search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இனி சார்ஜர் இல்லாம ஐபோன் விற்பனை செய்யாதீங்க - நெருக்கடியில் ஆப்பிள்
    X

    இனி சார்ஜர் இல்லாம ஐபோன் விற்பனை செய்யாதீங்க - நெருக்கடியில் ஆப்பிள்

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்கள் விற்பனையை நிறுத்த பிரேசில் அரசாங்கம் உத்தரவிட்டு இருக்கிறது.
    • பயனர்களுக்கு முழுமையற்ற சாதனங்களை விற்பனை செய்வதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

    பிரேசில் நாட்டு அரசாங்கம் சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்யக்கூடாது என ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் முழுமை பெறாத நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு மேலும் தெரிவித்து உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.38 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து இருப்பதோடு சார்ஜர் இல்லாமல் ஐபோன் 12 மற்றும் அதற்கு பின் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களின் விற்பனையை நடத்தக் கூடாது என பிரேசில் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மிகவும் அத்தியாவசியமான சாதனம் இன்றி ஐபோன் விற்பனை செய்யப்பட்டு வந்தது என அந்நாட்டு அரசிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்வதால் காற்று மாசு குறைக்கப்படுவதாக கூறும் ஆப்பிள் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சார்ஜர் இல்லாமல் ஸ்மார்ட்போன் விற்பனை செய்வதால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு என்பதை உணர்த்தவும் எந்த ஆதாரமும் இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    இன்று (செப்டம்பர் 7) இரவு நடைபெற இருக்கும் ஃபார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பிரேசில் அரசு இத்தகைய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இது பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    Next Story
    ×