என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- 10 ஆயிரத்து 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 91.28 சதவீதம் ஆகும்.
- மாநில அளவில் தென்காசி மாவட்டம் 10-ம் இடத்தை பெற்றுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியானது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 126 மாணவர்களும், 11 ஆயிரத்து 274 மாணவிகளும் என 22 ஆயிரத்து 400 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 10 ஆயிரத்து 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 91.28 சதவீதம் ஆகும். மாணவிகள் 10 ஆயிரத்து 942 பேர் தேர்வாகி 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 98 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.19 சதவீதமாகும்.
தமிழக அளவில் நெல்லை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 9-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 29-வது இடத்தில் இருந்தது. தற்போது 9-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 303 மாணவர்கள், 9 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 8 ஆயிரத்து 521 மாணவர்களும், 9 ஆயிரத்து 41 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.12 சதவீதமாகும். மாநில அளவில் தென்காசி மாவட்டம் 10-ம் இடத்தை பெற்றுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 752 மாணவர்கள், 11 ஆயிரத்து 249 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 1 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 10 ஆயிரத்து 33 மாணவர்களும், 10 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 29 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 95.58 சதவீதமாகும். தூத்துக்குடி மாவட்டம் தமிழக அளவில் 5-வது இடத்தை பிடித்தது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
- ஈரடுக்கு மேம்பாலத்தின் பராமரிப்பு பணி ரூ.2.83 கோடியில் நடை பெற்று வருகிறது.
- பாலத்தின் சுவர் எப்படி இடிந்து விழுந்தது என்ற உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் இன்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டர் கார்த்திகேய னிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் பராமரிப்பு பணி மாநகராட்சி நிர்வாக த்தால் ரூ.2.83 கோடியில் நடை பெற்று வருவதாக அறிகிறோம். அந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தாரர் எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்லது பாதுகாப்பு வளையங்களோ ஏற்படுத்தாமல் திறந்த வெளியில் மக்கள் நடமா ட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இது போன்ற பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தொந்தரவு ஏற்படும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதை கண்காணிக்க கூடிய மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தின் காரணமாக கடந்த 3-ந் தேதி கொக்கிர குளத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற முதியவர் இந்த பாலத்தின் அருகே சென்றபோது அதன் பக்கவாட்டு சுவரில் கல் இடிந்து விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்தக்காரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது அலட்சியப் போக்கு மற்றும் மரணத்தை உண்டாக்குதல் போன்ற பிரிவுகளில் நடவடி க்கை எடுக்க வேண்டி அவரது உறவி னர்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுப்பதில் தா மதம் செய்து வருகின்றனர்.
அந்த பாலத்தின் சுவர் எப்படி இடிந்து விழுந்தது என்ற உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். அலட்சியப்போக்கால் ஏற்பட்ட இந்த உயிரிழப்பி ற்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் இழப்பீடாக அந்த முதியவரின் குடும்பத்தி னருக்கு வழங்க வேண்டும். மேலும் அலட்சி யமாக செயல்பட்ட அதிகா ரிகள் மீது துறை ரீதியான நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அப்போது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணை செய லாளர் பள்ளமடை பால முருகன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் பால் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி. ஆதித்தன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துபாண்டி, பகுதி செயலாளர்கள் சிந்து முருகன், காந்தி வெங்கடா சலம், திருத்து சின்னத்துரை, ஒன்றிய செயலாளர் ராம சுப்பிர மணியன், கவுன்சிலர் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் ஜெய்சன் புஷ்பராஜ், பாறையடி மணி, டால் சரவணன், தாழை மீரான், மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் விக்னேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- கேன்டீன் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
- கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது.
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் நடவடிக்கையின் பேரில் தலையணையில் வனத்துறை சார்பில் கேன்டீன் திறக்கப்பட்டது.
அருங்காட்சியகம்
இங்கு ஐஸ்கிரீம், டீ, காப்பி, குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சுற்றுலா பயணிகளும் குளித்து விட்டு, உணவு பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர். கேண்டீனில் விற்பனையும் அதிகரித்து வந்தது.
