என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதிய கேஜெட்டுகள்
பவர்ஃபுல் M2 சிப்செட், ஓ.எஸ்.களை ஒரே அடியில் மாற்றும் புது அப்டேட் - ஆப்பிள் அதிரடி!
- ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது.
- ஆப்பிள் நிறுவனத்தின் புதிய M2 மேக்புக் ஏர் மாடல் 2022-வின் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டெவலப்பர்கள் மாநாடு WWDC 2022 நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய M2 சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகான் சிப்செட்டான இது தலைசிறந்த CPU மற்றும் கிராஃபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. இதற்கு முன்னதாக வந்த M1 பிராசஸரை விட பல்வேறு அம்சங்களில் தனித்து விளங்கும் வகையில் சக்திவாய்ந்த ஒன்றாக இந்த புதிய M2 சிப்செட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது. எதிர்பார்த்தப்படியே புது மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களில் முற்றிலும் புதிய சக்திவாய்ந்த M2 சிப்செட் இடம்பெற்றுள்ளது.
2022 மேக்புக் ஏர் சிறப்பம்சங்கள்
M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக 2022 மேக்புக் ஏர் இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2022 மேக்புக் ஏர் மாடல் முற்றிலும் புது டிசைன் கொண்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது மிக மெல்லியதாகவும், குறைந்த எடையுடையதாகவும் இருக்கிறது. இது மாடல் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. 2022 மேக்புக் ஏர் மாடல், ஸ்பேஸ் கிரே, லேப்டாப் சில்வர், மிட்நைட் மற்றும் ஸ்டார்லைட் என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
இது 13.6 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே உடன் வருகிறது. முந்தைய மாடலை விட 20சதவீதம் அதிக பிரைட்னஸ் கொண்டுள்ளது. 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட், ஸ்டீரியோ ஆடியோ, 1080P ஃபேஸ்டைம் HD கேமரா, போர்ஸ் டச் டிராக்பேட், நாள் முழுக்க பேட்டரி பேக்கப், 18 மணி நேர வீடியோ பிளேபேக், 30 வாட் யு.எஸ்.பி. சி அடாப்டர் உள்பட் பல்வேறு சிறப்பம்சங்களை 2022 மேக்புக் ஏர் மாடல் கொண்டுள்ளது.
2022 மேக்புக் ப்ரோ சிறப்பம்சங்கள்
அதேபோல் 2022 மேக்புக் ப்ரோ மாடல், 13 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 8GB யுனிஃபைடு மெமரி, 8 கோர் CPU, 10 கோர் GPU, புதிய M2 சிப்செட், 256ஜிபி / 512ஜிபி SSD ஸ்டோரேஜ், மேஜிக் கீபோர்டு, ஃபோர்ஸ் டச் டிராப்பேட், டச் பார் மற்றும் டச் ஐடி, 2 தண்டர்போல்ட் / 4 USB போர்ட்கள், 20 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய M2 மேக்புக் ஏர் மாடல் 2022-வின் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ 2022 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இரு மாடல்களின் விற்பனை விரைவில் துவங்க உள்ளது.
IOS 16 வெர்ஷன்
IOS 16 வெர்ஷனில் மேம்பட்ட லாக் ஸ்கிரீன் மற்றும் வால்பேப்பர், விட்ஜெட்களில் அசத்தல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மெசேஜஸ், மெயில், விஷூவல் லுக் அப், டிக்டேஷன், லைவ் டெக்ஸ்ட், ஆப்பிள் வாலெட், ஆப்பிள் நியூஸ், ஆப்பிள் மேப்ஸ், பேரண்டல் கண்ட்ரோல், பிட்னஸ், ஹெல்த் என இந்த IOS 16 வெர்ஷனில் அதிகளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
வாட்ச் OS 9
வாட்ச் OS 9-இல் மேம்பட்ட ஹெல்த் டிராக்கிங், புதிய வாட்ச் ஃபேஸ்கள், AFib ஹிஸ்ட்ரி என பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இத்துடன் வெவ்வேறு ஸ்போர்ட் மோடுகளுக்கு ஏற்ப பயனர்களுக்கு பயனுள்ள விவரங்களை வழங்கும் வகையில் புதுப்புது மாற்றங்களும் இதில் செய்யப்பட்டு உள்ளன.
மேக் OS வெண்ட்யுரா
மேக் சாதனங்களில் இயங்கும் மேக் OS-ன் புது வெர்ஷன், மேக் OS வெண்ட்யுரா என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது மேக் சாதனங்களில் மல்டி டாஸ்கிங் அனுபவத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் புதிய சஃபாரி பிரவுசர், ஐபோனினை வெப்கேமராவாகவும் பயன்படுத்தும் வசதி, பிரீலோடெட் செயலிகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐபேட் OS 16
மேக் OS வெண்ட்யுரா போன்றே ஐபேட் OS 16-இலும் மல்டி டாஸ்கிங் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர மேம்பட்ட மெசேஜஸ் ஆப், லைவ் டெக்ஸ்ட், மெட்டல் 3 என்ஜின் மூலம் உருவாக்கப்பட்ட ஏராளமான கேம்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. ஐபேட் OS 16-இல் உள்ள ஸ்டேஜ் மேனேஜர் மூலம் பல்வேறு செயலிகளை ஐபேடில் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பயன்படுத்த முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்