ஆன்மிக களஞ்சியம்

பல நோய்களுக்கு மருந்தாகும் அத்தி

Published On 2024-01-07 11:51 GMT   |   Update On 2024-01-07 11:51 GMT
  • அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது.
  • இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும்.

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும்.

பொரியலாகவும் சாப்பிடலாம்.

அத்தி மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடம்பு நன்றாக விருத்தியாகும்.

ரத்த விருத்தியெல்லாம் கொடுக்கும். அத்திக்காய், அத்திக்காய் பிஞ்சு இதையெல்லாம் பொரியல் செய்து சாப்பிட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும்.

குறிப்பாக தசை இறுகும். சிலருக்கு தொங்கு தசை இருக்கும். அதெல்லாம் நீங்கி, எலும்பு வலுப்பெறும்.

வைட்டமின் ஏ, பி, சி, டி என்று எல்லாமே அத்திக்காயில் இருக்கிறது.

அதனால் அத்தி மரம் என்பது எவ்வளவு விசேஷமான மரம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் ரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும்.

வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க அத்தி மர இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணமாகும். அழுகிய புண்களைக் கழுவ வெளி மருந்தாக பயன்படுத்தலாம்.

மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும்.

அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும்.

இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை.

பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.

அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது.

இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும்.

Tags:    

Similar News