search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Tennis Rankings"

    • வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    நியூயார்க்:

    டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ரியாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கோகோ காப் கோப்பை வென்று அசத்தினார்.

    இந்நிலையில், டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

    இதன் ஒற்றையர் தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,416 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது.

    போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (8,370 புள்ளி) இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

    அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (6,530 புள்ளி), இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-வது இடத்திலும் (5,344), சீன வீராங்கனை ஹுயின்வென் ஜெங் 5வது இடத்திலும் (5,340) உள்ளனர்.

    • கடந்த ஆண்டு செப்டம்பரில் 8 வாரங்கள் சபலென்கா முதலிடத்தில் இருந்தார்.
    • ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை.

    நியூயார்க்:

    டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன் ஒற்றையர் தரவரிசையில் கடந்த ஓராண்டாக முதலிடத்தில் இருந்த போலந்தின் இகா ஸ்வியாடெக் (9,665 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சீன ஓபன் மற்றும் வுஹான் ஓபன் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை அவர் தவற விட்டது தரவரிசை புள்ளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,706 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டியில் மகுடம் சூடிய அவர் சீன ஓபனில் அரைஇறுதிவரை முன்னேறி இருந்தார்.

    தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது. அவர் முதலிடத்தில் இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் 8 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார்.

    26 வயதான சபலென்கா தனது எக்ஸ் தளத்தில், 'நம்பர் ஒன் இடம் இந்த முறை எவ்வளவு நாள் என்னிடம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்' என்று பதிவிட்டுள்ளார். அவர்கள் இடையே வெறும் 41 புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளது.

    டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அடுத்த மாதம் 2-ந்தேதி ரியாத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு 1,500 தரவரிசை புள்ளி கிடைக்கும். எனவே இந்த போட்டியின் முடிவு சபலென்கா, ஸ்வியாடெக் ஆகியோரில் யாரை ஆண்டின் இறுதியில் 'நம்பர் ஒன்' அரியணை அலங்கரிக்கும் என்பது தெரிய வரும்.

    அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (5,963 புள்ளி), ஜெசிகா பெகுலா 4-வது இடத்திலும், கஜகஸ்தானின் எலினா ரைபகினா 5-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஜானிக் சினெர் (இத்தாலி), அல்காரஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா), மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் முதல் 5 இடங்களில் தொடருகிறார்கள்.

    ×