search icon
என் மலர்tooltip icon

    கணினி

    அதிர்ச்சி - கூகுள் பிளே ஸ்டோரில் இப்படிப்பட்ட செயலிகளா?
    X

    அதிர்ச்சி - கூகுள் பிளே ஸ்டோரில் இப்படிப்பட்ட செயலிகளா?

    • கூகுள் பிளே ஸ்டோரில் தீங்கு விளைவிக்கும் செயலிகள் பற்றி புது தகவலை சைபர்செக்யுரிட்டி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.
    • இந்த செயலிகளை பெரும்பாலும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர்.

    பல லட்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மால்வேர் வழங்கி வரும் 35 செயலிகளை சைபர்செக்யுரிட்டி ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு கண்டறிந்து இருக்கிறது. ரோமானிய சைபர்செக்யுரிட்டி தொழில்நுட்ப நிறுவனமான பிட்-டிபெண்டர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், கூகுள் பிளே ஸ்டோரில் புதிய மால்வேர் பிரச்சாரம் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி சில செயலிகள் பயனர்களை தவறான தகவல் கொடுத்து ஏமாற்றி அவர்களை இன்ஸ்டால் செய்ய வைக்கின்றன. இன்ஸ்டால் ஆனதும் பெயரை மாற்றிக் கொண்டு மிகத் தீவிரமாக விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. கூகுள் பிளே மூலம் வருவாய் பெறுவதோடு பயனர் அனுபவத்தையும் கெடுக்கின்றன. இந்த விளம்பரங்கள் நேரடியாக மால்வேருடன் தொடர்புடையவை ஆகும்.


    கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 20 லட்சத்தற்கும் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கும் 35 செயலிகள் இவ்வாறு செயல்பட்டு வருவதாக பிட்-டிபெண்டர் தெரிவித்து இருக்கிறது. இவை முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களை நம்ப வைத்து இன்ஸ்டால் செய்ய கோருகிறது. இன்ஸடால் ஆனதும் பெயர் மற்றும் ஐகானை மாற்றிக் கொண்டு விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றை கண்டறிவது மற்றும் அன்-இன்ஸ்டால் செய்வது மிகவும் கடினம் ஆகும்.

    "பல்வேறு செயலிகளும் பயனர்களுக்கு விளம்பரங்களை காண்பிக்கின்றன. எனினும், இந்த செயலிகள் தங்களின் சொந்த பிரேம்வொர்க்கில் இருந்து விளம்பரங்களை காண்பிக்கும். இவை பயனர்களுக்கு மால்வேர்களையும் வழங்க வாய்ப்புகள் அதிகம் தான். பிடிக்காத செயலிகளை பயனர்கள் அழித்து விடலாம். ஆனால் இந்த செயலிகளை கண்டறிந்து அவற்றை அழிக்கும் ஆப்ஷனை டெவலப்பர்கள் மிக கடினமாக வைத்திருப்பர்," என பிட்-டிபெண்டர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×