என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Youths dead"
- ஆலங்காயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
- காவாபட்டறை அருகே பஸ் வரும்போது எதிரே பைக்கில் வந்த அருள்குமார், பிரவீன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த முல்லை நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ் என்பவரது மகன் பிரவீன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்குமார் (24). இருவரும் நண்பர்கள். திருப்பத்தூரில் யோகா பயிற்சி பெற்று வந்தனர்.
வாலிபர்கள் 2 பேரும் தினமும் பைக்கில் யோகா பயிற்சி மையத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல யோகா பயிற்சி மையத்துக்கு பிரவீனும், அருள்குமாரும் பைக்கில் இன்று காலை சென்று கொண்டிருந்தனர்.
ஆலங்காயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
காவாபட்டறை அருகே பஸ் வரும்போது எதிரே பைக்கில் வந்த அருள்குமார், பிரவீன் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள்குமார், பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் போக்குவரத்தை சீர் செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடியில் இருந்து கீழவைப்பார் செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோஜ் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிகேசவன் (வயது19). இவரது நண்பர் ஈரோடு வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (21).
தசரா விழாவிற்கு வந்திருந்த மனோஜ்குமார், ஜோதிகேசவன் வீட்டில் தங்கியிருந்தார். நண்பர்கள் இருவரும் சம்பவத்தன்று ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் குளத்தூர் சென்று விட்டு பின்னர் இரவில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பி உள்ளனர்.
அவர்கள் வேப்பலோடை அருகில் வரும்போது தூத்துக்குடியில் இருந்து கீழவைப்பார் செல்லும் அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோஜ் குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு தருவைகுளம் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த ஜோதிகேசவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான புதூர்பாண்டியாபுரம் சேர்ந்த மதுரைவீரன் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா நேரில் சென்று பார்வையிட்டார்.
- 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ளது பீச்சி அணை. இந்த அணை திருச்சூர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பாசனம் மற்றும் திருச்சூர் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணையில் பயணம் செய்ய பைபர் படகுகள் உள்ளன.
இந்நிலையில் சம்பவத்தன்று வாணியம்பாறை அருகே உள்ள கொட்டிச்சேரிக்குடி பகுதியை சேர்ந்த பால்சன் மகன் விபின்(26), ஹனீபா என்பவரின் மகன் நவுசாத்(29), ஆறுமுகன் என்பவரின் மகன் அஜித்(21), கொள்ளிக்காடு மணியங்கிணறு காலனியை சேர்ந்த சிவபிரசாத்(23) ஆகிய 3 பேரும் பீச்சி அணைக்கு சென்றனர்.
அவர்கள் அங்கிருந்த பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களது படகு அணையில் திடீரென கவிழ்ந்தது. படகில் இருந்த 4 பேரும் அணைக்குள் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் விபின், நவுசாத், அஜத் ஆகிய 3 பேரும் அணையில் மூழ்கினர்.
சிவபிரசாத் மட்டும் நீந்தி கரைக்கு வந்துவிட்டார். படகு கவிழ்ந்த சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு பீச்சி போலீசாரும், திருச்சூர் தீயணைப்பு வீரர்களும் சென்றனர். அணையில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்பு இரவு ஆகி விட்டதால் மறுநாள் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. மீட்பு பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் அணையில் மூழ்கிய 3 வாலிபர்களும் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டனர். 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
அணையில் படகு கவிழ்ந்து 3 வாலிபர்கள் இறந்த சம்பவம் திருச்சூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள்.
- விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி:
புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 30), பிரகாஷ் (31). இருவரும் நண்பர்கள். சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்தனர். இவர்களுடன் பணிபுரிபவருக்கு இன்று காலை செஞ்சியை அடுத்த பாக்கம் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க நேற்று நள்ளிரவு பாஸ்கரும், பிரகாசும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாஸ்கர், பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் இறங்கியதால் காரில் பயணம் செய்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சி போலீசார், பலியான 2 வாலிபர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
- விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24), கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21). இவர்கள் 2 பேரும் நேற்று முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கறி விருந்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் கறி விருந்தை முடித்துக் கொண்டு அவர்கள் 2 பேரும் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அவர்கள் ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். பிரபாகரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி தெரியவந்ததும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார்.
இதையடுத்து விபத்தில் பலியான சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர்.
- விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர். இவரது மகன் புவனேஷ் (வயது 23). இவரது நண்பர் பூந்தோட்ட பகுதியைச் சேர்ந்த மகபுல் அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் சையத் முபாரக்.
