ஆன்மிக களஞ்சியம்

எண்ணைய் குளியலின் மகத்துவம்

Published On 2024-07-25 12:02 GMT   |   Update On 2024-07-25 12:02 GMT
  • தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.
  • எனவே தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் அதிகாலை 4.38 மணி முதல் 6.38 மணி வரை நீராடலாம்.

சூரிய உதயத்துக்கு முன்னதாக எவரும் எண்ணை ஸ்நானம் பண்ணக்கூடாது என்பது சாஸ்திர நியதி.

ஆனால், "தீபாவளி அன்று மட்டும் சூர்யோதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணை ஸ்நானம் செய்வதன் மூலம் தன் பிள்ளையான நரகனை நினைவுகூர வேண்டும் என்று பகவானிடம் வேண்டினாள் பூமாதேவி.

அதுமட்டுமா? சாஸ்திரம் தவிர்க்கும் ஒரு காரியத்தைச் செய்யுமாறு சாதாரணமாக கூறினால், எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால், "தீபாவளி திருநாளில் மட்டும்...எண்ணையில் லட்சுமிதேவியும், தண்ணீரில் கங்காதேவியும் வசிக்க வேண்டும் என்றும் வரம் வேண்டினாள் பூமித்தாய், பகவானும் அவ்வாறே அனுக்கிரகித்தார்.

எனவே தீபாவளி திருநாளில், சூரிய உதயத்துக்கு முன்பு அதாவது அருணோதய காலத்தில் எண்ணை தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும். அருணோதய காலம் என்பது, சூர்யோதயத்துக்கு முன் உள்ள ஒரு முகூர்த்த காலம்.

அதாவது, சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடம் வரை உள்ள காலம். 6 மணிக்கு சூரிய உதயம் என்றால், 5.15 மணிக்கு நீராட வேண்டும்.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நீராடுவது மிகவும் நல்லது என்று கணிக்கப்பட்டுள்ளது.

நரக சதுர்த்தி தினத்தன்று சிலர் கன்னியா லக்ன காலத்தில் நீராட விரும்புவார்கள்.

தலை தீபாவளியை கொண்டாடுபவர்கள் நரக சதுர்த்தி தினத்தன்று துலா லக்ன நேரத்தில் நீராடுவது உகந்தது.

எனவே தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் அதிகாலை 4.38 மணி முதல் 6.38 மணி வரை நீராடலாம்.

இந்த 2 மணி நேரத்தில் தலை தீபாவளி கொண்டாடுபவர்கள் எல்லா சடங்குகளையும் நிறைவு செய்வது நல்லது.

தீபாவளி விரதம், கேதார கவுரி விரதம் எடுக்க சிலர் நல்ல நேரம் பார்ப்பார்கள். மேஷ மற்றும் மிதுன லக்னத்திலும் தீபாவளி விரதம், கோதர கவுரி விரதத்தை தொடங்கலாம்.

Tags:    

Similar News