search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸருடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன்
    X

    ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸருடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன்

    • ஐகூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • புதிய ஐகூ Z6 லைட் 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

    ஐகூ நிறுவனம் குறைந்த விலையில் Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது சர்வதேச சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். புதிய ஐகூ Z6 லைட் 5ஜி மாடலில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 50MP பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஐகூ Z6 லைட் 5ஜி மாடலில் 6.58 இன்ச் FHD+ 2408x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் வாட்டர் டிராப் ரக நாட்ச் உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர் கொண்டு அறிமுகமான உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்னாப்டிராகன் 480 பிராசஸரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இது முந்தைய பிராசஸரை விட 10 சதவீதம் மேம்பட்ட GPU திறன் மற்றும் 15 சதவீதம் மேம்பட்ட CPU திறன் கொண்டிருக்கிறது.


    இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த பன்டச் ஒஎஸ் 12, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்திய சந்தையில் ஐகூ Z6 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் கிரீன் மற்றும் மிஸ்டிக் நைட் நிறங்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×