என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- குளத்தூரில் புதிய கால்நடை மருத்தகம் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
- நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூரில் ரூ.52-லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்தகம் புதிய கட்டிடம் கட்டும் பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் கோகுல், கால்நடை ஆய்வாளர் சுசிலா, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, நகர செயலாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி தலைவர் மாலதி, ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி, மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியராஜன், செல்வ பாண்டி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, துணை செயலாளர் ராஜபாண்டி, ஊராட்சி துணைத் தலைவர் முத்துச்செல்வி, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முருகேசன், மாவட்ட துணை அமைப்பாளர் மாதவடியான், ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேச செல்வின், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, கிளை செயலாளர்கள் பரமசிவ பாண்டியன், செல்வராஜ், சொரிமுத்து, அன்னாசிமுத்து
பெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி பாரதிதாசன், முனியசாமி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 25 மாணவ -மாணவிகள் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
- மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
தென்திருப்பேரை:
ஏரல் அருகிலுள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தரம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்புகள் கடந்த 75 நாட்களாக நடைபெற்று வருகிறது.
பயிற்சி வகுப்பு
அதில் இடையர்காடு கிராமத்தின் பள்ளியில் படிக்கும் சுமார் 25 மாணவ -மாணவிகள் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த வகுப்பில் மாணவர்களுக்கு இந்து சமயத்தின் ஸ்லோகம், மந்திரம், பஜனை பாடல்கள், யோகா மற்றும் செய்முறை பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது.
கல்வி உபகரணம்
பயிற்சி வகுப்பின் கடைசி நாளான நேற்று ஓய்வு பெற்ற வன இலாகா அதிகாரி ஏமராஜா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான புத்தகப்பை, குடிநீர்பாட்டில், நோட்டு, புத்தகம், ஸ்கெட்ச், பென்சில் பாக்ஸ் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கினார். மேலும் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகக்குழு செயலாளர் செல்லப்பாண்டி, ஊர் பொதுமக்கள் சின்னத்துரை, செந்தூர்பாண்டி, ராஜபாண்டி, தங்கராஜ், ராமர், அரிகிருஷ்ணன், ஜெயபால், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒருங்கிணைப்பாளர் ஜெயராணி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா மற்றும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
- 4 முதல் 8 -ம் வகுப்பு படிக்கும் 60 மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் தீவு தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளியின் கல்வித்துறை இல்லம் தேடி கல்வி மற்றும் வானவில் மன்றம் சார்பில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா மற்றும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட தொடக்க கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகராட்சி துணை தலைவர் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி வரவேற்று பேசினார். திருச்செந்தூர் ஆசிரியர் பயிற்றுநர் நபில் புகாரி தொடக்க உரை நிகழ்த்தினார். காயல்பட்டினம் நகராட்சி வார்டு கவுன்சிலர் தஸ்னவிஸ் ராணி, ஆசிரிய பயிற்றுநர்கள் ஜெகதீஸ் பெருமாள், மேடையாண்டி, ஆறுமுகநேரி ஆதவா தொண்டு நிறுவனர் பாலகுமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் ஜானகி, ஆனந்தி, புவனா மற்றும் சுலைகா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் வானவில் மன்ற பயிற்சியாளர் பரிபூரண ஸ்டெல்லா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ரஹ்மத் மஸ்கூரா ஆகியோர் 4 முதல் 8 -ம் வகுப்பு படிக்கும் 60 மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியை தனபாய் நன்றி கூறினார்.
- கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கியது.
- விழாவில் பால்குட ஊர்வலம், அக்னிசட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் விஜயலட்சுமி, கசமாடசாமி, வைரவன், கருப்பசாமி, கழுமூர்த்தி கோவில் கொடை விழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினமும் முளைப்பாரி பாடல்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கொடை விழா கடந்த இந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பால்குட ஊர்வலம், அக்னிசட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. மேலும் விழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். கொடைவிழாவில் ஆடல், பாடல், வில்லிசை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் பொங்கலிட்டும், கிடா வெட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் நாட்டாண்மை உடையார் பாண்டியன் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.
- விடுதியில் தங்குமிடம், சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
- மாணவர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் தாட்கோ நிதி மூலம் ரூ. 2 கோடியே 51 லட்சம் செலவில் புதிய ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ. ஆய்வு
அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிட மாணவர் விடுதியில் சண்முகையா எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி விடுதியை திறந்து வைத்தார்.
பின்னர் மாணவர் விடுதியில் தங்குமிடம், உணவு அருந்தும் இடம் மற்றும் சமையலறை ஆகியவற்றை எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
அப்போது மாணவ ர்களுக்கு அட்டவணையில் உள்ள உணவு சரியான முறையில் வழங்க வேண்டும் என விடுதி காப்பாளரிடம் அறிவுறுத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாட்கோ செயற்பொறியாளர் பால்ராஜ், ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், வட்ட வழங்க அலுவலர் கருப்பசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார், விடுதி காப்பாளர்கள் வேல்முருகன், சுரேஷ், முத்துசெல்வம், முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ராதேவி, கனகரத்தினம், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், இளையராஜா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாநாடு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.
- மே 18 இன எழுச்சி 12-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் மாநாடு
நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது இன எழுச்சி மாநாடு வருகிற நாளை மறுநாள் (18-ந் தேதி) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.
மே 18 இன எழுச்சி முதல் மாநாடு மதுரையில் நடைபெற்றது. 12-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. 13-வது மாநாடு தற்போது தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெறுகிறது.
சீமான் ஆலோசனை
இதில் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள கட்சியினர், தமிழர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டு ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவக்குமார், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் இசை மதிவானன், மண்டல ஒருங்கி ணைப்பாளர்கள் தூத்துக்குடி ராஜசேகர், நெல்லை சத்யா, கன்னியாகுமரி பெல்வின்ஜோ, தென்காசி அருண்சங்கர் மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
மே 18 இன எழுச்சி மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை தூத்துக்குடி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்