என் மலர்
நீங்கள் தேடியது "கேள்வி"
- இந்த விளக்கத்தைத் பார்த்த ஆசிரியர் மாணவனுக்கு முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.
- செல் போன்களின் பயன்கள் என்ன? என்பது கேள்வி
மனிதர்கள் மீது ஏகபோகமாக ஆதிக்கம் செய்யும் மொபைல் போன்கள் உணவு நீருக்கு அடுத்தபடியாக அத்தியாவசிய தேவையாகவே மாறியுள்ளது. அத்தகு மொபைல் போன்களின் பயன்கள் குறித்து பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவன் ஒருவன் அளித்துள்ள விளக்கம் இணையதில் வைரலாகி வருகிறது. இந்த விளக்கத்தைத் பார்த்த ஆசிரியர் மாணவனுக்கு முழு மதிப்பெண்களையும் வழங்கி பாராட்டியுள்ளார்.
கேள்வி:
செல் போன்களின் பயன்கள் என்ன?
பதில்:
போன் இல்லையென்றால் மனநிலை [MOOD] நன்றாக இருக்காது, MOOD இல்லையென்றால் படிக்கத் தோன்றாது, படிக்காமல் வேலை கிடைக்காது, வேலை இல்லையென்றால் பணம் இருக்காது, பணம் இல்லையென்றால் சாப்பாடு கிடையாது, சாப்பிடாமல் உடல் எடை குறையும், அதனால் உருவத்தில் மாற்றம் ஏற்படும். உருவம் நன்றாக இல்லையென்றால் யாரும் காதலிக்க மாட்டார்கள், யாரும் விரும்பவில்லையென்றால் கல்யாணம் நடக்காது, கல்யாணம் நடக்கவில்லை என்றால் தனிமையாக உணர்வோம், தனிமையாக இருப்பதால் கவலை ஏற்படும், கவலை மன அழுத்தமாக மாறும், மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதித்து இறுதியும் மரணம் ஏற்படும்.
- இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.
- நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும்
பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி இந்தியாவில் மீண்டும் ஆட்சியமைத்துள்ள 3 வது முறையாக இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 71 அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு இன்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியுள்ளது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் இன்று பதவிப்பிரமாணம் நடக்கிறது. முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற உறுப்பினராக உறுதியேற்றுக்கொண்டார். மேலும் புதிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ள ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தி பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னாள் திரண்டு அணிவகுத்தபடி உள்ளே சென்றனர்.
நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் நீட் முறைகேடு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்தியா கூட்டணி என்.டி.ஏ அரசை நோக்கி குரல் உயர்த்தும் என்று எதிராபகப்படுகிறது. நீட் முறைகேடு தவிர, அதிகரிக்கும் விலைவாசி, உணவு பற்றாக்குறை, வெப்ப அலையால் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள், நீட் PG தேர்வு ரத்து, UGC NET தேர்வு விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி என்.டிஏ அரசை வலியுறுத்தும் என்று தெரிகிறது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சென்றமுறையை விட அதிக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இன்று [ஜூன் 24] தொடங்கியுள்ள 18 வது பாராளுன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
- தலித்துகள் விஷ சாராயத்தால் பலியான போதிலும் ராகுல் இதுகுறித்து பேசாதது ஏன்?
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சமபத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக , நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
நாளை அதிமுக சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். தமிழக பாஜக சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன், காங்கிரஸ் இந்த சம்பவத்துக்கு எதிராக குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது அதிர்ச்சியளிக்கிறது.
லைசன்சுடன் மாநில அரசால் டாஸ்மாக் நடத்தப்பட்டு வரும் நிலையில் காலக்குறிச்சி ஊருக்கு நடுவில் கெமிக்கல் விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? உயிரிழந்தவர்களில் 40 பேர் தலித்துகள் ஆவர், தலித்துகள் விஷ சாராயத்தால் பலியான போதிலும் ராகுல் இதுகுறித்து பேசாதது ஏன்? இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
- டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை போட்டிகளுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு மாற்றாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தன்னை சிறந்த பயிற்சியாளராக நிரூபித்துள்ளார் காம்பீர். கடந்த 2018 இல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களிலின் ஆட்டம் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பவராக உள்ளார்.
