என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman"

    • இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.
    • பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் கரி வலம்வந்தநல்லூர் அருகே உள்ள கீழவயலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராஜ பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை செய்தார்.

    அதே மில்லில் வேலை செய்து வந்த குவளைக் கண்ணியை சேர்ந்த துரை என்ற ரஞ்சித் ( வயது 25) என்பவர் அந்த பெண்ணிடம், தான் 4 மாதமாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து சுப்புலாபுரத்தில் பணியாளர்களை இறக்கி விட்டபோது அந்த பெண்ணிடம் சென்று துரை நான் உன்னை காதலிப்பதாக கூறுகிறேன். நீ ஒன்றும் பதில் சொல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    தாக்குதல்

    இதுகுறித்து வேன் டிரைவர் குருசாமி மற்றும் கிளீனர் பாலமுருகன் ஆகியோர் துரையை தட்டி கேட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த துரை அருகில் இருந்த கம்பியை எடுத்து அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வேன் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படு கிறது. தொடர்ந்து அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து தரையில் இழுத்து சென்ற தாகவும் கூறப்படு கிறது.

    மேலும் வேனில் இருந்து உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்து அந்த பெண்ணிடம் என்னை காதலிக்க வேண்டும் என சொல்லி தனக்குத்தானே கையை கிழித்து கொண்ட தாகவும் தெரிகிறது.

    இதில் முட்டியில் காயமடைந்த அந்த இளம்பெண் மற்றும் துரை ஆகியோர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டனர். மேலும் தாக்குதலில் காயமடைந்த வேன் டிரைவர் குருசாமி, கிளினர் பாலமுருகன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.

    • இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.
    • கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பர்சானா ருகி (வயது 23). இவருக்கும் திருச்சி வரகநேரி பஜார் மன்சூர் அலி (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மன்சூர் அலி குடும்பத்தினருக்கு 60 பவுன் தங்க நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர் பொருட்களும் மற்றும் 3லட்சத்து 50 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் கணவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு மனைவியை பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் கருவுற்ற பர்சானாருகியை கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பர்சானா ருகி புகார் செய்தார். இதன் பேரில் கணவர் மன்சூர் அலி, மாமியார் புர்கான் பீவி, மாமனார் ஜாபர் அலி கணவரின் சகோதரிகள் நஸ்ரின், ரஹ்மத்து நிஷா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி நாகத்தோப்பு தெருவைச்சேர்ந்தவர் கந்தவேல். கொத்தனார் வேலை செய்துவரும் இவரது 2-வது மகள் உமாமகேஸ்வரி(வயது21). இவர் காரைக்கால் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரியில், பி.ஏ படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். உமா மகேஸ்வ ரிக்கும், திருவாரூ ரில் உள்ள உறவினர் கலிய பெருமாள் மகன் சதீஷ் என்ப வருகும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

    கந்தவேல், உறவினரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சதீஷ்க்கு மூத்தவர்கள் 2 பேர் இருப்பதால் சதீஷ்க்கு திருமணம் செய்துவைக்க யோசித்தனர். பிறகு, கந்தவேல், தனது மூத்த மகன் இதேபோல் காதல் விசயத்தில் இருந்தபோது, பெண் வீட்டார் சம்மதிக்காத காரணத்தால், தற்கொலை செய்துகொண்டார்.

    இருப்பது ஒரே மகள் என கூறியதை அடுத்து, சதீஷ் வீட்டார் கடந்த நவம்பர் 30ந் தேதி கந்தவேல் வீட்டுக்கு சென்று, திருமணம் குறித்து பேசி முடிவெடுத்து, விரைவில் நிச்சயார்த்த தேதி சொல்வதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது.

    மறுநாள் சதீஷ் உமா மகேஸ்வரி ஆகியோர் செல்போனில் பேசியதா கவும், அதன் பிறகு இருவரும் பேசவில்லையென கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3ந் தேதி கந்தவேலின் மனைவி உஷா, விரைவில் நிச்சயதார்த்த தேதி சொல்வதாக கூறினா ர்கள் யாரும் போன் செய்யவில்லை. நீயாவது போன் செய் என மகளிடம் செல்போனை கொடுத்த போது, உமாமகேஸ்வரி போனில் ேபசாமல், போனை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் 1.30 மணி அளவில், சதீஷ் சகோதரர் கந்தவேலுக்கு போன் செய்து, டிசம்பர் 7ந் தேதி நிச்சயதார்த்தம் செய்துகொள்ளலாம் என்ற தகவலை கூறியுள்ளார். அன்று பிற்பகல் 3 மணி அளவில், உமா மகேஸ்வரி, வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, கந்தவேல், நிரவி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி ன்றனர்.

    • கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளியில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
    • அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் முத்துலட்சுமி(22). நர்சிங் படித்து முடித்துள்ள இவர் கம்பத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இவரும் போடி அருகில் உள்ள வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பாண்டியன்(22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சுருளியில் கோடிலிங்கம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு முத்துலட்சுமியுடன் பாண்டியன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் 5 மாத கர்ப்பிணியானார். இதனால் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்துச்செல்லுமாறு கூறினார்.

    ஆனால் பாண்டியன் திருமணத்திற்கு மறுத்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரும் பாண்டியனை மறந்துவிடும்படியும், கருவை கலைத்துவிடும்படியும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.

