என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker arrested"

    • மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோைவ மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 75). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காந்தி சிலை அருகே உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். அங்கு தனது மொபட்டை நிறுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். பணத்தை எடுத்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபட்டை காணவில்லை.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குமாரசாமி அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் அவர் மொபட் திருட்டு போனது குறித்து பொள்ளாச்சி டவுன் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதேபோன்று பொள்ளாச்சி பனிக்கம்பட்டியை சேர்ந்தவர் அம்சவேனி (38). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சுப்பம்மாள் வீதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார்.

    அங்கு தனது மொபட்டை நிறுத்தி ஓட்டலுக்குள் சென்றார். சிறது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது மொட்டை காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடி ெசன்று விட்டனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அம்சவேனி இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி டவுன் கிழக்கு போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    சந்ததேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர் திருப்பூரை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திகுமார் (41) என்பதும், அவர் குமாரசாமி மற்றும் அம்சவேனியின் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சக்திகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
    • மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகை கிராமம் மாட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 53). டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய லாரியில் மணி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 8-ந்தேதி கசுவரெட்டிப்பட்டியில் உள்ள கிணற்றில் மணி பிணமாக மிதந்தார். அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது. தாரமங்கலம் போலீசார், உடல் பாகங்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

    போலீசாரின் அதிரடி விசாரணையில், மணியின் நெருங்கிய நண்பரான தாரமங்கலம் அருகே உள்ள கருக்கப்பட்டி பகுதியை சேர்ந்த செல்லான் என்கிற செல்வராஜ் (வயது 55) என்பவர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம் வருமாறு:-

    நான், மரங்கள் அறுத்து அவற்றை லாரிகளில் அனுப்பும் தொழில் செய்து வருகிறேன். கொலையுண்ட மணியும், நானும் மற்றும் துட்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் நண்பர்கள். நாங்கள் தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய தோட்டத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம். நாங்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.

    வழக்கம்போல் கடந்த 7-ந்தேதி 3 பேரும் சேர்ந்து, பன்றிக்கறி சமைத்து எடுத்துச் சென்று எனது வீட்டில் வைத்து மது குடித்தோம். சிறிது நேரத்தில் சக்திவேல் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் நானும், மணியும் தொடர்ந்து மது குடித்தோம்.

    அப்போது போதையில் எனது மனைவி குறித்து தவறாக பேசினார். அதனை கண்டித்தும் கேட்காமல் ஆபாசமாக பேசினார். இதனால் எனக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த நான் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து மணியின் பின்தலையில் தாக்கினேன். இதனால் மணி சரிந்து விழுந்தார். பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் கொலையை மறைக்க முழு உடலையும் துண்டு துண்டாக வெட்டி முடிவு செய்தேன்.

    கத்தியை கொண்டு அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டினேன். அவற்றை அப்படியே எடுத்துச் சென்று வெளியே வீசினால் பொதுமக்கள் பார்த்து விடுவார்கள் என கருதி உடல் பாகங்களை 3 சாக்குமூட்டைகளில் போட்டு கட்டினேன்.

    பின்னர் அந்த சாக்குமூட்டைகளை எடுத்து சென்று நாங்கள் பணியாற்றி வந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். மீண்டும் வீட்டிக்கு வந்து மது குடித்தேன்.

    இரவு நேரத்தில் பயமாகி விட்டதால், எனது மகள் வீட்டிற்கு சென்று மருமகனிடம் சம்பவத்தை கூறி கதறினேன். மறுநாள் மதியம் கிணற்றில் வீசப்பட்ட உடல் பாகங்கள் மிதக்க தொடங்கியதால் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    • ஜெகதீஸ், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று கூறினார்.
    • மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸை கைது செய்தனர்.

    குளச்சல்:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 31), தொழிலாளி.

    இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு 10 வயது சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். சம்பவத்தன்று காலை 9 மணியளவில் சிறுமியின் பாட்டி மற்றும் தாயார் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றனர். இந்த நேரத்தில் சிறுமி தனது பாட்டி வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஸ், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று கூறினார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அங்கு ஜெகதீஸ் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை பிடித்து குளச்சல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகதீஸை கைது செய்தனர்.

    • நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை அதிகரிக்க தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த தாய் அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் உறவினர் நல்லமருது (வயது 37) என்பவர் வீட்டின் அருகில் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் மாணவி தனியாக இருக்கும்போது நல்லமருது வீட்டுக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளார்.

