search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yields"

    • வண்டல் மண்ணை வயலில் இடுவதால், வயல் மண்ணின் பௌதீக மற்றும் ரசாயண தன்மை மாறுகிறது.
    • நுண்ணூட்ட சத்துக்களின் அளவு அதிகரிப்பதால் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

    அம்பை:

    அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    "ஆற்று வண்டல் தேற்றும் பயிரை" என்பது தமிழ் முதுமொழி. ஆற்று வண்டல் மண்ணை வயலில் இடுவதால் மண்ணின் வளம் காக்கப்பட்டு பயிரின் மகசூல் அதிகரிக்கும் என்பது இதன் பொருள்.

    வண்டல் மண்ணை வயலில் இடுவதால், வயல் மண்ணின் பௌதீக மற்றும் ரசாயண தன்மை மாறுகிறது. வண்டல் மற்றும் களி அளவு (வயல் மண்ணில்) அதிகரி க்கிறது. இதனால் வயல் மண்ணில் தண்ணீர் தக்க வைக்கும் திறன் அதிகரி க்கிறது. மண்ணின் அமில காரத் தன்மை மேம்படுத்த ப்படுகிறது. மண்ணில் கரிம அளவு அதிகரிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்களின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் கந்தக சத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிக அளவில் இச்சத்துக்கள் பயிருக்கு கிடைக்க செய்கிறது. மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவும் அதிகரிக்கிறது. மண்ணின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதனால் பயிரின் மகசூல் அதிகரிக்கிறது.அம்பை வட்டாரத்தில் பொதுப்பணிதுறை குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு கண்டறிய ப்பட்ட குளங்களாவன:

    கோடாரங்குளத்தில் இடைமலைக்குளம், மேல அம்பாசமுத்திரத்தில் மேல இடையன்குளம், கீழ இடையன்குளம், ரெங்கை யன் குளம், பல்லாங்குளம், ஏகாம்பர புரத்தில் பெட்டை குளம், உசிலம் குண்டு குளம், திருநாண் குளம், அடைய கருங்குளம் கல்சூந்துகுளம், குமார தீர்த்துகுளம், வாகை குளம் கிராமத்தில் சிறுங்க ன்குளம், வாகைக்குளம், மன்னார்கோவில் கிராமத்தை சேர்ந்த சுமை தாங்கி குளம், சீர்மாதங்குளம், வைராவிகுளம் கிராமத்தில் வைராவிகுளம், கீழ்முகத்தில் குறிப்பான்குளம், அயன்சி ங்கம்பட்டி கிராமத்தில் சிங்கம்பட்டி தெற்குகுளம், சிங்கம்பட்டி வடக்குகுளம், தெற்கு பாப்பான்குளத்தை சார்ந்த கரடிகுளம், உப்பு கரைகுளம், ஆலடிகுளம், அய்யப்ப சேரிகுளம், ஆத்தியா ன்குளம்.மேற்காணும் குளங்களில் வண்டல்மண் எடுத்திட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே இக்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் வண்டல்மண் எடுக்க உடனடியாக தங்கள் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு மனு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    எனவே விவ சாயிகள் தங்கள் வயல் நிலங்களில் வண்டல் மண் இட்டு மண் வளத்தை பெருக்கி அதிக மகசூல் எடுத்திடலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் மற்றும் கஜா புயலின் தாக்கம் காரணமாக இந்த வருடம் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் மலைவாழ் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் அடைந்து விற்பனைக்கு வரும். ஒவ்வொரு வருடமும் அதிக மகசூல் கிடைக்கும் சூழலில் பழங்களின் தரவாரியாக கிலோ 100 ரூபாய் அதிகபட்சமாக 180 ரூபாய் வரை விற்கப்படும்.

    இந்த பிளம்ஸ் பழங்களை கொடைக்கானலுக்கு மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வாங்கிச்செல்வார்கள். கொடைக்கானலில் தற்பொழுது பருவநிலை மாற்றம் மற்றும் கஜா புயலின் தாக்கம் காரணமாகவும் இந்த வருடம் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது.

    மேலும் பிளம்ஸ் பழங்கள் முழு விளைச்சல் அடையாமலும் காய்களாகவே மரத்தில் காட்சியளிக்கிறது. அதன் பின் பழங்களாக விளைச்சல் அடைந்தாலும் பழங்களின் மேற்புறத்தில் நோய் தொற்று தாக்குதலால் பழங்களின் மேல் புள்ளிகள் உருவாகி அழகான தோற்றம் மாறி காட்சியளிக்கிறது.

    இதனால் விவசாயிகளிடம் மொத்தமாக விற்பனைக்கு வாங்கும் வியாபாரிகள் மிக குறைந்த விலையில் வாங்கி சுற்றுலாப்பயணிகளுக்கு ரூ.250 முதல் ரூ.300 ரூபாய்க்கு விற்றுவருவதால் சுற்றுலாப்பயணிகளிடம் பிளம்ஸ் பழம் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளது. பிளம்ஸ் விளைச்சலில் மகசூல் குறைந்துள்ளதால் மலைவாழ் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    பிளம்ஸ் உற்பத்திக்காக செலவிட்ட தொகையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இதனை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளின் நலன் கருதி பாதிக்கப்பட்ட மலைவாழ் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×