இந்நிலையில்தான் அணியின் வீரராக இருந்த காலத்தில் எம்.எஸ்.டோனி, அணில் கும்ப்ளே ஆகியோரின் கேப்டன்சியில் விளையாடியுள்ள்ள கவுதம் காம்பீரிடம் யாருடைய கேப்டன்சி சிறந்தது என்று சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த காம்பீர், இது மிகவும் சர்ச்சைக்குரிய கேள்வி, இதற்கு பதிலளித்து நான் தலைப்புச் செய்தியில் வர விரும்பவில்லை. ஒவ்வொருவரிடமும் அவரவருக்கேயான பலங்களும் பலவீனங்களும் இருக்கும். நான் முதல் முதலாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டன்சியில் விளையாடினேன்.
எனது முதல் ஓடிஐ போட்டி சவுரவ் கங்குலி கேப்டன்சியின்கீழ் அமைந்தது. அணில் கும்ப்ளே கேப்ரான்சியின்கீழ் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன். அவருடன் விளையாடுவதை நான் விரும்பினேன். அவர் அணியை வழிநடத்தும் பக்குவம் எனக்கு பிடிக்கும் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்துவிட்டு நழுவியுள்ளார்.
- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2 வீடியோ கேமிங் சென்டர்கள் தீப்பிடித்து எரித்ததில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த கேமிங் சென்டர்கள் எந்தவித பாதுகாப்பு சான்றிதழும் பெறாமல் 2 வ வருடங்களாக இயங்கிவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரில் இதுபோன்று இயங்கும் 34 கேமிங் செகன்டர் பாதுகாப்பு சான்றிதழ் இல்லாமல் இயங்கி வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தும் குஜராத் உயர்நீதிமன்றம், மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று (மே 27) நடந்த விசாரணையின்போது, கேமிங் சென்டரில் சில காலங்களுக்கு முன்பு ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்திய புகைப்படங்களை நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்தது.
புகைப்படங்களை வாங்கி பார்த்த நீதிபதி, "யார் இந்த அதிகாரிகள்? அவர்கள் அங்கு விளையாட சென்றார்களா? என கேள்வியெழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், விபத்துக்குள்ளான இந்த கேமிங் சென்டர்கள் எந்த அனுமதியும் இன்றி 2 வருடமாக இயங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாநில அரசும் இவ்வளவு காலமும் தூங்கிக்கொண்டிருந்ததா என கேள்வியெழுப்பிய அவர், இனியும் இந்த அரசை நம்பப்போவதில்லை என்று காட்டமாக தெரிவித்தார். அரசு இயந்திரங்கள் வேலை செய்யாதது காரணமாகவே மக்கள் இறக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
- தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
- அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது.
ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பிரதமருக்கு நினைவில் உள்ளதா என்று ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பி உள்ளார்.
நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இந்த முறை தனித்தனியாக போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச மோதல் போக்கு நிலவுகிறது. இந்தக் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்
இந்நிலையில் நேற்று ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், "ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும், தலைநகரங்களையும் காகித குறிப்பு ஏதுமின்றி சொல்ல முடியுமா" என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு சவால் விடுத்தார்.
நினைவுத்திறன் தொடர்பாக சவால் விடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடனடியாக தனது எக்ஸ் தள பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடி அவர்களே, "தாங்கள் ஒடிசா மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா?" "ஜூன் 10ம் தேதி எதுவும் நடக்காது. அடுத்த 10 ஆண்டுகளில் கூட ஒடிசாவில் பாஜக வெற்றி பெற முடியாது. ஜகந்நாதரின் ஆசியுடனும், ஒடிசா மக்களின் அன்புடனும் பிஜேடி ஆட்சி அமைக்கும் என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
Wow! Odhisa CM @Naveen_Odisha released a 3 minute video where he attacks PM Modi in first 150 secs. But Pro-BJP Propaganda News Agency run by @smitaprakash has removed that the crucial part (first 150 secs) and have shared only the last 30 sec video. Hope all the Opposition… https://t.co/5yuqQNgMb8 pic.twitter.com/fqSrIInwdz
— Mohammed Zubair (@zoo_bear) May 11, 2024
- சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை எப்படி மீட்க போகிறார்கள்? என பசும்பொன் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பற்று கொண்ட ஒவ் வொரு தொண்டனும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத் தலாம், அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டலாம்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக் கறிஞர் பசும்பொன் பாண் டியன் வெளியிட்டுள்ள அறிக் யில் கூறியிருப்பதாவது:-
வழக்கறிஞர் என்ற முறை யில் நீதிமன்ற தீர்ப்பு களை மனதார வரவேற்பவன் நான். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சனம் செய்யக்கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. அ.தி.மு.க. கொடியை ஓ.பன்னீர்செல் வம் மற்றும் எதிர் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் எந்த தரவுகளின் அடிப்படையில் உத்தரவு பிறப்பித்தது என்று தெரியவில்லை.
