search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga camp"

    • பல்வீர் சிங் கையில் தேசிய கொடி ஏந்திய படி நடனம் ஆடினார்.
    • முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்தவர் 73 வயதான பல்வீர் சிங் சப்ரா. இவர் குழு ஒன்றுடன் இணைந்து யோகா பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்தூரில் உள்ள பூட்டி கோட்டி என்ற பகுதியில் பல்வீர் சிங் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ளார்.

    பயிற்சிக்கு இடையில், பல்வீர் சிங் தனது கையில் தேசிய கொடி ஏந்திய படி தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். நடனம் ஆடிக் கொண்டிருந்த போது, பல்வீர் சிங் மேடையிலேயே கீழே விழுந்தார். முதலில், அவர் நடனத்தின் அங்கமாக கீழே விழுந்திருப்பார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.

    கீழே விழுந்த பல்வீர் சிங் சில நிமிடங்கள் ஆகியும் எழாமல் படுத்த நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது குழுவினர் அவரை எழுப்ப முற்பட்டனர். அப்போது அவர் சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர். மருத்துவமனையில் பல்வீர் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பேசிய பல்வீர் சிங் சப்ராவின் மகன் ஜக்ஜீத் சிங், "எனது தந்தை பல ஆண்டு காலமாக தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். அவர் இதுதவிர சமூக சேவை சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்," என்று தெரிவித்தார்.

    உயிரிழந்த பல்வீர் சிங் சப்ராவின் கண்கள் மற்றும் சருமத்தை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    • இலவச யோகா முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.
    • யோகா முகாமில் சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    இலவச யோகா முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.

    சர்வதேச யோகா தினத்தை யொட்டி ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டர், ஸ்வஸ்திக் அறக்கட்டளை மற்றும் சக்ஷம் புதுவை இணைந்து நடத்திய ஒரு வார இலவச யோகா முகாம் ஆத்திச்சூடி சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.

    இந்த யோகா முகாமில் சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் புதுவை சக்ஷம் தலைவர் மற்றும் சுவஸ்திக் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சத்தியவண்ணன், துணைத்தலைவர் சதீஷ்குமார், செயலாளர் நடராஜன், துணை செயலாளர் இளங்கோ, பொருளாளர் திருமுருகன், ஹோலிஸ்டிக் வெல்னஸ் கேர் சென்டரின் இயக்குனர் டாக்டர் நவசக்தி, அரிச்சுவடி மனநல மையத்தின் இயக்குனர் டாக்டர் இளவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் யோகா பயிற்சியாளர் டாக்டர் நவசக்தி யோகா பயிற்சி அளித்தார். 50-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயிற்சி பெற்றனர். இந்த இலவச யோகா முகாமில் வருகிற 21-ந் தேதி வரை காலை 7 மணி முதல் 8 மணி வரை தினமும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்.

    • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் விளையாட்டு அரங்கில் யோகாதினவிழா நடைபெற்றது.
    • இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், 350-க்கும் மேற்பட்ட கோர்ட்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர்

    திண்டுக்கல்:

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யோகாசன சங்கம் சார்பில் விளையாட்டு அரங்கில் யோகாதினவிழா நடைபெற்றது.

    மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜி.சுந்தர்ராஜன் இதனை தொடங்கி வைத்தார். துணை மேயர் ராஜப்பா, விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி, யோகாசனசங்க ஒருங்கிணை்பபாளர் ராஜகோபால், செயலாளர் நித்யாராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறினர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விதவிதமான ஆசனங்களை செய்து காட்டினர்.

    அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.

    உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்த இந்த முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி லதா தலைமையில் நீதிபதிகள் மோகனா, சரவணன், ஜான்வினோ, விஜயகுமார், பாரதிராஜா மற்றும் நடுவர்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பரபரப்பான பணிகளில் ஈடுபடும் கோர்ட்டு ஊழியர்கள் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    • வேடசந்தூரில் நீதிபதிகள், கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர் :

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு ஆஸ்பத்திரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    யோகா பயிற்சியாளர் கமலக்கண்ணன் தலைமையில், சார்பு நீதிபதி சரவணகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வாஞ்சிநாதன், கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி சசிகலா, வேடசந்தூர் வக்கீல்கள் சங்க செயலாளர் தங்கவேல் முனியப்பன், செல்வகுமார், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×