ஆன்மிக களஞ்சியம்

மேல்மலையனூரில் மயான கொள்ளை

Published On 2023-05-16 12:04 GMT   |   Update On 2023-05-16 12:04 GMT
  • மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
  • கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவிப்பார்கள்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நடை பெறும். கோவிலில் இருந்து, விஸ்வரூப கோலத்தில் மயானத்தில் அங்காளம்மன் எழுந்தருளிய இருப்பார். அங்கு மயானக் கொள்ளையில், பிரம்ம கபாலத்தை ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மயானக்கொள்ளை விடுவதற்காக, பக்தர்கள், உணவுப் பொருட்களை குவிப்பார்கள். கோவிலில் இருந்து அங்காளம்மன் புறப்பட்டு வரும் போது, சாமி வந்து ஆக்ரோஷத்துடன் ஆடு பக்தர்கள், தங்கள் பற்களால், உயிருடன் இருந்த கோழியை கடித்து அம்மனுக்கு பலி கொடுப்பார்கள்.

அம்மன் வேடமிட்ட அரவாணிகள் தங்கள் மீது நடந்துச் சென்றால், தோஷம் நீங்கும் என கருதி, பக்தர்கள் பலர் நீண்ட வரிசையில் படுப்பார்கள். அவர்கள் மீது அரவாணிகள் நடந்துச் செல்வார்கள். இதில், தமிழகம், கர்நாடகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Tags:    

Similar News