என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman"

    • கணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு இளம்பெண் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 26). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நந்தினி தேவி (25). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சம்பவத்தன்று குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் பால்பாண்டி வெளியே சென்று விட்டார். இதை யடுத்து அருகே உள்ள தாய் வீட்டிற்குச் சென்ற நந்தினி தேவி குழந்தைகளை அங்கு விட்டு விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு பால்பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி தேவியை தேடி வருகின்றனர்.

    • கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது.
    • ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார்.

    கள்ளக்கறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்( வயது 30) விவசாயி. இவரது மனைவி வேண்டாமலை(24). இவர்களுக்கு 2 ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வேண்டாமலை அவரது 2 -வது ஆண் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வருவதால் அன்று பிரியாணி சமைத்து அனைவருக்கும் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் குடும்ப சூழ்நிலை சரியில்லை என்றும் இந்த வருடம் செய்ய வேண்டாம் என்றும் கூறி மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திக்கின் மனைவி வேண்டாமலை வீட்டில் விவசாய நிலத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ள அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வேண்டாமலையின் தந்தை லோகநாதன் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பானுபிரியாவிற்கும்,தங்கராஜ்க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
    • தனது பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாதமாக பானுபிரியா வசித்து வந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பானுபிரியாவிற்கும் (வயது 23), ஏமன்குளத்தை சேர்ந்த தங்கராஜ்க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து பானுபிரியா கணவர் தங்கராஜை விட்டு பிரிந்து தனது பெண் குழந்தையுடன் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வந்தார். கடந்த 31-ந்தேதி பானுபிரியா தனது குழந்தை மற்றும் தாயார் சமுத்திரகனியுடன் களக்காட்டிற்கு வந்தார். பின்னர் தாயாரிடம் பேன்சி பொருட்கள் வாங்கி வருவதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார். ஆனால் அதன் பின் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சமுத்திரகனி பல்வேறு இடங்களில் தேடியும் பானுபிரியா மற்றும் அவரது குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பானுபிரியாவை தேடி வருகின்றனர்.

    • சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
    • சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் கீழபுத்தரகம் பகுதியைச்சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி சுடர் (வயது30). இவர்களுக்கு சுஷ்மிதா (3), சுபிஷா (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றதாக சுகுமாரின் தாய் பானு, சுகுமாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். முன்னதாக, உறவினர் திவாகர் என்பவர் சுடரிடம் தனியாக பேசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளர். தொடந்து, சுகுமார் காரைக்கால் திரும்பி, காரைக்கால் மாவட்டம் முழுவதும் தேடியும் சுடர் மற்றும் குழந்தைகள் இருப்பிடம் தெரியாததால், நெடுங்காடு போலீசில் சுகுமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுடர் மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.

    • பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    • காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த இருதய லட்சுமி என்பவர் மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர் சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.

    இது குறித்து அமைச்சர் தெரிவித்ததாவது, திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ராஜேஸ்வரி தம்பதியரின் மகள்இருதய லட்சுமி(வயது 28) மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டு உடல் செயல் இழந்து 8ஆண்டுகளாக பேசவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் இருந்து வந்த நிலையில் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அவரது உடல் நலம் வெகு விரைவில் பூரண குணமடைந்து அவரது லட்சியமான விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவு நிறைவேற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அப்போது மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் மற்றும் சங்கத்தலைவர்சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • இளம்பெண்ணுக்கு அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கு அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் கார ணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    மேலும் இளம்பெண்ணை அவரது கணவர் வேலையை விட்டும் நிறுத்தினார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று இருந்தார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
    • குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் மாட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன் லட்சுமி (வயது 25). இவருக்கும், கணவர் முருகானந்தத்திற்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் சண்டையும் ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பொன் லட்சுமி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் தனது 4-வயது மகள் கவிபாரதியுடன் மாயமானார். இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

    • கிளாடிக்கும், பொன்னம்மாளுக்கும் அடிக்கடி தகராறு வருவது வழக்கம்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன்னம்மாள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகரை சேர்ந்தவர் கிளாடி. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 38). இவர்களுக்கு சுமார் 13 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கிளாடிக்கும், பொன்னம்மாளுக்கும் அடிக்கடி தகராறு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலையில் மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    சிறிது நேரத்தில் கிளாடி அங்கிருந்து கறிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பொன்னம்மாள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் பொன்னமாளை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் பொன்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி என்ற மனைவி உள்ளார்.
    • அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நளினி (வயது 37) என்ற மனைவி உள்ளார். அய்யாசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவரை, நளினி கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் நளினிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தனது கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அய்யாச்சாமி, நளினியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியாக இருந்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த நளினி இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நளினியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்தியா அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சந்தியா (வயது 17).இவர் அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி என்பருக்கு சொந்தமான சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.

    • கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர்.
    • கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்துகரை அருகில் பயன்பாடு இல்லாத கிணறு உள்ளது.

    அந்த கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோர் விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து கடையநல்லூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் வீசப்பட்ட மூட்டையை வெளியில் எடுத்து கொண்டு வந்தனர். அதனை பிரித்து பார்த்த போது அதில் இருப்பது இளம் பெண்ணின் சடலம் என தெரியவந்தது. அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அனுமந்தபுரம் கிராமத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி 7ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது37).

    இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வினோதா (28).

    இவர்களுக்கு ஸ்ரீவந்த் (5) என்ற மகனும், யாஷிகா (3) என்ற மகளும் உள்ளனர்.

    நேற்றுமுன்தினம் வினோதா அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோதா உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வினோதாவின் தாய் செண்பகம் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வினோதாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனாமணி விசாரணை நடத்தி வருகிறார்.

    ×