search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரீசார்ஜ் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் ஜியோ போன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
    X

    ரீசார்ஜ் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் ஜியோ போன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

    • விலையேற்றம் அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • ஜியோ போனை 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, அதன் போனின் ப்ரீபெய்டு ரீசார்ஜ் விலையை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜியோ போனை 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அதன் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.155 பிளானின் விலை ரூ.186 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் 28 நாள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.185 பிளானின் விலை ரூ.222 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் தினமும் 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 336 நாள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.749 பிளானின் விலை தற்போது ரூ.899 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.


    ஜியோ போனை வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1999, ரூ.1499 மற்றும் ரூ.749 ஆகிய 3 பேக்குகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வாங்கலாம். இதில் ரூ.749 திட்டத்தின் விலையை மட்டும் தற்போது அந்நிறுவனம் ரூ.899 ஆக உயர்த்தி உள்ளது. இந்த விலையேற்ற அனைத்து ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் பிளான்களின் விலைகளை விரைவில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாம். இந்த ஆண்டு தீபாவளிக்குள் மேற்கண்ட நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.

    Next Story
    ×