    அவரது தந்தை ஈஸ்வரன், தாய் ஈஸ்வரி, சித்தி வசந்தி, பெரியம்மா செல்வி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
    • பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு சி. என். பாளையம் சேர்ந்த 20 வயது இளம்பெண் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாயமான இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    • குற்றவாளிகள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்ட கூடாது என்று கூறினார்.
    • ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் காருடன் இழுத்து செல்லப்பட்டு, இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுபற்றி டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியதாவது:

    கும்பலாக ஆண்கள் சிலர் தங்களது காரின் கீழ் இழுத்து சென்றதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.

    குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். குற்றங்களில் அரிதினும் அரிது இந்த சம்பவம்.

    இதுபற்றி துணை நிலை ஆளுநர் சக்சேனாவிடமும் பேசியுள்ளேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளேன். அவர்கள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்டக் கூடாது என்று கூறினேன். ஆளுநரும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் உறுதி அளித்து உள்ளார்.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி புதுக் கோட்டை நடுகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் சுடலை (வயது32). டிரைவர். இவரது மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.
    • சுடலையின் அக்காள் இறந்துவிட்டதால் அவரது குழந்தைகளை சுடலை கவனித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுடலைக்கும், மகாலெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக் கோட்டை நடுகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் சுடலை (வயது32). டிரைவர். இவரது மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.

    கொதிக்கும்வெந்நீர்

    சுடலையின் அக்காள் இறந்துவிட்டதால் அவரது குழந்தைகளை சுடலை கவனித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுடலைக்கும், மகாலெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மகாலெட்சுமி, கொதிக்கும் வெந்நீரை எடுத்து சுடலை மீது ஊற்றினார். இதனால் அலறிதுடித்த சுடலை, மனைவியை தாக்கி கீழே தள்ளினார். இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    • லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.
    • சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லைலா (65). விதவையான இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ஆவார். இவர் தற்போது அதே பகுதியில் உள்ள நூலகத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் லைலா நூலகம் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் மூதாட்டி லைலாவிடம் பேச்சுகொடுத்தார். நூலகம் இருக்கும் இடம் வழியாக செல்வதாகவும், வண்டியில் ஏறும்படியும் கூறினார். இதனால் லைலா இளம் பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் சென்றதும் டிப்-டாப் இளம் பெண், மூதாட்டி லைலாவிடம் மீண்டும் பேச்சு கொடுத்தார். நீங்கள் அணிந்திருக்கும் கம்மல் நன்றாக உள்ளது. எனக்கு கொடுத்தால் அணிந்து கொண்டு போட்டோ எடுத்து திருப்பிக் கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்.

    இதை நம்பிய லைலா தான் அணிந்து இருந்த 2 பவுன் தங்க கம்மல், கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயின் ஆகியவற்றை கழற்றி இளம்பெண்ணிடம் கொடுத்தார்.

    அதனை அணிந்த இளம்பெண் திடீரென மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டார். இதனால் மூதாட்டி லைலா அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற டிப்-டாப் இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம்.
    • போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் வந்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது குடும்பத்தினர் 16 பவுன் நகை, புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சீதனமாக கொடுத்தனர்.

    ஆனால் திருமணமான 2 மாதத்திலேயே எனது கணவர் என்னை தாக்கி அடித்து துரத்தி விட்டார். எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவ ருக்கும் இருக்கும் தொடர்பு தான் இதற்கு காரணம் ஆகும்.

    எனது கணவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

    ஆனால் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர்.

    எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து மீட்டுத் தாருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை அருகே உள்ள மானூரை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மானூரை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது உருவப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுதொடர்பாக மானூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதை யறிந்த அந்த நபர் அந்த படத்தை முகநூலில் இருந்து அழித்துள்ளார். எனினும் போலீசார் அவர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அந்த இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டதும், பின்னர் அந்த படத்தை அழித்ததும் தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவரை பார்த்து விட்டு வேல்செல்வி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • ஐயாகுட்டி, முருகன் ஆகியோர் வேல்செல்வியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர்.

    களக்காடு:

    நெல்லை கருங்குளத்தை சேர்ந்தவர் வானுமாமலை என்ற குரளி வானுமாமலை. இவர் மீது களக்காடு, நாங்குநேரி, மூன்றடைப்பு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அவரை நாங்குநேரி போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்தனர். இதையடுத்து அவரது மனைவி வேல்செல்வி (வயது28) நாங்குநேரி வந்து கணவரை பார்த்து விட்டு, நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    மூன்றடைப்பு பஜாரில் சென்ற போது, செங்குளத்தை சேர்ந்த ஐயாகுட்டி, பாணாங்குளத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் வேல்செல்வியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஆத்திரம் அடைந்த 2 பேரும், காரை ஏற்றி கொலை செய்து விடுவோம் என்று வேல்செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுபற்றி அவர் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக ஐயாகுட்டி, முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நந்தினி தேவி (25). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பால்பாண்டி வெளியே சென்று விட்டார். இதை யடுத்து அருகே உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற நந்தினி தேவி குழந்தைகளை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு பால்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    ×