    நாளுக்குநாள் நல்ல மருதுவின் தொல்லை அதிகரிக்க தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நல்லமருது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நல்லமருதுவை கைது செய்தனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
    • இந்த பணத்தை கார்த்திக், சரவணனிடம் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த வர் சுதாகர் (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது அண்ணன் கார்த்திக்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சரவணன் (40) என்பவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு 3000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இந்த பணத்தை கார்த்திக், சரவணனிடம் திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணன், நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக் வீட்டிற்கு வந்தார். அங்கு நின்ற சுதாகரிடம் உன்னுடைய அண்ணன் எங்கே என்று கேட்டுள்ளனர். அவர் வெளியில் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். உங்கள் அண்ணன் கொடுத்த பணத்தை தரமுடியாது என கூறி சுதாகரை கட்டையால் தாக்கினர். இதில் சுதாகரின் மண்டை உடைந்தது. வலிதாங்க முடியமல் சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த சுதாகரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனார்.

    இதுகுறித்து கொண்ட லாம்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சுதாகரை தாக்கிய கும்பலை தேடி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த சரவணன் போலீ சாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வரு கின்றனர்.

    • சேகர் பலமுறை அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார்.
    • 4 மாத கர்ப்பமான பெண் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் சேகரை கைது செய்தனர்.

    கடலூர்:

    புவனகிரி அருகே உள்ள மருதூர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண் உதவியாக இருந்து வந்துள்ளார். இதை பயன்படுத்திய சேகர் பலமுறை அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை தந்துள்ளார். இதனால் அந்த பெண் 4 மாத கர்ப்பமானார். புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கின் கீழ் சேகரை கைது செய்தனர்.

    • அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது.
    • அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது.

    அவிநாசி:

    அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவா் கரூா் பெரிச்சிபாளையம் கோதூா் சாலையை சோ்ந்த பெருமாள் மகன் ஆறுமுகன் என்ற ராஜா (வயது 42) என்பதும், தற்போது அவிநாசி பட்டறை பகுதியில் இருந்து வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் என்ற ராஜாவை கைது செய்தனா்.

    • சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் உலாவி வந்தார்.
    • இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அடுத்த சேலத்தாம்பட்டி ஏரி பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் உலாவி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்ட னர். அவர் சிவதாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 38) என்பதும், வெள்ளி தொழிலாளியான இவர், குருவி சுடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சேலத்தாம்பட்டி ஏரியில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. அதே சமயம் அவர் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிக்கான உரிமம் எதுவும் அவரிடம் இல்லை. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

    • சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமியை காட்டுப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 25). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அந்த வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது பள்ளி மாணவியை மோட்டார் சைக்கிளில் கட்டாயப்படுத்தி ஏற்றி உள்ளார்.

    பின்னர் சிறுமியை காட்டுப்பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த சிறுமி நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இந்த தகவல் அறிந்ததும் மாணிக்கம் தலைமறைவாகி விட்டார். அவரை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர்மேலழகியான் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் வேல்கனி, சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    இதற்கிடையே மாணிக்கம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் புளியங்குடி அருகே உள்ள நகரம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்றதும் பின்னர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
    • கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற சிறுமி அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் பதறி போன பெற்றோர் சிறுமியை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சிறுமியின் பெற்றோர் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த சிறுமியை கலந்தபனையை சேர்ந்த உறவுக்கார வாலிபரான இசக்கிமுத்து (வயது 24) கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இவர் சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்றதும் பின்னர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் இசக்கிமுத்துவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான இசக்கிமுத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் எதிரே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் ஈரோடு நாடார் மேடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜேந்திரன் (48) என்பதும் இவருக்கு திருமணமாகி பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    ராஜேந்திரன் ஈரோடு ரெயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனுடன் மது அருந்திய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சமையல் தொழிலாளியான கண்ணன் என்கிற கண்ணப்பன் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனும், கண்ணப்பனும் நண்பர்களாக இருந்து வந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மது அருந்திய நிலையில் போதையில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணப்பன் மரக்கட்டையால் ராஜேந்திரனை தாக்கியுள்ளார். இதில் சிறிது நேரத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கண்ணப்பனை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    • செல்வகுமார் ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலக்கதில் ஊராட்சி செயலாளர் சஜீத் பணியில் இருந்துள்ளார். அப்போது சேரம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலாளியான செல்வகுமார் (வயது 50) அங்கு சென்று, ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சேரம்பாடி போலீல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    ×