search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman worker"

    • நீலகிரி மாவட்டத்தில் 404 ரேஷன் கடைகள் உள்ளன.
    • நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் உள்ளன.

    இந்த கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தநிலையில் ஊட்டி மேல் தலையாட்டு மந்து பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 19-ந் தேதி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சந்தியா, ஊட்டி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர்.

    அப்போது பதிவேடுகளில் இருந்ததை விட, ரேஷன் கடையில் 3,500 கிலோ அரிசி பற்றாக்குறையாக இருந்தது. இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர் அமுதாவிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரிசி கெட்டுப்போய் விட்டதால் கோரிசோலா பகுதியில் கொட்டி விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஊட்டி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் நீலகிரி கூட்டுறவு சங்க இணை பதிவாளர் வாஞ்சிநாதன் ஆய்வு நடத்தி, ரேஷன் கடை விற்பனையாளரான அமுதா என்பவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்தார்.

    இதற்கிடையே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், அமுதா ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    மேற்கு வங்காளம் நடியா மாவட்டம் சோனக்கூர் பகுதியை சேர்ந்தவர் ஒபர்னாசிங் (வயது 36). இவரது முதல் கணவர் திலிப் சிங் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுடைய 3 மகள்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதேபோல் ஜெந்துசிங் (26) என்பவரின் மனைவி 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கும் 3 மகன்கள் உள்ளனர்.

    இதனையடுத்து ஒபர்னாசிங்கும், ஜெந்துசிங்கும் கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வருகின்றனர். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுமேட்டூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 2 பேரும் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஒபர்னாசிங் முதல் கணவரின் மகள்களுக்கு ரூ.15 ஆயிரம் அனுப்ப பணம் கேட்டு உள்ளனர். ஜெந்துசிங் இப்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிலையில் ஒபர்னாசிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் உடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகின்றார்.

    சிவகிரி அருகே மின்வாரிய பெண் ஊழியர் கொலையில் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
    சிவகிரி:

    சிவகிரியை அடுத்த பழமங்கலம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). விவசாயி. இவருக்கும் கொடுமுடி கருத்தி பாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகள் ஜோதிமணி (35) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எல்லப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஜோதிமணி அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார்.

    தமிழ்மணியும், ஜோதிமணியும் ஒரு ஆண்டு ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் தனித்தனியாக வசித்தனர்.

    இந்த நிலையில் ஜோதிமணியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தமிழ்மணி வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் விவாகரத்துக்கு ஜோதிமணி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது தமிழ்மணிக்கு ஆதரவாக தமிழ்மணியின் தாய் பழனியம்மாள் (65) மற்றும் தமிழ்மணி நண்பரான சிவகிரி அருகே உள்ள கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் பேசினர்.

    இதனால் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோர் சேர்ந்து உருட்டு கட்டையால் ஜோதிமணியை தாக்கினர்.

    இதில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். அதன்பின்னர் தமிழ்மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தமிழ் மணி, பழனியம்மாள், லோகநாதன் ஆகியோரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர். இதேபோல சிவகிரி அருகே விளக்கேத்தியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தமிழ் மணி கைதானார்.

    அவரது நண்பரான லோகநாதன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×