அதுபோல அதே கட்டிடத்தில் மற்றொரு பகுதியில் அருங்காட்சியகமும் செயல்பட்டு வந்தது. இதில் வனவிலங்குகளின் மாதிரிகள், அவைகளின் சத்தம் எழுப்பும் கருவிகள், பல்வேறு வகையான மீன்கள் உள்ளிட்டவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனையும் சுற்றுலா பயணிகள் பார்த்து இன்புற்றனர்.
மீண்டும் திறக்க வலியுறுத்தல்
இதனிடையே கொரோனா தடை உத்தரவால் கடந்த 2018-ம் ஆண்டு கேன்டீனும், அருங்காட்சியகமும் மூடப்பட்டது. அதன்பின் 4 ஆண்டுகளாக இதுவரை கேன்டீன், அருங்காட்சியகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிப்படைவதுடன், கட்டிடமும் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது.
எனவே மூடப்பட்டுள்ள கேன்டீன் மற்றும் அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன.
- வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பை வழங்கப்படுகிறது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா க.உவரியில் மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இப்போட்டியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் போட்டியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், சுழற்கோப்பையும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கம், சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமெச்சியார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், க.உவரி ேஜக்கப், ரமேஷ், எழில் ஜோசப், காமில், சுடலைமணி, முத்தையா, டென்னிஸ் மற்றும் விளையாட்டு வீரர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ரூ.1-க்கு வாங்க கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
- இன்று ஒரே நாளில் 612 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒரு நபர் கொண்டு வந்து ஒப்படைத்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி சார்பில் நெகிழி இல்லா நெல்லையை உருவாக்கும் விதமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்கள்
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், வாறுகால் உள்ளிட்ட வற்றில் வீசப்படு வதை தடுக்க புதிய முயற்சியாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ரூ.1-க்கு வாங்க கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
இந்த திட்டத்தை முதன் முதலாக நெல்லை மண்டலத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டு உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் தண்ணீர் பாட்டில்கள் ஒன்றுக்கு ரூ.1 விலை கொடுத்து வாங்கப்பட்டது.
25 ஆயிரம்
இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இன்று வரை கொள்முதல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 612 பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை ஒரு நபர் கொண்டு வந்து ஒப்படைத்தார்.
- விரைவில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பஸ் நிலையத்தின் உட்பகுதி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
95 சதவீதம் பணிகள்
சுமார் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் அதன் உட்பகுதி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்துக்கு புதிதாக மின்சாரம் வழங்குவது குறித்த ஆய்வு பணிகள் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆய்வு பணியில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, உதவி செயற் பொறியாளர்கள் தங்கமுருகன், சங்கர், நெல்லை மாநகராட்சி செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி செயற்பொறியாளர் லெனின் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
ஆய்வின் முடிவில் புதைவடம் வழியாக மின்சாரம் வழங்குவதற்கும், பஸ் நிலையத்திற்கு மின்தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின்சாரம் வழங்கும் சாதனமான வளைய சுற்று தர அமைப்பு அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்பட்டது.
- ரமேஷ் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
- செந்தாமரைக்கண்ணன் நகையை திருடியது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
வள்ளியூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் ரமேஷ் (வயது 36).
கதவு உடைப்பு
இவர் கடந்த 26-ந்தேதி தனது உறவினர் உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அன்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 கிராம் நகை திருடப்பட்டிருந்தது.
கைது
இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த நகையை திருடியது அதே பகுதியில் வசித்து வரும் செந்தாமரைக்கண்ணன் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர்.
- பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
நெல்லை:
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்கள் மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் வருடம் தோரும் கோடை விடுமுறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
135 பள்ளி வாகனம்
இந்நிலையில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஆர்.டி.ஓ. சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 135 பள்ளிகளை சேர்ந்த 511 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வின் போது, பள்ளி வாகனங்களில் வேகக்க ட்டுபாட்டு கருவி, கண்காணிப்பு காமிரா, முதல் உதவி பெட்டி, வாகனங்களின் படிக்கட்டு, இருக்கைகள், அவசர கால வழி, தீயணைப்பு கருவி மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உளளதா? என ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் டிரைவர்களுக்கு 108 மருத்துவ குழுவின் மூலம் முதல் உதவி சிசிக்சை பற்றிய விளக்கம் மற்றும் தீயணைப்பு துறை மூலம் டிரைவர்களுக்கு அவசர காலத்தில் தீயணைப்பானை பயன்படுத்தும் முறைப்பற்றி செயல்முறை அளிக்கப்பட்டது.
டிரைவர்களுக்கு அறிவுரை
மாணவர்களை பாது காப்பாக ஏற்றிச் சென்று விபத்தில்லாமல் இயக்குமாறும் மற்றும் வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிற்கு மாறும் அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்களை விழிப்புணர்வோடு சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டது.
- நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.
- முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மாநகரம் முழுவதும் பணிபுரியும் அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு உத்தர விட்டார்.
அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில், சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலையில் முதற்கட்ட மாக தச்சநல்லூர் மண்டலம் சிந்துபூந்துறை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை ரூ. 1,500 ஆகும். மேலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற சோதனைகள் செய்யப்பட்டது. இந்த பணியானது மாநகராட்சிக்கு கீழ் உள்ள அனைத்து சுகாதார மையத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து தொடங்கியது.
- வருகிற 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முடிவடைகிறது.
நெல்லை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை கடந்த 15-ந்தேதி பெங்களூரில் இருந்து தொடங்கி வருகிற 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் முடிவடைகிறது.
இதனையொட்டி கன்னியாகுமரியில் இருந்து இன்று நெல்லைக்கு வந்த ஜோதி யாத்திரை குழுவினரை நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமை யில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் காங்கிரசார் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கவி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் முரளி ராஜா, மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், ரசூல் மைதீன், துணைத் தலைவர்கள் வெள்ள பாண்டியன், குறிச்சி கிருஷ்ணன், உக்கிரன் கோட்டை செல்லபாண்டி, சிவன் பெருமாள், பாளை பகுதி மகாராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்க லிங்க குமார், பரணி சேகர், உதயகுமார், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன், மாவட்ட மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா மேரி, துணைத்தலைவி மெட்டில்டா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் உள்ள உணவு வணிக நிறுவனங்க ளில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு கடைகளில் உள்ளதா என கூட்டாய்வு செய்யப்பட்டது .
நெல்லை, மே. 18-
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்துதலின் பேரிலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசிதீபா வழிகாட்டுதலின் பேரிலும் நெல்லை டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் உள்ள உணவு வணிக நிறுவனங்க ளில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அலுவலர்கள் டைட்டஸ் பெர்னா ண்டோ, சங்கர லிங்கம், ராமசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் அடங்கிய குழுவினரால் தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு கடைகளில் உள்ளதா என கூட்டாய்வு செய்யப்பட்டது .
இந்த ஆய்வின்போது 10 கடைகளில் இருந்து 148 கிலோ நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் பயன்டுத்த, சில்லரை கடைகளுக்கு விநியோகம் செய்ய சுகாதாரமற்ற நிலையில் 3 சக்கர சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ஐஸ்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதுடன் அதனை தயாரித்து வினியோகம் செய்தவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
- ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் உள்ளது.
- ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் உள்ளது.
பக்கவாட்டு சுவர் இடிந்து விபத்து
கடந்த 3-ந்தேதி கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பால் பாக்கெட் வாங்குவதற்காக மொபட்டில் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இருந்த பெரிய அளவிலான கல் ஒன்று அவர் மீது விழுந்தது.
இதில் வேல்முருகன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
முதியவர் பலி
இந்நிலையில் இன்று அதிகாலை வேல்முருகன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணத்தை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்த அவரது உடலை சந்திப்பு போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்த ஈரடுக்கு மேம்பாலத்தில் ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்