search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமானது நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் - என்னென்ன அம்சங்கள் உள்ளது தெரியுமா?
    X

    ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமானது நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் - என்னென்ன அம்சங்கள் உள்ளது தெரியுமா?

    • வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வர உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    நத்திங் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் இன்று அறிமுகமானது. டிரான்ஸ்பரண்ட் பேக் பேனலுடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் பேக் பேனலில் எல்.இ.டி ஸ்டிரிப்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. நோட்டிபிகேஷன்கள் வரும் போது இது ஒளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. நத்திங் போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 778G+ புராசஸரை கொண்டுள்ளது.


    இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது. இதுதவிர முன்புறம் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. 4,500 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறன் கொண்ட இதில் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதில் 5ஜி மற்றும் 4ஜி எல்.டி.இ போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

    சார்ஜ் செய்துகொள்ள யு.எஸ்.பி டைப் சி போர்ட் இந்த போனில் இடம்பெற்று உள்ளது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் இதில் உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், 3 மைக்ரோபோன்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்று உள்ளன. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 3 வருடத்துக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளும், 2 வருடத்திற்கான செக்யூரிட்டி பேட்சுகளும் வழங்கப்படுகின்றன.


    நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான இது மூன்று வித மெமரி வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட், 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட் ஆகிய மூன்று விதமான மெமரி ஆப்சன்களுடன் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.

    விலையைப் பொருத்தவரை நத்திங் போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான 2ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38 ஆயிரத்து 999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.

    Next Story
    ×