ஆனால் இந்த உத்தரவு வந்த உடனேயே ஓ.பன் னீர்செல்வம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. கொடியை கழற்றி விட்டு காரில் பயணம் செய் கிறார். அதுபோல எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியை யும் கட்சியையும் ஒப்படைத்த சசிகலா பெங்களூரு சிறை யில் இருந்து விடுதலையாகி தமிழ்நாட்டுக்கு வந்த போது தான் பயணம் செய்த காரில் இருந்த அ.தி.மு.க. கொடியை ஒரு போலீஸ்காரர் கழற்ற சொன்னதின் அடிப்படை யில் வேறு காருக்கு மாறி பயணம் செய்தார். இதனால் அவரை நம்பி சென்ற தொண்டர்கள் மனம் வெதும்பினர்.
கட்சியையும், ஆட்சியை யும் எடப்பாடியிடம் ஒப்ப டைத்தவர் சசிகலா என்ப தில் எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அ.தி.மு.க. கொடியை மீட்க முடி யாத சசிகலாவும், ஓ.பன் னீர்செல்வம், டி.டி.வி. தினகரனும் எப்படி அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எப்படி மீட்க போகிறார்கள் என்ற சந்தே கம் லட்சோப லட்சம் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
எனவே அ.தி.மு.க. கொடியை எடப்பாடி ஆதரவாளர்களை தவிர வேறு யாரும் கட்டக்கூடாது என்று கூறுவது வேடிக்கை யானது, வினோதமானது. எனவே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது இயக்க பற்றாளர்கள் ஒவ்வொருவரும் அ.தி.மு.க. கொடியை யும், அ.தி.மு.க. கரை வேட்டி யையும் பயன்படுத்துவதை எடப்பாடியோ அல்லது நீதிமன்றமோ கட்டுப்படுத்து வதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது என் பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது பற்று கொண்ட ஒவ் வொரு தொண்டனும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத் தலாம், அ.தி.மு.க. கரை வேட்டியை கட்டலாம். இதற்கு எடப்பாடி தரப்பு மட்டும் உரிமை கொண்டாட எந்தவித தகுதியும் இல்லை. எனவே அ.தி.மு.க. இயக் கத்தை மீட்டு எடுப்பதாக கூறிவரும் சசிகலா, தினக ரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் அ.தி.மு.க. கொடியை எவ்வித தயக்கம் இன்றி பயன்படுத்தலாம். இது தொடர்பாக தேவை யான சட்டப் போராட்டங் களையும் அவர்கள் முன் நின்று நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
- கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், தி.மு.க. நிர்வாகி ராஜேஷ் மற்றும் பலர் அங்கு திரண்டு இருந்தனர்.
- வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மார்க்கெட் அருகே ஏராளமான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதன் பழக்கடையும் உள்ளது. தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதனின் கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான ஊழியர்கள் ஜே.சி.பி. மூலம் இடிப்பதற்காக இன்று காலையில் சென்றனர். தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதனுக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், தி.மு.க. நிர்வாகி ராஜேஷ் மற்றும் பலர் அங்கு திரண்டு இருந்தனர். கடையை இடிப்பதற்காக வந்த நகரமைப்பு அலுவலர் முரளியிடம், மஞ்சக்குப்பம் சாலையானது தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாநகராட்சி சார்பில் கடை ஆக்கிரமிப்பில் உள்ளதாக எப்படி கூறுகிறீர்கள்? இடிப்பதற்கு யார் உங்களுக்கு அனுமதி அளித்தனர்? ஒரு சிலருக்கு ஆதரவாக மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறும் கடையை இடிப்ப தற்கு அனுமதிக்க மாட்டோம் என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவியை செல்போனில் தொடர்பு கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் வந்தது குறித்து தெரிவித்தனர். உடனடியாக உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளுக்கு விரைவில் நோட்டீஸ் வழங்கி இடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். குறிப்பிட்ட கடைகளை மட்டும் இடிக்க மாட்டோம். ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பில் இருக்கும் இடங்களை கண்டறிந்து அகற்றப்பட உள்ளோம். தற்போது இந்த நடவடி க்கையை நெடுஞ்சாலைத் துறை எடுக்கவில்லை. வருங்காலங்களில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவோம் என திட்டவ ட்டமாக தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடிப்பதற்கான உள்நோக்கம் என்ன? அதுவும் ஒரு கடையை மட்டும் இடிப்பதற்கு ஏன் வந்து உள்ளீர்கள்? என்று மீண்டும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். மேலும் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் மாநகராட்சி யை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் ஆளும் தி.மு.க. கவுன்சிலர் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட மு.க.ஸ்டாலின் மறந்தது ஏன்? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
- இந்த உரிமைத் தொகை திட்டத்தில் 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர்.
