை பெய்த பரவலான மழையால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    மழை குறைந்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து 7400 கனஅடியாக குறைந்தது. மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சற்று அதிகரித்து நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    இதனால் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுற்றுலா பயணிகள் மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். கோத்திக்கல் பாறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல் இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா- தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 6,700 கனஅடியாக இருந்தது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்தது.

    மெயின் அருவி அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.  #Hogenakkal #Cauvery
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக பாபநாசம் அணை, குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை முடிந்து வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    ராதாபுரம் கடற்கரை பகுதியிலும், பாளை நகர் பகுதிகளிலும் அதிகளவு மழை பெய்து வருகிறது. இன்று காலை வரை அதிகபட்சமாக நாங்குநேரி பகுதியில் 31 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சிவகிரி பகுதியில் 20 மில்லி மீட்டரும், பாளையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை இல்லாவிட்டாலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. சேர்வலாறு மலைப் பகுதியில் 8 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 1.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 285.30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணைக்கு வரும் 604 கன அடி தண்ணீர் அப்படியே பாபநாசம் கீழ் அணை வழியாக வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 13 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கும் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது. இன்று காலை அணைகளின் நீர்மட்டம் கடனாநதி-63.10, ராமநதி -47.25, கருப்பாநதி-57.66, குண்டாறு-32.38, வடக்கு பச்சையாறு-20, நம்பி யாறு-19.94, கொடு முடியாறு-32.50, அடவிநயினார்-86 அடிகளாக உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வர தொடங்கியுள்ளது. மெயினருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் இதமாக கொட்டுகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நாங்குநேரி-31, சிவகிரி-20, கருப்பாநதி-16, பாளையங்கோட்டை-12.4, அடவிநயினார்-11, சேர்வலாறு-8, செங்கோட்டை-6, சேரன்மகாதேவி-4.4, கடனாநதி-4, தென் காசி-3, சங்கரன் கோவில்-3, ஆய்க்குடி-2.8, நெல்லை-2.7, ராமநதி-2, மணிமுத்தாறு-1.2, குண்டாறு-1.
    கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் முழுஅளவு கொள்ளளவை எட்டியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கர்நாடகா - தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

    நேற்று நீர்வரத்து விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்தது.

    தற்போது தொடர்ந்து கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று விநாடிக்கு 26,000 கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மெயினருவிக்கு செல்லும் நடைபாதையை முழ்கடித்து தண்ணீர் சென்றது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளிலும், காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    நீர்வரத்து அதிகரித்ததால் சீரமைக்கப்பட்ட மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் மெயினருவியில் குளிக்க மாவட்ட சார்பில் 95-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. #Hogenakkal

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Hogenakkal
    மேட்டூர்:

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 18 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 26 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரியும் சென்றனர்.

    ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரத்து 241 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் கூடுதலாக வரும் தண்ணீர் இன்று மாலை மேட்டூருக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2 2 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 104.59 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 104.41 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.  #Hogenakkal
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்து மெயின் அருவியில் போடப்பட்ட மணல் மூட்டையை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் அணைகள் நிரம்பியது. இதனால் கர்நாடகத்தில் இருந்து காவிரி உபரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டனர். இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 லட்சம் கன அடிக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்தது.

    பின்னர் படிப்படியாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,400 அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் சரிந்து 6,500 கன அடியாக குறைந்தது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளிலும், காவிரி ஆற்றில் கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி, நாட்டறம்பாளையம் ஆகிய பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், மெயின் அருவி மற்றும் சினிபால்சில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மெயின் அருவியில் மணல் மூட்டைகள் போட்டு மராமத்து பணிகள் முடிந்த நிலையில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்குவதாக இருந்தது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்து மெயின் அருவியில் போடப்பட்ட மணல் மூட்டையை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனவே தொடர்ச்சியாக மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  #Hogenakkal



    நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    மேலும் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைய தொடங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 126.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

    நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து 594 கனஅடியாக உயர்ந்துள்ளது. வைகை அணை நீர்மட்டம் 58.89 அடியாக உள்ளது. அணைக்கு 1081 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1590 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.29 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 17, தேக்கடி, 11.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. #PeriyarDam

    ×