என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "woman tease"
திருவாரூர்:
திருவாரூர் அருகே பேரளம், நடுகந்தல்குடியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 30). இவர் தனது மகன் அரிகரனை அழைத்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை அரிகரன் கொட்டி விட்டுள்ளான். இதனை கண்ட மஞ்சுளா தனது மகனை திட்டி உள்ளார். அப்போது கடையில் குடிபோதையில் இருந்த கண்ணன் என்பவர் மஞ்சுளா தன்னைத்தான் திட்டியதாக கருதி தகராறு செய்துள்ளார்.
பின்னர் கண்ணன் தனது தம்பி கார்த்தி என்பவருடன் மஞ்சுளா வீட்டுக்கு சென்று அவருடன் தகராறு செய்து அவரது ஆடையை கிழித்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மஞ்சுளா பேரளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசந்தர் வழக்குப்பதிவு செய்து கண்ணன், கார்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தார். இந்த சம்பவம் பேரளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே மாத்தி வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவரது மகன் சூரியகுமார். இவர் பூமிநாதன் என்பவரது இடத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது அவ்வழியே நடந்து சென்ற பூமிநாதனின் அண்ணன் அயோத்தி என்பவரது மகள் சத்தியாவை சூரியகுமார் கிண்டல் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சகோதரர்கள் செல்வகுமார், சக்திவேல் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பூமிநாதன், அயோத்தி, சக்திவேல், செல்வகுமார் மற்றும் தினேஷ் ஆகிய 5 பேர் சூரியகுமார் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த 5 பேரும் சூரிய குமார், குணால் மற்றும் ஜெபமாலா ஆகிய 3 பேரையும் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சூரியகுமாரின் தந்தை விஜயகுமார் பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன், சக்திவேல், ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு சத்தியதாய் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி சுகந்தி (வயது 22). இவரது உறவினர் முரளி (31). கருப்பசாமி கேரளாவில் வேலை செய்து வருகிறார். சுகந்திக்கும் முரளிக்கும் இடையே மரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் அடிக்கடி முரளி சுகந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுகந்தியிடம் முரளி ஆபாசமாக பேசி அவரது ஆடையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சுகந்தி சத்தம் போட்டவாறே வெளியில் ஓடி வந்து விட்டார். மேலும் இது குறித்து சுகந்தி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மானபங்கம் செய்த முரளி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்