மதுரை
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டியில் உள்ள அண்ணாவின் திருஉ ருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
மாநிலங்களில் மாநில கட்சி ஆள முடியும் என்ற வரலாற்றை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா ஆவார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என தாரக மந்திரத்தை உருவாக்கினார். ஓலை குடிசையில் வசிக்கும் குரல், கோட்டை கொத்த ளத்தில் ஒலிக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். அதிகாரப் பகிர்வு கடைக் கோடியிலும் இருக்க வேண்டும் என ஜனநாய கத்தை உருவாக்கினார் பேர றிஞர் அண்ணா.
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்கு கருணா நிதி பெயரை சூட்டியுள்ளார். அண்ணா பெயரை சூட்ட மறந்தது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் கருணாநிதி பெயர் மறந்து விட்டது அதை ஞாபகப்படுத் தும் வகையில் இது போன்ற பெயர் சூட்டும் விழாவை முதலமைச்சர் நடத்துகிறார்.
தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் இந்த உரி மைத் தொகை திட்டத்தில் 56.50 லட்சம் மனுக்களை நிராகரித்துவிட்டனர். இதனால் இந்த திட்டத்தில் நிறைய குளறுபடி ஏற்பட் டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுவை ஒழிக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி விடுத்துள்ளார்.
- நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புதிய தமிழகம் கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற டாஸ்மாக்கில் ஒரு லட்சம் கோடி ஊழல் ஒழிப்பு யுத்தம் குறித்த பொதுக் கூட்டம் நடந்தது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சிபுரிந்து வரும் தி.மு.க. கடந்த 2021 தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வரப்படும் என வாக்குறுதி களை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது. மேலும் மதுவால் தமிழகமே தள்ளாடுகிறது. ஒரு புறத்தில் டாஸ்மாக்கை அடைத்து விட்டு மறுபுறம் திறக்கப் பட்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் அமர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகும் மதுவை ஒழிக்க தயங்குவது ஏன்?. நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வந்து விடும்.
அப்போது மீண்டும் தி.மு.க.வினர் வாக்குகள் கேட்டு உங்களி டம் வரும்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையான மதுவிலக்கு குறித்து பொது மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
மது ஒழிப்பு பிரச்சினை யில் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக் கும் சேர்த்தே புதிய தமிழகம் போராடுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடையை வருகிற அக்டோபர் 2-ந் தேதிக்குள் மூட வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா என எம்.பி. சரமாரி கேள்விகளால் திணறடித்த கிராமவாசி
- மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு
கரூர்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர் கலந்து கொள்வது வழக்கம்,இந்நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.எந்த நிலையில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணி இடம் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா,வாக்கு கேட்க மட்டுமே வருகின்றீர்கள், அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்கவே இல்லை குறிப்பாக நன்றி கூற கூட வரவில்லை என்று காட்டமாக கேள்வி கேட்க,உடனே எம்பி ஜோதிமணி எம்பி தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்து கொண்டு தான் வந்து கொண்டு உள்ளேன்,கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் நன்றி தெரிவித்து கொண்டு வந்து உள்ளேன், நீங்கள் வேணும் என்று என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது என கேள்வி கேட்ட நபரிடம் எம்பி ஜோதிமணி ஆவேசமாக பேசினார்.இந்த நிலையில் எதையும் கண்டு கொள்ளாத அந்த நபர் தொடர்ந்து வாக்கு சேகரிக்க மட்டும் தான் வருகிறீர்கள் ஃபோன் செய்தால் ஒரு முறையாவது எடுத்து உள்ளீர்களா?எம்பி என்கின்ற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். கிராம சபை கூட்டத்தில் குடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சூழ்ந்ததால் சற்று பரபரப்பு நிலவியது - இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர்.கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம் பி ஜோதி மணியிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
- ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர் போல பேசுவது முறையா?
