search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம்"

    • அவர்களது உடலில் உள்ள தோலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்
    • மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும்.

    தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ [Kambo] மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா [Marcela Alcázar Rodríguez] தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படும் இந்த சடங்கில் பங்கேற்ற அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் துடிதுடித்து இறந்துள்ளார்.

    காம்போ சடங்கு

    இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அந்த காயங்களின் மேல் குறிப்பிட்ட தவளை சளி தடவப்படும். இந்த சளி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த சடங்கு நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்வதாக காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.

     

    ஆனால் விஷத்தைக் கொண்டிருக்கும் சளி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வாந்தியைத் தூண்டும் இது சில சமயங்களில் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மற்ற அறிகுறிகளாக மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும். பொதுவாக, அறிகுறிகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

    மார்செலாவுக்கு என்ன ஆனது?

    சடங்கு தொடங்கிய உடனேயே மார்செலாவுக்கு அசௌகர்யமும் அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் தூய்மை படுத்தும் செயல்பாட்டின்போது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது என்று கருதப்படுகின்றன.

    மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து இந்த சடங்கை செய்த சாமியார் [shaman] மார்செலாவை வயிற்றுப் போக்கை தாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் அங்கிருந்து சாமியார் தப்பியோடினார்.

     

    தோழி ஒருவர் அவருக்கு உதவ வந்தபோதிலும் மார்செலா தவளை விஷத்தால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். துராங்கோ பகுதியை சேர்ந்த மார்செலா அப்பகுதியில் படமாக்கப்பட்ட பல்வேறு படங்களிலும், சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மார்செலா மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

    • விபத்து நடந்த சில நிம்டங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
    • போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகம் பேர் பெண்கள் ஆவர். 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2.5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதாலும், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க நெறுக்கியடித்ததாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவப் பிரகாஷ் மதுக்கருக்கு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாததையும் கவனிக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க போலே பாபாவின் சொத்துமதிப்பு 100 கோடியாக உள்ளது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலே பாபாவின் அன்றைய கூட்டத்தில் சுமார் 15 முதல் 16 பேரின் கையில் விஷத் தன்மையுள்ள பொருள் அடைத்த பாட்டில்கள் இருந்துள்ளது என்றும், அதை அவர்கள் திறந்துவிட்டதாலேயே இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். மேலும், விஷ பாட்டில்களை வைத்திருந்த நபர்கள் தப்பிச் செல்ல கார்களும் அங்கு தயாராக இருந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.

    இதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதற்கு புறம்பாக போலே பாபாவின் வக்கீல் சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.  

    • பிரதமர் தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். தவத்தின் பலன் கிடைக்குமா என தெரியவில்லை.
    • உழைத்தால்தான் வயிற்றை நிரப்பமுடியும் என்பது என் நம்பிக்கை என்றார் கார்கே.

    பெங்களூரு:

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கல்புர்கியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மா கங்கா என அழைக்கப்படும் 2047-ம் ஆண்டுக்கான திட்டங்களை பிரதமர் மோடி தயாரித்துள்ளார். 2047 வரை அவர் இருப்பாரா?

    அவர் சில சமயங்களில் கடலுக்குள் செல்வார். சில சமயம் கங்கையின் உள்ளே செல்கிறார். சில சமயம் குகைகளுக்குச் செல்கிறார். சில சமயம் தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார். அவரது தவத்தின் பலன் கிடைக்குமா என தெரியவில்லை.

    உழைத்தால்தான் வயிற்றை நிரப்பமுடியும் என்பது என் நம்பிக்கை. நல்ல காரியங்களைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். கெட்ட காரியங்களைச் செய்தால் கெட்ட பலன்தான் கிடைக்கும்.

    விஷத்தைக் கண்டு அதிலிருந்து விலகி இருக்கச் சொன்னாலும் அதை நக்க பிடிவாதம் பிடித்தால் என்ன பலன்? மோடியும் அப்படித்தான் என தெரிவித்தார்.

    • இருவரும் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மேலும், இந்த விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நதியா உயிரிழந்துள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது.
    • இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. சிறப்பாக செயல்படப் போவதில்லை என காங்கிரஸ் கூறியது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவநம்பிக்கையான மற்றும் திட்டமிட்ட முயற்சியாகும்.

    முதல் கட்ட தேர்தலில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது. இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. அவ்வளவு சிறப்பாக செயல்படப் போவதில்லை.

    மொத்தத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையைப் பெறப்போவதில்லை. இந்தியா கூட்டணி தெளிவான மற்றும் உறுதியான பெரும்பான்மை பெறப்போகிறது.

    பிரதமர் மோடியின் பிரசாரம் இப்போது விஷத்தால் நிறைந்துள்ளது. அவர் பேசும் மொழி அவரது கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது.

    பிட்ரோடா சொல்வது அவரது சொந்த கருத்துகள். அவை இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என தெரிவித்தார்.

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
    • குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 2½ வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளார்.

    இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் திரண்டனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த சிறுகிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 80), முத்துலிங்கம் கடந்த சிலநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த முத்துலிங்கம் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்து அவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர்.

    மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் முத்துலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்
    • போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே உள்ள திருவறம்பு கொல்வேர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி (வயது 47). செங்கல் சூளை தொழிலாளியான இவர், மனைவி-மகளை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான ஜெபமணி, கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அவர் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஜெபமணி, மதுவில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் பாய் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரும்பிய படிப்பை படிக்க முடியாததால் வேதனை
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா(வயது17).

    இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ரம்யா விவசாயம் தொடர்பான படிப்பை படிக்க விரும்பினார். ஆனால் அவரை அவரது பெற்றோர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து விட்டனர்.

    இதன் காரணமாக ரம்யா கடந்த சில நாட்களாக படிப்பில் நாட்டம் இல்லாமல் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று கல்லூரியில் இருந்த அவர் கழிவறைக்கு சென்றார். அங்கு வைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்து எலி மருந்தை சாப்பிட்டார்.

    பின்னர் வகுப்பறையில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த பேராசிரியர்கள் உடனடியாக ரம்யாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் ரம்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனைவி ஸ்ரீஜா மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் ேபாலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நட்டாலம் காட்டாவிளையைச் சேர்ந்தவர் பால்துரை (வயது 39), தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அவரை மனைவி ஸ்ரீஜா மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்துரை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.
    • மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரதீப் (வயது 26). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    குடும்ப தகராறு

    இவருக்கு வீர லட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவரது மனைவிக்கும், இவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வீரலட்சுமி டவுன் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் மகளிர் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.

    விஷம் குடித்தார்

    அப்போது அவரை போலீசார் கண்டித்தனர். இதனால் மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீவிர சிகிச்சை

    உடனடியாக போலீசார் அங்கு சென்று பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விஷம் குடித்த பிரதீப்பின் தாய் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    ×