என் மலர்
நீங்கள் தேடியது "நேர்காணல்"
- நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது
- லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்
அமெரிக்காவுக்கான அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அதிபர் ஜோ பைடன் தடுமாற்றத்தில் இருப்பது விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிலிருந்து விலகி கமலாவை வேட்பாளராக அறிவித்தார்.
இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலாவுக்கு அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி எதிர் வேட்பாளர் டிரம்பை விட ஆதரவு சற்று அதிகமாவே உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகிறன. சியானா கல்லூரி மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய தேசிய கருத்துக்கணிப்பில் ஹாரிஸ் 49 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை ஆதரவு பெற்று டிரம்பை விட முன்னிலையில் உள்ளார்.
சமீபத்தில் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப்பை திறம்பட சமாளித்ததது கமலாவின் தலைமைப் பண்பு மீது அனைவரையும் நம்பிக்கை கொள்ளச் செய்தது. தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா, லேட் நைட் ஊடக நேர்காணலில் பங்கேற்று ஜாலியாக பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து தொகுப்பாளர் ஸ்டெப்பான் கால்பெர்ட்டுடன் விவாதித்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் போது மில்லர் ஹை லைப் என்ற பீர் பானம் கமலாவுக்கு வழங்கப்பட்டது. கடைசியாக பேஸ் பால் போட்டியின் பொது குடித்தது என கூறியவரே அந்த டின் கேன் பாட்டிலைக் கையில் எடுத்த கமலா லாவகாக உடைத்து சீர்ஸ் சொல்லி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
While having a beer with Stephen Colbert, Kamala Harris says, "He lost millions of jobs. He lost manufacturing. You lost automotive plants, you lost the election. What does that make you? A loser. This is what somebody at my rallies said." pic.twitter.com/leNrj6OVV3
— Sarah Reese Jones (@PoliticusSarah) October 9, 2024
Kamala Harris cracks open a beer with Stephen Colbert in this preview clip from her visit to The Late Show tonight. #MillerHighLife #KamalaHarris #HarrisWalz2024 pic.twitter.com/BhJsBvfCKY
— LateNighter (@latenightercom) October 9, 2024
- நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலுக்காக 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கலேஷ்வர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அங்கலேஷ்வரில் உள்ள ஒரு ஓட்டலில், ரசாயனத் துறையில் பணியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டு, நிறுவனம் வாக்-இன் நேர்காணலை ஏற்பாடு செய்தது.
பி.இ உட்பட பல்வேறு தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஐடிஐ சான்றிதழ்களில், ஷிப்ட் இன்சார்ஜ், பிளாண்ட் ஆபரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக்கல் ஃபில்டர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பதவிகள் போன்ற பதவிகளுக்கு கோரப்பட்டது.
இந்த நெரிசலான கூட்டத்தின்போது, ஓட்டலின் வாயிலில் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பிடி கம்பி அழுத்தம் தாங்காமல் உடைய, அங்கிருந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்த போதிலும், நிறுவனத்தை அணுகுவதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த கூட்டம் வேலையில்லா திண்டாட்டத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
- நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
- வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.
எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தனெக்கென ஒரு பாணியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை சில நடிகர்களுக்குதான் உண்டு. அதேப் போல் தமிழ் சினிமாவின் வெர்சாடைல் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி.
சமீப காலமாக இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகும் திரைப்படம் பெரும்பாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இவர் மற்றப் படங்களில் வில்லனாகவோ ,மற்ற கதாப்பாத்திரத்தில் நடித்தால் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும்.
ஆனால் இந்த கருத்தை உடைக்கும் வகையில் இவரது 50 வது திரைப்படம் அமைந்தது. சமீபத்தில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக 100 கோடியை எட்டும் நிலையில் உள்ளது.
விஜய் சேதுபதி சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவர் ஏன் ரொமாண்டிக் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை என கேள்வி எழுப்பினர்.
