search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மி வாட்ச் அறிமுகம்
    X

    ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மி வாட்ச் அறிமுகம்

    • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புது ரியல்மி வாட்ச் பெரிய டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட ரியல்மியின் முதல் மாடல் ஆகும். புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ கடந்த ஆண்டு ரியல்மி அறிமுகம் செய்த ரிய்லமி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலில் 1.78 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன், வளைந்த டிசைன் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், SpO2 லெவல், ஹார்ட் ரேட் லெவல், ஸ்டிரெஸ் மற்றும் ஸ்லீப் குவாலிட்டி உள்ளிட்டவைகளை டிராக் செய்யும் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், 345 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.


    ரியல்மி வாட்ச் 3 ப்ரோ அம்சங்கள்:

    1.78 இன்ச் 368x448 பிக்சல் டச் கலர் AMOLED வளைந்த டிஸ்ப்ளே

    3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், ஹார்ட் ரேட் மற்றும் SpO2 சென்சார்

    ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்

    ப்ளூடூத் 5.3

    ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்

    டூயல் மோட் ப்ளூடூத்

    110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    மல்டி சிஸ்டம் ஜிபிஎஸ்

    24 மணி நேர ரியல்டைம் ஹார்ட் ரேட், லோ ஹார்ட் ரேட் ரிமைண்டர்

    மியூசிக் கண்ட்ரோல், வானிலை விவரங்கள்

    IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட்

    345 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடல் கிரே மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 4 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் துவங்க உள்ளது.

    Next Story
    ×