search icon
என் மலர்tooltip icon
    • கயத்தாறு அருகே உசிலாங்குளம் கிராமத்திதை சேர்ந்தவர் உபேந்திரன் (வயது 35).
    • இவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள உசிலாங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் உச்சிமாகாளி. இவரது மகன் உபேந்திரன் (வயது 35). இவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது, நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்துள்ளனர். வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். திருட்டு போன வீட்டில் பல்வேறு இடங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

    • இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா பரமன்குறிச்சி அருகே குருநாதபுரத்தில் நடைபெற்றது.
    • சமய வகுப்புகளில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிகள், ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி, இந்து அன்னையர் முன்னணி சார்பில் 25 கிராமங்களில் 10 நாட்கள் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா பரமன்குறிச்சி அருகே குருநாதபுரத்தில் நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளரும், மாவட்ட இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளருமான கேசவன் தலைமை தாங்கினார். இந்து அன்னையர் முன்னணியின் மாவட்ட தலைவி சந்தனக்கனி, மாவட்ட செயலர் சொர்ணசுந்தரி, பரமன்குறிச்சி நகர செயலர் லட்சுமணன், பா.ஜனதா விவசாய அணி பொதுச்செயலர் வரதன், வார்டு உறுப்பினர் வாசகி, உடன்குடி நகர இந்து முன்னணி செயலர் ஆத்திசெல்வம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்து ஒற்றுமை, இந்துக்களின் சமய சடங்குகள் அன்றாட நடைமுறைகளில் அறிவியல், பாரத நாட்டின் பழம் பெருமைகள் குறித்து இந்து அன்னையர் முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாயக்கூத்தன், இந்து முன்னணி மாநில பொதுச்செயலர் அரசு ராஜா ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து இந்து சமய வகுப்புகளில் பங்கேற்ற சிறுவர்-சிறுமிகள், ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலைராணி, பத்திரசீதா, அனிதா, சந்திரா, ஷிபா, இசக்கியம்மாள், இசக்கி கனி, பாரதி, கோபிகா, தங்கசெல்வி, முத்துலட்சுமி, சுயம்புக்கனி, சரஸ்வதி, தமிழரசி, செல்வி, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, ஆனந்தி, பட்டுரோஜா, முத்துகனி, வனசுந்தரி, முருகன், பால்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
    • முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத்தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக் வழங்கினர்.

    உடன்குடி:

    உடன்குடி பெரிய தெரு இமாம் மகளிர் அரபிக் கல்லூரியில் 18-வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழாக்கள் 4 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் அபு உபைதா தலைமை தாங்கினார்.வரலாற்று கண்காட்சியை ம.ம.க. மாநில நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில் பெண்களுக்கு சிறப்பு பயான், மாணவிகளின் சிற்றுரைகள், மாணவிகள், உலமாக்களின் பட்டிமன்றங்கள், கருத்தரங்கம், பல்வேறு அரபிக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பட்டமளிப்பு விழாவிற்கு சாலிஹாத் டிரஸ்ட் பொருளாளர் கலீலூர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆண்டறிக்கையை கல்லூரி முதல்வர் ஜஹபர் சாதிக் சிராஜி வாசித்தார்.

    முஸ்லிம் பட்டங்களை கல்லூரி நிறுவனத்தலைவர் இமாம் அபு உபைதாவும், கணினி சான்றிதழ்களை மதரஸா காப்பாளர் அப்துல் ரபீக், தையல் சான்றிதழ்களை ஜக்கரியாவும் வழங்கினர். கல்வியின் நோக்கம், ஒழுக்கமான வாழ்க்கைக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் ஆகியவை குறித்து ஒய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ஹாஜி அப்துல் கரீம் பேசினார். உடன்குடி ஓன்றிய அளவில் 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ்பேகம், சித்தி ஷபீனா, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சலீம், மகபூப் மற்றும் திரளான இஸ்லாமிய அறிஞர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

    • போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை 5.15 மணி நடைபெறுகிறது.
    • 11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எ, பி, சி, டி. என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற உள்ளது.