புவனேஷ், முபாரக் ஆகிய இருவரும் நண்பர்கள். 2 பேரும் தனது மோட்டார் சைக்கிளில் எறையனூரில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு வீடு திரும்பினர். அப்போது திண்டிவனம் இ.பி அலுவலகம் அருகே வரும்போது நல்லாளம் பகுதியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த டிப்பர் லாரி இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புவனேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முபாரக் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனையடுத்து புதுவை ஜிப்மருக்கு செல்லும் வழியிலேயே முபாரக் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- கோவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் மகன் பாலமுருகன் (வயது 23) சென்னை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.
அரியலூர் மாவட்டம் சுண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார் (24) நெய்வாசலில் தனது பாட்டி வீட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பாலமுருகன், சதீஷ்குமார் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நெய்வாசல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து பாலமுருகன் வந்தார். இன்று காலை சதீஷ்குமார், பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் நெய்வாசலில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டிசென்றார்.
ஆவணங்குடி-பட்டூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது மோட்டார் சைக்கிளின் முன்னாள் சென்ற தனியார் கல்லூரி பஸ்சை முந்தி செல்ல முற்பட்டனர். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் எதிரே வந்த டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார், பாலமுருகன் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாலமுருகன் இறந்தார். இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- பெங்களூரில் இருந்து வந்த நண்பர்களும் ஆல்வின் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ஆல்வின் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இரணியல்:
திருவட்டார் அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் (வயது 23). இவர் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
ஆல்வின் பெற்றோர் புதிதாக வீடு கட்டியுள்ளனர். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் இந்த வாரம் நடக்க இருந்தது.
இதையடுத்து ஆல்வின் விடுமுறையில் ஊருக்கு வந்தார். மேலும் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடன் பெங்களூரில் வேலை பார்க்கும் நண்பர்களை அழைத்து இருந்தார். அவரது நண்பர்கள் நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு ரெயில் மூலமாக நாகர்கோவில் வந்தனர். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக ஆல்வின், சிதறலில் இருந்து நாகர்கோவிலுக்கு வர புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் ஆல்வின், அவரது இன்னொரு நண்பர் ராகுல் (23) இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மற்ற 2 நண்பர்கள் விபின் சேவியர் (26), ஜெனிஸ் (26) இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.
வில்லிக்குறி அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள்கள் லேசாக உரசியது. இதில் ஆல்வின், ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தது.
அப்போது நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி டெம்போ ஆல்வின், ராகுல் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபின், சேவியர் ஜெனிஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 2 பேர் பலியானது குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ஆல்வின், ராகுல் இருவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களது குடும்பத்தினர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பெங்களூரில் இருந்து வந்த நண்பர்களும் ஆல்வின் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கிரகப்பிரவேசம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் சிக்கி ஆல்வின் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பலியான ஆல்வின், ராகுல் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு கிருஷ்ணா நதிக்கரையில் மது அருந்தினர்.
- மதுபோதையில் கிருஷ்ணா நதியில் இறங்கி 3 பேரும் குளித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் காலேசா அலியாஸ் (வயது 30). இவர் விஜயவாடாவில் ஓட்டல் நடத்தி வந்தார்.
இவரது நண்பர்கள் அஜித் சிங் நகரை சேர்ந்த ரஹிம் பாஷா (30), கஸ்தூரிபா பேட்டையை சேர்ந்த கிரண் (37). காலேசா அலியாஸ் புதிய கார் ஒன்றை வாங்கினார்.
புதிய கார் வாங்கியதற்கு பார்ட்டி கொடுப்பதாக கூறி தனது நண்பர்களை காரில் அழைத்துக் கொண்டு பெனமலூர் மாவட்டம், சோட வரத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு கிருஷ்ணா நதிக்கரையில் மது அருந்தினர். பின்னர் மது போதையில் கிருஷ்ணா நதியில் இறங்கி 3 பேரும் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் 3 பேரின் உடல்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து தண்ணீரில் மூழ்கிய காலேசா அலியாஸ், ரஹீம் பாஷா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். கிரண் உடலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உடுமலை பழனி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே உடுமலையிலிருந்து பழனி நோக்கி பாலச்சந்திரன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
- எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த மடத்துக்குளம் கணியூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (32). கூலித் தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் செல்லபாண்டியன் (30) என்பவருடன் தனது வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
உடுமலை பழனி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே உடுமலையிலிருந்து பழனி நோக்கி பாலச்சந்திரன் (32) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிர் இழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்