search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth died"

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இன்று அதிகாலை சுற்றுலா வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு அரசு பஸ் ஒன்று திருவண்ணாமலை புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் அய்யப்பன் (வயது 36) ஓட்டி சென்றார்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சலவாதி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புறவழி சாலைக்கு திரும்பியபோது கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை திரும்பி கொண்டிருந்த வேன் மீது திடீரென்று மோதியது.

    இந்த விபத்தில் பஸ் நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது. உள்ளே இருந்த பயணிகள் கூச்சல்போட்டு அலறினர். அதேபோல் விபத்தில் சுற்றுலா வேனும் பலத்த சேதம் அடைந்தது. இதில் சுற்றுலாவேனில் பயணம் செய்த சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜிதேந்திரகுமார் (39) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அதுபோல் சுற்றுலா வேனில் பயணம் செய்த 13 பேரும், பஸ்சில் பயணம் செய்த 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் ரோசனை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு காயம் அடைந்த 19 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிலர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கும், சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பஸ்சும், சுற்றுலா வேனும் மோதியதால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உடனே போலீசார் விபத்தில் சிக்கிய பஸ்சையும், வேனையும் அப்புறப்படுத்தினர். அதன்பின்பு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

    ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேர் விபத்தில் சிக்கினர். இதில் வாலிபர் பலியானார்.

    பேரையூர்:

    மதுரை செக்கானூரணி அருகே உள்ள பேங்கல் பட்டியைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படி மகன் அழகுபாண்டி (வயது 18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ணன் (18), முருகன் மகன் விமல் (18) ஆகிய 3 பேர் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    செக்கானூரணி அருகே உள்ள கிண்ணிமங்கலம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த பேது ரோட்டோரத்தில் இருந்த பெயர் பலகையின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களின் நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே அழகு பாண்டி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் திருமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 80). இவர் நேற்று மாலை கடைக்குச் செல்வதற்காக வீட்டின் அருகே உள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் ரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்த போது அவரை கொல்ல வந்ததாக கூறி வாலிபர் ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த போது என்கவுண்டர்கள் நடந்தன. குறிப்பாக 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை 5 ஆண்டு இடைவெளியில் 17 என்கவுண்டர்கள் நடந்தன.

    இவை அனைத்தும் போலி என்கவுண்டர்கள் என்றும் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எச்.எஸ்.பெடி தலைமையில் ஒரு நபர் கமி‌ஷன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    அவர் தனது 229 பக்க விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். மூடி சீல் வைக்கப்பட்ட அறிக்கை சுப்ரீம் கோர்ட்டின் தரை தளத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் வைக்கப்பட்டு இருந்தன.

    இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான டிவி‌ஷன் பெஞ்ச் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் அறிக்கையை வெளியிடலாம் என்று அனுமதி அளித்து உள்ளார்.

    கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின் அக்சர்தாம் கோவிலுக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரிக்‌ஷா தொழிலாளியின் மகனான சமீர்கான் என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அவர் பாகிஸ்தானின் கெய்ஷ்- இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் அப்போது குஜராத் முதல்- மந்திரியாக இருந்த மோடியை கொலை செய்யும் திட்டத்துடன் வந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    ஆனால் நீதிபதி எச்.எஸ். பெடி விசாரணை அறிக்கையில் இது போலி என் கவுண்டர் என்றும், அவர் போலீஸ் லாக்கப்பில் இறந்து இருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த போலி என்கவுண்டர் தொடர்பாக 3 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், போலி என்கவுண்டர்களில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், ரூ.14 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளார்.
    சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் கனபாரத் ராம் (வயது29), கூலித்தொழிலாளி.

    இவர் கரிவலம் வந்தநல்லூர் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டார். பின்னர் சாலையில் திரும்பினார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.

    இதில் கனபாரத் ராம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கரிவலம்வந்த நல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த சுரண்டையை சேர்ந்த பால முருகன் என்பவரை கைது செய்தனர்.

