ரத்தமே எண்ணையாக அர்ப்பணம் செய்த கலிய நாயனார்
- திருவொற்றியூரில் தோன்றி திருவிளக்கு ஏற்றும் தொண்டால் சிவத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றவர் கலியநாயனார்.
- இவர் திருவொற்றியூர் சக்கரபாண்டித் தெருவில், எண்ணை ஆட்டி விற்கும் சொக்கர் குலத்தில் தோன்றியவர்.
திருவொற்றியூரில் தோன்றி திருவிளக்கு ஏற்றும் தொண்டால் சிவத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றவர் கலியநாயனார்.
இவர் திருவொற்றியூர் சக்கரபாண்டித் தெருவில், எண்ணை ஆட்டி விற்கும் சொக்கர் குலத்தில் தோன்றியவர்.
இவர் இயல்பாகவே ஓற்றியூர் கோவில் இறைவன் மேல் சிவபக்தி கொண்டவர்.
இரவும், பகலும் தானே ஆட்டிய எண்ணையை எடுத்துச் சென்று கோவிலில் விளக்கேற்றும் தொண்டு செய்து வந்தார்.
இவரின் உண்மையான பக்தியை உலகறியச் செய்ய எண்ணினார் ஒற்றீசர். ஈசனின் திருவிளையாடலால் மிகப்பெரிய செல்வந்தராக இருந்த கலியநாயனார் செல்வங்களை இழந்தார்.
வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். என்றாலும் கடன் பெற்று விளக்கு ஏற்றும் தொண்டினை விடாமல் தொடர்ந்து செய்தார்.
ஒரு கட்டத்தில் அவருக்கு கடன் கொடுக்க யாரும் முன்வரவில்லை இதனால் கூலி வேலை செய்து பொருள் பெற்றும், தன் வீட்டை விற்றும் கோவிலில் தீபம் ஏற்றினார்.
மேலும் விளக்கேற்ற பொருள் வேண்டி, தன் அன்பு மனைவியாரையே அடிமையாக விற்க முனைந்தார். இதை யாரும் ஏற்கவில்லை.
ªபாருளின்றி தொண்டு தடைபட்டு விட்டதே என வருந்தி கோவில் வந்தார். மணி வனத் திருவிளக்கு மாளின் யானும் மாள்யேன் என்று தன் கழுத்தை அறுத்து ரத்தத்ததை எண்ணையாக ஊற்றி விளக்கு ஏற்றமுனைந்தார்.
கலிய நாயனாரின் ஈடு, இணையற்ற பக்தியைக் கண்டு கருணையுடன் வெளியிட்ட ஒற்றீசர் அவருக்குச் சிவபதம் தந்து பெருந்தொண்டராக ஆக்கிக் கொண்டார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக காட்சி தருகின்றார்.