அதற்கு விஜய் சேதுபதி " தரமாட்டேங்குறாங்க சார், ஆனா நான் ரொமான்ஸ் நல்லா பண்ணுவேன். நானும் அதுக்கான கதைய தேடிட்டு தான் இருக்கேன், காதல்ல என்னைக்குமே தீர்ந்தே போகாது சார், காதல் காட்சிகள் ரொம்ப ரசிக்கிறவன் சார் நான் , கேமரா முன்னாடி நடந்தாலும் சில நொடிகளே நடந்தாலும், நான் அதை நிஜம் என்று நம்புகிறேன்., அது எல்லாதுக்கும் அமைந்துடாதுள்ள சார்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
- ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்
டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
- திருநங்கையருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
- முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேனிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் சார்ந்த புதிய கற்றல் செயல்முறையாகவும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையருடன் மாண வர்கள் கலந்துரையாடும் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் திருநங்கை பட்டதாரி ரதிமீனா, யாஷிகா, ரகசியா, குபேரன் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளிடம் கலந்துரையாடினர்.
திருநங்கையர் குழுத் தலைவி ரதிமீனா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசுகையில்
"திருநங்கை"என்ற சொல்லை முத்தமிழறிஞர் கலைஞர் மூன்றாம் பாலினத்த வர்க்காக உருவாக்கிய விதம் குறித்தும் திருநங்கைகளுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு வழங்கி சமூகத்தில் புறக்கணிக்கப் பட்ட விளிம்புநிலையினராய் இருந்த திருநங்கையர் வாழ்வை மறுமலர்ச்சி பெறச் செய்தமை குறித்தும் பேசினர்.
எங்களைப்போன்ற வர்கள் வாழ்வில் சாதிக்கும் போது உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என வாழ்த்தினார்.
நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்த முதுகலைத் தமிழாசிரியர் ராசகணேசன் பேசுகையில்நா ம் வணங்கும் ஆடல்வல்லான் சிவபெரு மானே சிவமும் சக்தியும் கலந்த அர்த்த நாரீஸ்வர ராகவே இருந்து பெண்ணுக்குள் ஆண்மையும் ஆணுக்குள் தாய்மையும் உறைவதை உணர்த்துகிறார்.
எல்லாக் குழந்தைகளும் ஆணாக அல்லது பெண்ணாகப் பிறக்கின்றனர்.
வளரும்போது ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக திருநங்கையர் களாக அடையாளப்ப டுகின்றனர்.
நவீன அறிவியல் யுகத்தில் இம்மாற்றங்களைப் பெற்றோர்கள் முன்னரே அடையாளம் கண்டு உரிய நேரத்தில் உரிய முறையில் ஹார்மோன் சிகிச்சை அளித்தால் இதனைத் தொடக்கத்திலேயே சரி செய்யலாம் என்றார்.
மாணவர்கள் நேரிடை யாக திருநங்கையருடைய வாழ்க்கைச்சூழல், கல்விநிலை குறித்தும் திருநங்கையரிடமே நேர்காணல் நிகழ்த்தினர். மாணவர்கள் வினவிய அனைத்துக் கேள்விகளுக்கும் திருநங்கையர் எதார்த்தமான பதில்களை வழங்கினர்.
முடிவில் பட்டதாரித் தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர்.
- நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
திருவட்டார் :
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்க ளுக்கான நேர்காணல் சுவாமியார்மடத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் லிஜிஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஜெபர்சன், பைஜூ, ஆல்பின் பினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர். இவர்களிடம் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் இன்பா ரகு, ஈரோடு பிரகாஷ், அப்துல் மாலிக், கஜேந்திரபிரபு, சீனிவாசன், பிரதீப்ராஜா, ஆனந்தகுமார், அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினர். நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
- 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர்.
- மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.
கடலூர்:
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஊரக இளைஞர்கள், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, தொரப்பாடி, வடலூர் பகுதியை சேர்ந்த மகளிர் திட்டத்தில் தொழில்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களும், மாவட்டத்தில் உள்ள தொழிற்கல்வி மற்றும் பொதுக்கல்வி படித்த பல்வேறு இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதையடுத்து நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். இதில் வட்டார இயக்க மேலாளர் சத்திய நாராயணன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, வக்கீல் கார்த்திக், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், அருண் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடக்கிறது.
- உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் சட்ட மன்ற உறுப்பினரு மான காதர் பாட்சா முத்து ராமலிங்கம் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை யின்பேரில், மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாளை (நவ.1) ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மதியம் 2 மணிக்கு நகர, ஒன்றிய, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப் பிற்கு விண்ணப்பித்தவர்க ளுக்கான நேர்காணல் நடக்கிறது. எனது தலைமை யில் (காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம்) நடக்கும் இந்த நேர்காணலில் ஒன்றிய, நகர, பேரூர், அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பா ளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தங்களுடைய வயதை நிரூபிப்பதற்கான கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, உறுப்பினர் அட்டை, இளைஞரணி போன்ற கழக அமைப்பு களில் ஏற்கெனவே பணியாற்றியிருந்தால், அதுதொடர்பான உரிய ஆவணங்களுடன் தவறாமல் இளைஞரணி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுற்றுலாத்துறை அமைச்சர் பங்கேற்பு
- நகர-ஒன்றிய-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளருக்கு எண்ணற்றோர் விண்ணப்பம்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நகர-ஒன்றிய-பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தோருக்கான நேர்காணல், ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் வரவேற்றார்.
சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பிரகாஷ், இளையராஜா, அப்துல்மாலிக், பிரபு, சீனிவாசன், ஆனந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நௌபுல், நாகராஜ், பத்மநாபன், முரளிதரன், வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கட்சி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களிடம், நகர-ஒன்றிய-பேரூர் கழகம் வாரியாக மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோவன், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, காந்தல் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு நன்றி கூறினார்.
- க.தேவராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
- 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றிய, பேரூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. மாணவரணியின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளர், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் சேலம் ரா.தமிழரசன், கா.அமுதரசன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகரம், 15 ஒன்றியம் மற்றும் 3 பேரூர் ஆகிய பகுதிகளுக்கான மாணவரணி அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்கள் பதவிக்கு பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்து கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- தி.மு.க. மாணவரணி அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
- சேடபட்டி மு.மணிமாறன் தொடங்கி வைத்தார்.
திருமங்கலம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞ ரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது வழி காட்டுதலின்படி மாணவ ரணி அமைப்பாளர்களுக்கு நேர்கணால் நடைபெற்று வருகிறது.
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடப் பட்டி மு.மணிமாறன் தலை மையில் மாநில மாணவ ரணி இணை செயலாளர் ஜெரால்டு மற்றும் மாநில மாணவரணி துணை செய லாளர் வீரமணி, தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாண்டி முருகன் முன்னிலையில் தெற்கு மாவட்ட மாண வரணி அமைப்பாளர்களுக் கான நேர்காணல் நடை பெற்றது.
நேர்காணலின்போது மாநில விவசாய இணைச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப் பினர் மகிழன், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி யன், ராமமூர்த்தி, ஆலம் பட்டி சண்முகம், மதன் குமார், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பாச பிரபு உட்பட மதுரை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன் றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண் ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.
நேர்காணலுக்கு வரும் ஒவ்வொரு விண்ணப்பதா ரர்களும் வயதை சரிபார்க்க கல்விச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, கட்சி உறுப்பினர் கார்டு, கட்சி மாணவரணி உள் ளிட்ட ஏதாவது ஒரு அமைப்பில் பணியாற்றி இருந்தால் அதுதொடர்பான புகைப் படம் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
- ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை ஆகும்.
- வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, தட்டாங்கோவிலில் உள்ள கோட்டூர்மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை நடை பெற்று வருகிறது. படிக்க விரும்பு பவர்கள் அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை, பெண்களுக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை. 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்.
கோட்டூர் ஐ.டி.ஐ.யில் உள்ள தொழிற்பிரிவுகள் எலக்ட்ரீசியன், பிட்டர், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்-கண்டிசனிங் டெக்னீசியன், நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெல்டர். மேலும், டாடா டெக்னாலஜி 4.0 திட்டத்தின் கீழ் கோட்டூர் மற்றும் நீடாமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன் இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் மற்றும் அட்வான்ஸ் சி.என்.சி மிஷினிங் டெக்னீசியன் ஆகிய அதிநவீன தொழி ற்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
இந்த தொழிற்பிரிவுகளில் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.ஐ.டி.ஐ-ல் படிக்கும் காலத்தில் தகுதியுடைய மாணவ-மாணவிகளுக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், பஸ்பாஸ் மற்றும் பயிற்சிக்கு தேவை யான நுகர்பொருட்கள் முதலியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், படித்து முடித்த பின் வளாக நேர்காணல் மூலம் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். மேலும் விவரங்களுக்கு 80721 34721 மற்றும் 99523 53587 என்ற மொபைல் எண்ணிற்கு அல்லது நேரடியாக தொடர்பு கொ ண்டு ஐ.டி.ஐ படிப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.