    தினமும் 4 போட்டிகள்

    போட்டிகளின் தொடக்கவிழா இன்று மாலை 5.15 மணி நடைபெறுகிறது. புது டெல்லி ஆக்கி இந்தியா மூலம் தேசிய மற்றும் சர்வதேச நடுவர்கள் நியமிக்கப்பட்டு தினமும் காலை 6.30, மாலை 4.30, 6.30 மற்றும் இரவு 8.15 என மொத்தம் 4 போட்டிகள் நடைபெற உள்ளன.

    11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 சிறந்த அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை எ, பி, சி, டி. என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    முதல் பரிசு ரூ. 1 லட்சம்

    ஏ பிரிவில் புது டெல்லி பஞ்சாப் நேஷனல் பாங்கு அணி, பெங்களூர் ெரயில் வீல் பேக்டரி, மும்பை நிஸ்வாஸ் ஆக்கி அணி, சென்னை இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் அணியும், பி பிரிவில் புதுடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி, மும்பை யூனியன் பாங்க் அணி, ஹூப்பள்ளி சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே அணி, கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி, சி பிரிவில் சவுந்திராபாத் சவுத் சென்ட்ரல் ெரயில்வே அணி, பெங்களூரு கனரா பாஙக் அணி, புனே கஸ்டம்ஸ் அணி, சென்னை இந்தியன் பாங்க் அணி, டி பிரிவில் புதுடெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் பிரோமோஷன் போர்டு அணி, சென்னை சென்ட்ரல் எக்ஸிஸ் அணி, பெங்களூரு சாய் எஸ்.டி.சி. அணி, சென்னை தமிழ்நாடு போலீஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

    சுழற்கோப்பை

    போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. போட்டிகளில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ. 1 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு

    ரூ. 75 ஆயிரமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 50 ஆயிரமும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 30 ஆயிரமும், லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் வழங்கப்பட உள்ளது.

    மேலும் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. ரூ. 25 ஆயிரம் வீதம் வழங்கப்பட

    உள்ளது. நடுவர்களால் தேர்வு செய்யப்படும் சிறந்த முன்கள ஆட்டக்காரர், பின்கள ஆட்டக்காரர், நடுகள ஆட்டக்காரர் மற்றும் சிறந்த தடுப்பாளர் விருதுகள் தனி நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    இத்தகவலை நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முக வேல் தெரிவித்துள்ளார்.

    • மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்திலும் சீரான குடிநீர் வழங்கப்படுகின்றது.
    • மக்கள் தங்களின் மேலான கருத்துக்களை வாட்ஸ்-அப் எண்ணான 7397731065 மூலமாகவும் ,மின் அஞ்சல் தளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகர மக்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி பதவியேற்ற கடந்த ஓராண்டில் மாநகராட்சிக்குட்பட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்.

    மாநகர மக்களுக்கு தற்போது கோடை காலத்தி லும் சீரான குடிநீர் வழங்கப் படுகின்றது. மேலும் சீர்மிகு நகரமாகவும் சிறந்த மாநகராட்சியாகவும் தூத்துக்குடி மாநகராட்சியை மாற்றிடவும் மக்கள் தங்களின் மேலான கருத்துக் களையும் வாட்ஸ்-அப் எண்ணான 7397731065 மூலமாகவும் மின் அஞ்சல் தளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம். https://tinyurl.com/rj8snbvm, Android Users @ Playstore https://tinyurl.com/mwf47eew, IOS Users @ Appstore https://tinyurl.com/4wduufea. இது போன்ற திட்டத்தின் மூலம் பெறப்படும் கருத்துக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்த்த அலுவலர்களுடன் இணைந்து உடனடியாக பரிசிலிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து ஜெயிலானி தெரு பகுதியில் நடைபெற உள்ள புதிய தார் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மாமன்ற உறுப்பினர் மும்தாஜ், தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது மே 18 தின இன எழுச்சி பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டி யாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.
    • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப் பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது மே 18 தின இன எழுச்சி பொதுக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டி யாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.

    இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப் பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார். கட்சி சார்பில் மே 18 தின முதல் மாநாடு பொதுக்கூட்டம் மதுரையில் நடை பெற்றது. 12-வது மாநாடு சென்னையில் நடை பெற்றது.13-வது மாநாடு இன்று மாலை தூத்துக்கு டி-எட்டையாபுரம் சாலை சுங்கச்சாவடி அருகே புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெறுகிறது.

    மாநாட்டு விழா ஏற்பாடு களை மாநில ஒருங்கிணைப் பாளர்கள் வக்கீல் சிவக் குமார், இசைமதிவானன், மண்டல ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகி கள் முன்னிலையில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் கா.வள்ளி தூத்துக்குடி மாவட்டம் இரா. பட்டாணி, ஜெ.ரெஜின் மற்றும் அனைத்து மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி அங்கன்வாடி மையம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
    • தொடர்ந்து கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வேலிடுபட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட கட்டுமானப் பணிகள் தொடக்க விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, மேலநம்பிபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உட்பட கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
    • நேற்று மதியம் 39-வட்ட அ.தி.மு.க. செயலாளரும், பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம், துணைச்செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேக, தீபாராதனை நடைபெற்று வருகிறது.

    பால்குட ஊர்வலம்

    விழாவையொட்டி நேற்று காலை கும்பபூஜை, பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, படையல் கஞ்சி வாருத்தல் நிகழ்ச்சி, மாலை மாவிளக்கு பூஜை, பொங்கல் இடுதல் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு படைப்பு தீபாராதனை நடைபெற்றது.

    முன்னதாக நேற்று மதியம் 39-வட்ட அ.தி.மு.க. செயலாளரும், பகுதி இளைஞரணி செயலா ளருமான திருச்சிற்றம்பலம், துணைச் செயலாளர் டைகர் சிவா ஏற்பாட்டில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமை ச்சரும், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சண்முக நாதன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் தொழில திபர் தெய்வநாயகம், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், அவைத்தலைவர் திருப்பா ற்கடல், சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர், மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, பகுதி செயலா ளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சேவியர், வக்கீல்கள் மந்திரமூர்த்தி, சரவண பெருமாள், முனிய சாமி, வட்ட செயலாளர்கள் முருகன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ் கிருஷ்ணன், சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.
    • இன்று மாலை தூத்துக்குடி யில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தில் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் ‘இந்தியாவின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

    தூத்துக்குடி:

    நாகலாந்து மாநில கவர்னர் இல. கணேசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.

    அவருக்கு தமிழக பா.ஜ.க. வர்த்தக அணி தலைவர் ராஜா கண்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், பொதுச் செயலாளர் உமரி சத்திய சீலன், விவேகம் ரமேஷ், வீரமணி, மாதவன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்த னர்.

    அப்போது நிருபர்களை சந்தித்த கவர்னர் இல.கணேசன் 'அனைவருக்கும் வணக்கம், பேட்டி வேண்டாம்' என கூறிவிட்டு அங்கிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்.

    இன்று மாலை தூத்துக்குடி யில் அகில இந்திய வர்த்தக தொழி ற்சங்கத்தில் தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் 'இந்தியாவின் முன்னேற்றம்' என்ற தலைப்பில் நடைபெற உள்ள கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார்.

    கவர்னர் இல. கணேசன் வந்த அதே விமானத்தில் மொரிசியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங்கும் தூத்துக்குடி வந்தார். பின்னர் அவர் நெல்லையில் நடை பெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார்.

    • உடன்குடி ஓன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடைகால இந்துசமய பண்பாட்டு வகுப்புகள் கடந்த 1 -ந் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது.
    • இந்து ஓற்றுமை, பாரத நாட்டின் பழம் பெரும் கலாச்சாரம், இந்து சமயத்தின் அறிவியல் உண்மைகள் குறித்து திருச்சி தர்மபிரசார வீரராகவன் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடிதேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் இந்துசமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு, மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

