ஆன்மிக களஞ்சியம்

காமாட்சி தவம் செய்யும் காட்சி

Published On 2023-09-24 12:05 GMT   |   Update On 2023-09-24 12:05 GMT
  • அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.
  • மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

மகா மண்டபத்தின் தென் திசையில் இச்சன்னதி அமைந்துள்ளது.

இதன் நடுவே பத்ரபீடத்தின் மீது பஞ்ச அக்னிகள் சுவாலையுடன் தோன்ற, நடுவே உள்ள சுடரின் பின்புறம் காமாட்சி

ஒரு மா மரத்தின் முன்புறம் இடது காலை ஊன்றி வலது காலை மேல் தூக்கி வளைத்து ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி செப்புத் திருமேனியாக காணப்படுகிறது.

அம்மன் இருகரங்களுடன் காட்டப்பட்டுள்ளாள்.

வலது கை உத்திராட்ச மாலையை சின் முத்திரையில் பற்றிய நிலையில் உச்சித் தலைமீது காட்டப்பட்டுள்ளது.

இடது கரம் மார்புக்குக் குறுக்கே தியான கரமாக நீண்டுள்ளது.

கட்டை விரலும், சுட்டு விரலும் இணைந்து சின் முத்திரை காட்டும் நிலையிலும் ஞானக்கரங்களுடன் தவ நிலையில் தோன்றும் காமாட்சி ஆன உடையாளுடைய திருமேனிகள் காண்பதரிது.

ஆனால் இங்கு காமாட்சியின் தவக்காட்சி பஞ்சலோகங்களில் வார்க்கப்பட்டு வனப்போடு காட்சியளிக்கிறது.

அன்னை ஒற்றைக்காலில் நிற்கும் நிலை தியானத்தைச்சுட்டும் கரங்கள், அக்கமாலை ஏந்தி சின் முத்திரை காட்டும் கரம், முகப்பொலிவு, காமரூபினியாக காணப்படும்.

கண்களின் கனிவு, யாவும் காண்போரை வியக்க வைக்கிறது. சமய வாதிகளைச் சிந்திக்க வைக்கிறது.

பாமர மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

ஆன்மீக வாதிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இச்செப்பு வடிவம் கி.பி. 14,15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

Tags:    

Similar News