என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
TNLGanesh
About author
- இன்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார்.
- மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாம்பவர் வடகரை:
சாம்பவர் வடகரை மேலூர் உலைக்கூட தெருவை சேர்ந்தவர் வேல். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுகத்தம்மாள் (வயது65). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சாம்பவர் வடகரை அருகே உள்ள தோட்டத்திற்கு ஆறுமுகத்தம்மாள் சென்றார். சிறிது நேரத்தில் அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
- கையெழுத்து இயக்கத்தை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார்.
தென்காசி வடக்கு மாவட்ட சிறுபான்மை உரிமை நல அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான ஆயுதம் கையெழுத்திட்ட அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட அமைப்பா ளர் நாகூர் கனி, மாவட்ட தலைவர் மரியலூஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்ற 1,000 அட்டைகளை சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கினர்.
தொடர்ந்து தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்டம் சார்பாக கையெழுத்து இயக்கத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்ம நாபன், நகர செயலாளர் பிரகாஷ், சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட துணைத் தலைவர் ஞானையா எழிலன், மாவட்ட துணை அமைப்பா ளர்கள் பாதுஷா, அப்துல் காதர், திவான் அலி, பாண்டித்துரை, மைதீன் கனி, அப்துல் ஜாபர், மாவட்ட விளையாட்டு மேம் பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் தொ.மு.ச. மகாராஜன், கேபிள் கணேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், சுரண்டை, கடையநல்லூர், கடையம், இடைகால், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து ஓட்டுநர் நல சங்கத்தை சேர்ந்த வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், வரி உயர்வு சம்பந்தமாக தெளிவு வேண்டும், ஆயுள் வரியை 15 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும், சொந்த பயன்பாடு வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை கண்டிக்க வேண்டும், ஆன்லைன் அபராதங்களை தடை செய்தல், சாலை வரிகளை கட்டுவதற்கு கால அவகாசம் அளித்தல், சாலை வரிகளை கட்டிய வாகனங்களுக்கு எப்.சி. காட்டுவதற்கு கால அவகாசம் வழங்குதல் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
அவர்களுடன், தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதி மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ஆனந்த், செயலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நியமனம் செய்யப்படு வோருக்கு மாதம் ரூ.20,000/- தொகுப்பு ஊதியம் மட்டும் வழங்கப்படும்.
- விண்ணப்பத்தாரர் எவ்விதமான குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணியமைப்பு, குற்ற வழக்குகள் தொடர்பான வழக்குகள் மற்றும் மேல்முறையீடுகளில் வரைவு வாதுரை, எதிர்வாதுரை தயார் செய்வதற்கு உதவியாக ஒரு சட்ட அலுவலர் பணியிடம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே அந்த பதவிக்கு கீழ்கண்ட விதிகளின் தகுதி உள்ளவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். நியமனம் செய்யப்படு வோருக்கு மாதம் ரூ.20,000/- தொகுப்பு ஊதியம் மட்டும் வழங்கப்படும் பிற படிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.
அலுவலராக பணி நியமனம் செய்யப்படுபவர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் பி.எல். சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது 5 வருட ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் தனது சட்டப் படிப்பினை தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 5 வருடம் உயர்நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் பணியமைப்பு, குற்றம் தொடர்பான வழக்குகளில் வாதாடியிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தாரர் எவ்விதமான குற்ற வழக்கு களிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. சட்ட அலுவலர் பணியிடம் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும்.
எனவே தகுதியான நபர்க ளிடமிருந்து விண்ணப்ப மனு மற்றும் அவர்களின் சுய விபரத்துடன் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருகிற 4.12.2023-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
- புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி தாலுகா விஸ்வநாதபேரி கிராமம் பாகம் 1-ஐ சேர்ந்த வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இக்கண்மாய் மூலம் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வெளியே செல்லக்கூடிய கலிங்கல் மடை அருகே 5 அடி ஆழத்தில் மண் திருடப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், ராஜபாளையம் மேல்வைப்பாறு நீர் நிலை கோட்டம் உதவி பொறியாளர், காவல் துறையினர் ஆகியோருக்கு, வழிவழி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பாக சங்கத் தலைவர் க.சிவசுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. வெங்க டேசன், பொதுப்பணித்துறை சார்பில் இளநிலை பொறியாளர் கண்ணன், வருவாய் துறை சார்பில் சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அது சம்பந்தமான அறிக்கையை தங்களுடைய மேலதிகாரி களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- விருது பெறுவோருக்கு தங்கப்பதக்கம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சர்வதேச மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் இந்த விருது பெறுவோருக்கு 8 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளது. அவ்வையார் விருதுக்கான கருத்துருக்களை தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தின் (https://awards. tn.gov.in) 20.11.2023-க்குள் சமர்பிக்க குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது அடுத்த மாதம் 10-ந் வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குருக்கள்பட்டி முதல் மேலநீலிதநல்லூர் வரை சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருக்கள்பட்டி முதல் மேலநீலிதநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் முன்னிலை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பலவேசம், மேலநீலிதநல்லூர் கிளை செயலாளர் சண்முகப்பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி வெள்ளத்துரை, ஆத்மா, சேர்மன், கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டியன், முருகன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை, ஒப்பந்ததாரர் சண்முகாதேவி, வீரபாண்டியன், அழகியபாண்டியபுரம் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.
- நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலவாரிய நலதிட்ட உதவிகள், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.94 ஆயிரத்து 500 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 வீதம் மொத்தம் ரூ.32ஆயிரத்து 874 மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்களையும், தாட்கோ மூலம் 14 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரிய அட்டைகளையும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 374 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார். மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 365 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்ப ந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சங்கர் அரியப்பபுரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார்.
- பிரிண்டிங் பிரஸ்சுக்கு பயன்படுத்தி வந்த கெமிக்கலை குடித்து ராஜம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் சிவசுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜம்(வயது 29). இவர்களுக்கு நவிஷ்காஸ்ரீ (5), அரிஹரபாலன் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். சங்கர் அரியப்பபுரம் பகுதியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இதனால் மன விரக்தியில் இருந்து வந்த ராஜம் நேற்று வீட்டில் இறந்து கிடந்தார். கணவர் இறந்த துக்கத்தில் பிரிண்டிங் பிரஸ்சுக்கு பயன்படுத்தி வந்த கெமிக்கலை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
- நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
செங்கோட்டை:
செங்கோட்டை வடக்கு ரதவீதி அப்பா மாடசாமி கோவில் முன்பு வீர வாஞ்சி திடலில் தென்காசி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பில் 98-ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரமம் அகிலானந்த மகராஜ் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.
பேரணியானது வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி, கே.சி. ரோடு, வண்டிமலைச்சி அம்மன் கோவில், சேர்வைகாரன் புதுத்தெரு, ஜவஹர்லால் ரோடு வழியாக வந்து அப்பாமாடசாமி கோவில் அருகில் நிறைவடைந்தது.
பின்னா் நடந்த பொதுக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவா் குருமூர்த்தி தலைமை தாங்கினார். கன்னியாகுமரி கோட்ட செயலாளா் ஜேதீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா். பேரணியில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர்.
- பாழடைந்த கட்டிடங்களை இடித்து பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் வாகன நெரிசல்கள் குறைந்து விடும்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜசேகர பாண்டியன் என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். மேலும் இக்கோவிலை சுற்றி அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளன.
எனவே இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நான்கு ரத வீதிகளில் சாலை யிலேயே நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண இப்பகுதியில் பார்கிங் வசதி இல்லை. கோவிலுக்கு எதிராக உள்ள 2427 சதுர மீட்டர் கொண்ட நிலமானது தொடக்கத்தில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலமாக இருந்து பின்னர் ஆங்கிலே யர் ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறையால் கையகப்படுத்தப்பட்டு அதில் தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமை யியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. நீதிமன்றங்கள் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப் பட்டு விட்டது. இதனால் அந்த நிலம் வெற்றிடமாக உள்ளது.
எனவே மேற்படி நிலத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றி அந்த நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் கோவிலை சுற்றி ஏற்படும் வாகன நெரிசல்கள் முற்றிலுமாக குறைந்து விடும்.
அதே நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கும், இந்து அறநிலைய துறைக்கும் மனு கொடுத்திருந்தேன்.
மனுவிற்கு அந்த இடத்தில் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அனுமதி அளித்து அரசின் நிதி ஒதுக் கீட்டிற்காக காத்திருப்பதாக பொதுப்பணித்துறையினர் பதில் அளித்துள்ளனர். குற்றாலத்திலோ, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவல கம் அருகில் கட்டப்படயி ருக்கும் மாவட்ட நீதிமன்றம் அருகிலோ நீதிபதிகள் குடியிருப்பு கட்டினால் உகந்ததாக இருக்கும். கோவில் முன்பு உள்ள அந்த நிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கார் பார்க்கிங் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது.
- கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பஜார் சாலையில் உள்ள துராப் சைபுல்லா ஹாஜா தர்கா கந்தூரி விழாவையொட்டி கடந்த 14-ந் தேதி பிறைக்கொடியேற்றம் நடைபெற்றது. 7-வது நாளான நேற்று கொடி ஊர்வலம் பகல் 2 மணிக்கு தொடங்கி அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக்கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பெரிய தெரு, புதுத்தெரு, பஜார்ரோடு, தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு இடங்கள் வழியாக யானை மீது பச்சை களை ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து சந்தனக் கூடும் நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு தர்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ராத்திப் மஜ்லீஸ் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சந்தனம் பூசுதல் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் மவுலதுசரீப் ஓதி நேர்ச்சை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஜமாத் தலைவர் பசுலுதீன், தர்கா பரம்பரை ஹக்தார் அனீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்