ஆன்மிக களஞ்சியம்

அத்திமர வகைகள்

Published On 2024-01-07 11:57 GMT   |   Update On 2024-01-07 11:57 GMT
  • அத்தி மரம் பல வகைப்பட்டது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகைகள் உள்ளன.
  • அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை.

அத்தி மரம் பல வகைப்பட்டது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகைகள் உள்ளன.

அத்தி நடுத்தர மரமாகும். இது சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும்.

முட்டை வடிவில் சற்று நீளமாக இருக்கும்.

காய்கள் தண்டிலும், கிளைகளிலும். அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும்.

குளோப் ஜாமூன் அளவில் உருண்டையாக லேசான பச்சை நிறம் கொண்டதாக இருக்கும்.

காய் பழுத்தபின் கொய்யாப்பழம் போல் லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். பழுத்ததும் கீழே உதிர்ந்து விழுந்து விடும்.

சங்க இலக்கியத்தில் 'அதவம்' என்றும் கூறப்படும் இச்சிறுமரம், பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியாது.

'அத்தி பூத்தாற்போல' என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று.

அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும்.

அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன.

அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை.

இதன் கனி மிக மென்மையானது என்றும் நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும் குறுந்தொகை கூறுகிறது.

அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன.

ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்வார்கள்.

ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப் படுத்தலாம்.

Tags:    

Similar News