    பலியான கனபாரத் ராமுக்கு கடந்த மாதம் தான் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    அரக்கோணம் அருகே பைக் விபத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    திருத்தணியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 43). அதேபகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (40). இவர்கள் இருவரும் நேற்றிரவு பைக்கில் அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திருத்தணி சாலை எம்.ஆர்.எப். கம்பெனி அருகே வந்த போது எதிரே சென்ற மற்றோரு பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கிவீசபட்டு பலத்த காயமடைந்தனர்.

    இதனை கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஜெகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடிவேரி அணையில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    கோபி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் லூர்து ஆண்ட்ரூஸ்.

    லூர்து ஆண்ட்ரூஸ் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா சென்றனர். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையை பார்க்க வந்தனர்.

    அணையில் தண்ணீர் கொட்டியபடி பாய்ந்து சென்று கொண்டிருந்ததை கண்ட அவர்களுக்கு அதில் குளிக்க ஆர்வம் ஏற்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது லூர்து ஆண்ட்ரூஸ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

    அவரது நண்பர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

    இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவரது உடலை பார்த்து அழுதபடி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் வாலிபர்-பெண் பரிதாபமாக இறந்தனர்.

    மதுரை:

    மதுரை ஆத்திக்குளம் காவேரி தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 27). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கே.கே. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    வாக்கர்ஸ் பார்க் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியது. இதில் கேசவன் கீழே விழந்தார். அப்போது அந்த வழியாக வந்த பஸ் அவர் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கிய அவர் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம் காமராஜர் புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 50). இவர் மதுரை-மேலூர் ரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்தார்.

    அவர் ரோட்டை கடக்க முயன்றபோது வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி அங்குள்ள தனியார் ஆஸ்பததிரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இரண்டு விபத்துக்கள் குறித்தும் கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொடுமுடி அருகே நடந்து சென்ற வாலிபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே பாசூர் அடுத்த வேங்கியாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த வரதன். இவரது மகன் வீராசாமி (28). இவருக்கு இன்னும் திருமண மாகவில்லை. கூலி வேலை செய்து வருகிறார்.

    வீராசாமி பாசூரில் இருந்து சோளங்கா பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்பு லன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வீராசாமியை பரிசோதணை செய்த டாக்டர்கள் வீராசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து மலையம் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய வித்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    முத்துப்பேட்டை

    நாகை மாவட்டம், காடஞ்சேத்தி பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 35). இவர் நேற்று பட்டுக்கோட்டையில் இருந்து  காடஞ்சேத்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  அவர் முத்துப்பேட்டை அருகே சென்று கொண்டிருக்கும் போது வேளாங்கண்ணியில் இருந்து வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா பலத்த காயம் அடைந்தார். 

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளையராஜா பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கருங்கல்:

    கருங்கல்லை அடுத்த மாதவபுரம் சடையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் பீட்டர் (வயது 18). இவரும், இவரது நண்பர் அய்யன் விளை பகுதியை சேர்ந்த லிபின் (21) ஆகியோர் நேற்று மோட்டார் சைக்கிளில் தொலையாவட்டம் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொலையா வட்டம் முந்திரி ஆலை அருகே வரும்போது எதிரே அஞ்சுகிராமத்தில் இருந்து தொலையா வட்டத்திற்கு   காரில் ராஜாவூர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் கிளை மண்ட் (30) என்பவர் வந்து கொண்டு இருந்தார். 

    திடீரென்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஜாண் பீட்டர் பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி எதிரே வந்த கார் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு ஜாண் பீட்டர், மோட்டார் சைக்கிள் பின்னால் இருந்த லிபின் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு கருங்கல் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லிபின் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இது குறித்து ஜார்ஜ்கிளை மண்ட் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முசிறியில் நடந்து சென்ற வாலிபர் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி மேலசாலியர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 35). இவர் நேற்று இரவு முசிறி பழைய பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது திருச்சியை நோக்கி காய்கறி ஏற்றி வந்த லாரி எதிர்பாரதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. பின்னர் லாரி நிற்காமல் சென்று விட்டது. 

    உடனே அக்கம் பக்கத்தினர் லட்சுமணணை மீட்டு சிகிச்சைக் காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டை அருகே உள்ள மகிளிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 34). இவர் நேற்று மகிளிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. 

    இதில் சந்திரசேகரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×