- நீங்கள் குற்றம் சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை:
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தொட்டுப் பார், சீண்டிப்பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக, ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், ஸ்டாலின், நீங்கள் இப்படிப் பேசுவது, நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., பலமுறை எதிர்க்கட்சி வரிசையிலும், சில முறை ஆளுங்கட்சியாகவும் சட்டமன்றத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. சட்ட திட்டங்கள், விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த, ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சட்டமன்ற அனுபவமிக்க நீங்கள், ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர் போல பேசுவது முறையா?
தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்தபோது கூட வாய் திறக்காத நீங்கள், கரூரில் கடந்த 26.5.2023 அன்று சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டபோது, கண்டனம் கூடத் தெரிவிக்காத நீங்கள், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்காக இப்படிப் பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா?
உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18-ம் நாள், குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நீங்கள் குற்றம் சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏழு வருடங்களில் என்ன மாறிவிட்டது? நீங்கள் கோரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதை உங்கள் கட்சி சார்பாக வரவேற்றல்லவா இருக்க வேண்டும்?
சி.பி.ஐ. விசாரணைக்கு முன் மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளீர்கள்.
நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள போதே எத்தனை முறை சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா?
2014-ம் ஆண்டு ஜூலை மாதம், சென்னை முகலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு சி.பி.ஐ. விசாரணை கோரினீர்கள்.
பிப்ரவரி 2015-ல், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் மேல் சி.பி.ஐ. விசாரணை கேட்டீர்கள்.
மே 2016-ல், அரவக் குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்களில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றீர்கள். அரவக் குறிச்சியில் இதே செந்தில் பாலாஜியின் மீதுதான் குற்றச்சாட்டும் வைத்தீர்கள்.
டிசம்பர் 2017, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது சி.பி.ஐ. விசாரணை கோரினீர்கள்.
2018 ஏப்ரல்-குட்கா விற்பனையில் சி.பி.ஐ. விசாரணை
குரூப் 1 தேர்வு முறை கேடுகளில் சி.பி.ஐ. விசாரணை
2018 ஜூலை அன்றைய அமைச்சர்கள் மேல் சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை, கனிம மணல் சுரங்கம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை
2018 ஆகஸ்ட் தமிழக மின்சார வாரியம் நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை
2018 செப்டம்பர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஏலம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை
மார்ச் 2019 பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக் கோரிக்கை
ஜூன் 2019-அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை
செப்டம்பர் 2019 ஆர்.கே. நகர் தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிக்கை
அக்டோபர் 2019 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குக் கோரிக்கை
ஜூன் 2020 தூத்துக்குடி லாக்கப் மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்போம் என்ற அறிவிப்பு
செப்டம்பர் 2020 பிரதமரின், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில், தமிழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை.
நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எத்தனை சி.பி.ஐ. விசாரணை கோரிக்கைகள்?
நீங்கள் இப்போது ஆளும் கட்சி ஆனபின்பு சி.பி.ஐ. உங்கள் அனுமதி பெற்றுத் தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்தி வரும் ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
அது மட்டுமல்ல, உங்கள் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது, உங்களுக்கான தனிப்பட்ட தமிழக காவல் துறையின் பாதுகாப்பை நம்பாமல், மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பைக் கேட்ட வரலாறுகளும் உண்டு. தற்போது என்ன மாறிவிட்டது என்று நினைக்கிறீர்கள்?
யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகள்? உங்கள் கட்சித் தொண்டர்களை எவ்வாறு வழி நடத்துகிறீர்கள்? இது போன்று பேசுவது, தனிச்சிறப்பு வாய்ந்த, பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட நமது மாநிலத்துக்கு உகந்தது கிடையாது.
நீங்கள் எட்டரை கோடி தமிழ் மக்களுக்கான முதல்வரா அல்லது உங்கள் குடும்பத்திற்கும் உங்களைச் சுற்றியுள்ள குறுகிய வட்டத்திற்குமான முதல்வரா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரும்போது, நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்?
எதற்காக இப்படிப் பதறிப் பாய்கிறீர்கள் முதல்வர் அவர்களே?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.