search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    200MP கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்
    X

    200MP கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்

    • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விரைவில் நடைபெற இருக்கிறது.
    • புது மோட்டோ ஸ்மார்ட்போன் 200MP கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் சர்வதேச சந்தையில் எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இதே மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதியாகிவிட்டது.

    பிஐஎஸ் வலைதளத்தை தொடர்ந்து புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டதாக டிப்ஸ்டர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். இதோடு இந்திய சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இதோடு ப்ளிப்கார்ட் ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் அவர் இணைத்து இருக்கிறார்.


    ப்ளிப்கார்ட் டீசரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம், ஏற்கனவே வெளியான ரெண்டர்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. எனினும், இதே டீசரில் புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதே சென்சார் சீனாவில் கிடைக்கும் மோட்டோ X30 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.7 இனஅச் OLED வளைந்த எட்ஜ் கொண்ட டிஸ்ப்ளே, FHD பிளஸ் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 125 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா, 60MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×