search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth bottle attack"

    செய்யாறு அருகே முன்விரோத தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்யாறு:

    செய்யாறு காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30).வெங்கட்ராயன் பேட்டையை சேர்ந்தவர் குமார் (40). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.

    இந்நிலையில் ஆறுமுகம் நேற்று மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக நடந்து சென்றார்.அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த குமார் ஆறுமுகத்திடம் வீண் தகராறு செய்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி பின்னர் கைகலப்பாக மாறியது இதில் ஆத்திரமடைந்த குமார் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து ஆறுமுகத்தை குத்தினார். இதனை கண்ட ஆறுமுகத்தின் சகோதரர்கள் நேதாஜி மற்றும் ரஜினிகாந்த் தட்டி கேட்டனர். அவர்களையும் குமார் பீர்பாட்டிலால் குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த 3 பேரும் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கூடலூரில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்ட ஹரிஹரன் (வயது 20). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் ஸ்டாலினுடன் அரசமர பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது பூச்சி தேவர் சந்து பகுதியைச் சேர்ந்த விஜய் (21) அங்கு போதையில் வந்தார். அவர் ஸ்டாலினிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

    இதனை ஹரிஹரன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அவரது வயிற்றில் குத்தினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

    படுகாயமடைந்த ஹரிஹரன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஜயை கைது செய்தனர்.

    சேலம் வீராணம் அருகே வாலிபரை பாட்டிலால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் வீராணம் அருகே உள்ள எம்.பாலப்பட்டி மைதானத்தில் கன்னங்குறிச்சியை சேர்ந்த குணா (வயது 25) கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இவருக்கும் எம்.பாலப்பட்டியை சேர்ந்த அஜித்குமார்(22) என்பவருக்கு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குணா கீழே கிடந்த உடைந்த பாட்டிலை எடுத்து அஜித்குமாரை குதித்தினார்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குணாவை கைது செய்தனர். இவர் வெள்ளிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.

    வில்லியனூரில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனுர் கோட்டைமேட்டை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது31) இவர் நேற்று மாலை அங்குள்ள தனியார் மதுக்கடையில் மதுகுடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏற்கனவே மதுகுடித்து கொண்டிருந்த வில்லியனூர் நடராஜன் நகரை சேர்ந்த அய்யனார் (24), சுபாஷ் (21) மற்றும் முத்துபிள்ளை பாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்த அன்பரசன் (26) ஆகியோருக்கும் ஞானசேகருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அய்யனார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஞானசேகரை சரமாரியாக தாக்கினர். பீர்பாட்டிலாலும் குத்தினர். இதில் ஞானசேகருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவர் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்குபதிவு செய்து அய்யனார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    ×