    சேவாபாரதி அமைப்பின் சார்பில் உடன்குடி ஓன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடைகால இந்துசமய பண்பாட்டு வகுப்புகள் கடந்த 1 -ந் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது.இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள், பயிற்சியளித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் மேலாளர் சாத்தாக்குட்டி தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மநாபன், உடன்குடி ஓன்றிய பா.ஜ.க. மகளிரணி தலைவி தமிழ்செல்வி, ஓன்றிய பா.ஜ.க. தலைவர் அழகேசன், ஓன்றிய துணைத்தலைவி சாந்தி, மகராசி, சுயம்பு, மாயாண்டி, சுபாஷ்ராஜா, தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் வரவேற்றார். இந்து ஓற்றுமை, பாரத நாட்டின் பழம் பெரும் கலாச்சாரம், இந்து சமயத்தின் அறிவியல் உண்மைகள் குறித்து திருச்சி தர்மபிரசார வீரராகவன் பேசினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலர் ரா.சிவமுருகன் ஆதித்தன் பரிசுகளை வழங்கி பல்வேறு இந்து சுவாமிவேடங்கள் அணிந்து வந்த சிறுவர்களை பாராட்டினார்.நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சுடலைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரப்பாண்டி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.
    • முதல் நாள் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம் உட்பட்ட கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று தொடங்கியது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை கலெக்டர் நாணயம் பங்கேற்று மனுக்கள் பெற்றார்.

    முதல் நாள் ஸ்ரீவெங் கடேஸ்வரபுரம் குறு வட்டத்துக்குட்பட்ட மீரான்குளம், 1, 2 கிராமம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், கருங்கடல், கட்டாரிமங்கலம், பழங்குளம் கிராமமக்களிடம் பட்டாமாறுதல், முதியோர் உதவிதொகை கேட்டு 145 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் தாசில்தார் ரதிகலா, தங்கையா, கலெக்டர் அலுவலக மேலாளர் இளங்கோ, அலுவலர்கள் ஜவகர்லால், ஜெயச்சந்திரன், பழனி வேலாயுதம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலாதேவி, மாசானமுத்து உள்ளிட்ட வர்கள் பங்கேற்ற னர்.

    2-ம் நாளான இன்று ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் குறுவட்டம் பிடானேரி, எழுவரைமுக்கி கிராமம், சாத்தான்குளம் குறு வட்டம் பன்னம்பாறை, சாத்தான்குளம், செட்டி யிருப்பு, புதுக்குளம், ஆகிய கிராமத்துக்கும், நாளை (18-ந்தேதி) நெடுங்குளம், கோமானேரி, கொம்பன்குளம், தச்சமொழி ஆகிய கிராம மக்களுக்கும், பள்ளக்குறிச்சி குறு வட்டத்துக்குள்பட்ட முதலூர், பள்ளக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஆகிய கிராமத்துக்கும், 19-ந்தேதி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, அரசூர் பகுதி 1, 2, திருப்பணி புத்தன்தருவை, படுக்கப்பத்து ஆகிய கிராம மக்களிடமிருந்தும் மனுக்கள் பெறப்படுகிறது.

    • ஆறுமுகநேரியில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா மற்றும் சித்திரை கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது.
    • 3-வது நாளான நேற்று காலையில் சோமநாத சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் வருடாந்திர கும்பாபிஷேக விழா மற்றும் சித்திரை கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாளன்று காலையில் கணபதி ஹோமம், யாக பூஜையை தொடர்ந்து அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவில் திருவிளக்கு பூஜை, வில்லிசை, சிறப்பு ஆராதனையும் நடந்தன. 2- வது நாள் மதியம் சுவாமிகள் மஞ்சள் நீராடி கடல் தீர்த்தம் எடுத்து வருதலும், கும்ப வீதி உலாவும் நடந்தன. 3-வது நாளான நேற்று காலையில் ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து அம்மன் கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் மஞ்சள் நீராடி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வந்து கும்ப வீதி உலா நடைபெற்றது. பின்னர் அம்மன் சப்பர பவனி நடந்தது.பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்கார பூஜையும், பொங்கல் வழிபாடும் நடந்தது. இன்று அதிகாலையில் மஞ்சள் நீராட்டு மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான பாலமுருகன், கண்ணன், மாடசாமி, முத்து ராமலிங்கம், ராஜ்குமார், சுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×