search icon
என் மலர்tooltip icon
    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இதுவரை இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த அணிக்கு ரோவ்மேன் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

    ரோவ்மேன் பவல், அல்சாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்ட் மற்றும் ரோமரியோ ஷெப்பர்ட்.

    • கொல்கத்தா அணி தரப்பில் வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சால்ட் 5, சுனில் நரேன் 8 என வெளியேறினர். அடுத்து வந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி 13, ஷ்ரேயாஸ் அய்யர் 6, ரிங்கு சிங் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து வெங்கடேஷ் அய்யர் மற்றும் இம்பேக்ட் பிளேயராக வந்த மனிஸ் பாண்டே ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்தது.

    பொறுப்புடன் ஆடிய மனிஷ் பாண்டே 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஸல் 7 ரன்னில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதிவரை அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் துஷாரா, பும்ரா 3 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

    • அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
    • குட் பேட் அக்லி திரைப்படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும்.

    விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்.

    படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

    அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10ம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மக்களின் உயிர் அபாயகர சூழலில் உள்ளது.
    • நன்கொடை பெற்றது அனைவருக்கும் தெரியும்.

    இந்திய மக்களின் வாழ்க்கை அபாயகர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் இலவசமாக இதய பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் மெயின்பூரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய அகிலேஷ் யாதவ், "அரசாங்கத்தின் முடிவு காரணமாக அரசியலமைப்பு மட்டுமின்றி மக்களின் உயிரும் அபாயகர சூழலில் உள்ளது."

    "கொரோனா காலக்கட்டத்தில் இந்த அரசாங்கம் தடுப்பூசியை எப்படி கையாண்டது என்பதும் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் நன்கொடை பெற்றதும் அனைவருக்கும் தெரியும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று இதய பரிசோதனை செய்து கொள்கின்றனர்."

    "கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, நாடு முழுக்க மருத்துவமனைகளில் இ.சி.ஜி. போன்ற இதய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எங்கு, எப்போது பரிசோதனை செய்து கொள்ள விரும்பினாலும், எடுத்துக் கொள்ளலாம். நாட்டு மக்களின் வாழ்க்கையை பா.ஜ.க. தலைவர்கள் அபாயத்தில் தள்ளிவிட்டனர்," என்று தெரிவித்தார். 

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை டாஸ் வென்றது.
    • மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்டவில்லை.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் மும்பை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் டாஸ் போடுவதில் மீண்டும் மும்பை அணியால் சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் ஏமாற்று வேலை செய்ததாக முன்பே ஒரு முறை சர்ச்சை எழுந்தது.

    அதனையடுத்து ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடும்போது யார் டாஸ் வென்றார்கள் என டாஸ் போட்ட பின் கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

    அந்த வகையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காசை சுண்டினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஹெட்ஸ் என கேட்டார். ஆனால் மேட்ச் ரெப்ரீ கீழே விழுந்த காசை உடனடியாக கையில் எடுத்ததோடு, ஹர்திக் பாண்டியா டாசில் வென்றதாக அறிவித்தார்.

    மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்ட வில்லை. இதை அடுத்து சமூக வலை தளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் டாசில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்று விட்டதாக கூறி வருகிறார்கள்.

    ஒருவேளை உண்மையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் வென்றிருக்கலாம். ஆனால், மேட்ச் ரெப்ரீ அவசரப்பட்டு கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டும் முன் கையில் எடுத்து விட்டார் என சில ரசிகர்கள் குறிப்பிட்டு மேட்ச் ரெப்ரீ தவறு செய்து விட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.

    • ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார்.
    • பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் தயாரிக்கவுள்ளது

    2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார். இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் "பிளாக் ஷீப்" கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

    பிளாக் ஷீப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், "ஜோ" திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளது. இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைப்பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியே வந்து வாக்களிக்க சிரமமாக இருக்கும்.
    • 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைக்கிறது.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. 14 இடங்களுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 2-வது கட்டமாக வருகிற 7-ந்தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    தற்போது நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெளியேற வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு வெயில் முக்கிய காரணம்.

    வழக்கமாக காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளரக்ள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வெயில் காரணமாக வாக்குப்பதிவு நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கர்நாடகா மாநில பா.ஜனதா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

    கார்நாடகா மாநில பா.ஜனதா அந்த மனுவில் "காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாக்களிக்க மக்கள் வெளியே வருவது மிகவும் கடினமானதாக இருக்கும். 14 தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு கர்நாடகாவில் வெப்பநிலை 37 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வருகிறது. அபாய நிலையை வெப்பநிலை எட்டியுள்ளது. இது தேர்தல் நாளில் மக்கள் வாக்களிக்க கஷ்டமானதாக இருக்கும். வாக்குப்பதிவை சிறப்பாக நடத்த, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இருவரும் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மேலும், இந்த விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து தாய் நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நதியா உயிரிழந்துள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
    • வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால் இடைக்கால ஜாமின் குறித்து பரிலீசனை.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது "அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த தடயங்களும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் 2023-க்கு முந்தையவை. அனைத்தும் ஜூலை 2023-ல் உடையது. மணிஷ் சிசோடியா வழக்கில் உள்ள ஆதாரங்கள் அப்படியே உள்ளது" என கெஜ்ரிவால் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் "இந்த வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால், நாங்கள் தேர்தல் காரணமாக இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலிக்கலாம். 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இதுவரை முடிவு செய்யவில்லை.

    இரு தரப்பினரும் ஆச்சரியப்படாமல் இருக்க நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு இரு தரப்பிலும் தயாராகி வரவேண்டும்" கேட்டுக்கொண்டனர்.

    • எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தல்.
    • தூதரகத்துடன் தொடர்பில் இருக்க அறிவுறுத்துகிறோம்.

    இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு வர்த்தக ரீதியிலான வான்வழி போக்குவரத்து திறக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு பயணம் செய்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.

    ஈரான் மற்றும் இஸ்ரேல் தங்களது வான்வழியை வர்த்தக போக்குவரத்திற்கு திறந்துள்ளன. எனினும், இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், வான்வழி எவ்வளவு காலம் வரை திறக்கப்பட்டு இருக்கும் என்பது கேள்விக்குறியான விஷயம் தான்.

    "அந்த பகுதியில் நிலவும் சூழலை தொடர்ச்சியாக உற்று கவனித்து வருகிறம். ஈரான் மற்றும் இஸ்ரேல் வான்வழியை கடந்த சில நாட்களாக திறந்து வைத்துள்ளன. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும், இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்துகிறோம்," என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

    ×