search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போன்
    X

    ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போன்

    • ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது GT நியோ 3T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
    • புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் இந்திய சந்தையில் ரூ. 29 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வருகிறது.

    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. "ரியல்மி பெஸ்டிவ் டேஸ்" சிறப்பு விற்பனையின் அங்கமாக புதிய ரியல்மி GT நியோ 3T மாடல் ரூ. 7 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வருகிறது. அந்த வகையில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் 80 வாட் சார்ஜிங் வசதி கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ரியல்மி GT நியோ 3T பெற்று இருக்கிறது.

    ரியல்மி GT நியோ 3T அம்சங்கள்:

    புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் AMOLED E4 ஸ்கிரீன், FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை எக்ஸ்டெண்டட் ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார், 5ஜி, வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக இதே ஸ்மார்ட்போன் இந்தோனேசிய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு இதன் விலை IDR 54 லட்சத்து 99 ஆயிரம், இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் டேல் எல்லோ, ட்ரிப்டிங் வைட் மற்றும் ஷேட் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.

    Next Story
    ×