search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl kidnapped"

    ஆண்டிப்பட்டி அருகே திருவிழாவிற்கு சென்ற இளம்பெண் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு உப்புத்துரை பகுதியை சேர்ந்தவர் வெயில்முத்து. இவரது மகள் கருப்பாயி (வயது17). சம்பவத்தன்று இவர் தனது தோழி லட்சுமியுடன் கோவில்பாறையில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

    இது குறித்து அவரது அண்ணன் கார்த்திக் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர்தான் தனது தங்கையை கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் கடத்தப்பட்ட இளம்பெண்ணையும் அவரை கடத்தி சென்ற வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பூரில் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றபோது காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அப்பெண் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஷெரீப் காலனியில் பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் ஒரு கார் வந்தது. மேடான பகுதியில் அந்த கார் மெதுவாக சென்றபோது காரில் இருந்து ஒரு பெண்ணின் குரல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்,என்று அலறல் சத்தம் கேட்டது.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரை நோக்கி ஓடினர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் கார் வேகமாக சென்றது.

    கார் வேகமாக சென்றாலும் பெண்ணின் கைமட்டும் வெளியே காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சைகை காட்டியவாறு சென்றது. சிறிது நேரத்தில் கார் மறைந்தது.

    இதனையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் 100-க்கு போன் செய்து விபரத்தை கூறினர். திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

    மேலும் மாநகரம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு காரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட இளம்பெண் யார்? எதற்காக கடத்தப்பட்டார்? என்பது பெண்ணை மீட்ட பின்னரே தெரியவரும். மாவட்டத்தின் புறநகர் பகுதி மற்றும் ஈரோடு, கோவை ஆகிய போலீஸ் நிலையங்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தியது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே குல்லிசெட்டிபட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் மீனா (வயது16). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மீனா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் கார்த்திக் என்பவர்தான் தனது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் அவரை கடத்திய கார்த்திக்கை தேடி வருகிறார். #tamilnews
    ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண்ணை காரில் கடத்திய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே சட்டையப்பனூர் நாலுபுளிக்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மகள் தீபா (வயது26). கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து 2 குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று நாலுபுளிக்கோட்டை ரெயில்வே கேட் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென 2 வாலிபர்கள் தீபாவை தாக்கி காரில் கடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம்போட்டார். அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். பொதுமக்கள் திரண்டதால் அந்த 2 வாலிபர்களும் தீபாவை கடுமையாக தாக்கி இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதில் காயம் அடைந்த தீபா ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த 2 வாலிபர்களும் திருச்சியை சேர்ந்த ஆனந்தன் மற்றும் சரவணன் என தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×