என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
டென்னிஸ்
டேவிஸ் கோப்பை டென்னிஸ்- முதல் ஆட்டத்தில் டென்மார்க் வீரரிடம் யுகி பாம்ப்ரி தோல்வி
- அனுபவம் வாய்ந்த டென்மார்க் வீரரின் சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார்.
- மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார்
ஹில்லராட்:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்-1 சுற்றில் இந்தியா - டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் டென்மார்க்கின் ஹில்லராட் நகரில் நடைபெற்று வருகின்றன. முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, உலகின் 9ம் தரநிலை வீரரான ஹோல்கர் ரூனேவை சந்தித்தார்.
ஆரம்பம் முதலே ரூனேயின் கை ஓங்கியிருந்தது. அனுபவம் வாய்ந்த அவரது சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார். ஆனாலும் இப்போட்டியில் வெறும் 58 நிமிடங்களில் 2-6, 2-6 என்ற நேர்செட்களில் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். இதன்மூலம் 0-1 என இந்தியா பின்தங்கி உள்ளது.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார். இந்த போட்டியில் இந்திய வீரர் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதன்பின்னர் மாற்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த சுற்றில் இந்தியா தோல்வியடைந்தால் உலக குருப்-2 நிலைக்கு பின்தள்ளப்படும்.