ஆன்மிக களஞ்சியம்

பாடல் பெற்ற பழமையான திருவொற்றியூர் கோவில்

Published On 2024-07-17 11:19 GMT   |   Update On 2024-07-17 11:19 GMT
  • அதில் பெரும் புகழ்பெற்றது, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.
  • பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாடல் பெற்ற பழமையான சிவாலயங்கள் மொத்தம் 274 உள்ளன.

இந்த ஆலயங்களில் சென்னை உள்ளிட்ட தொண்டை மண்டலத்தில் 32 திருத்தலங்கள் உள்ளன.

அதில் பெரும் புகழ்பெற்றது, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.

பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது. முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.

ஆகம விதிபடி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.

கோவிலில் நுழைந்ததும் 60 அடியில் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காணலாம்.

இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்டபாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இதனால் இத்தலத்தில் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.

இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.

உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

ஸ்ரீ தியாகராஜர் மற்றும் ஸ்ரீ வடிவுடையம்மனை அந்திசாயும் மாலை நேரத்தில் சிவனை வழிபடுவது உகந்தது.

விளக்கேற்றும் மண்டபத்தில் விளக்கேற்றி அங்கிருந்து கோபுரத்தை கை உயர்த்தி கும்பிடுவது சிறந்தது.

வள்ளலார் குறிப்பிட்ட இந்த முறையை தான் பின்பற்றினார். எனவே நாமும் இந்த வழிபாட்டு முறையையே பின்பற்ற வேண்டும்.

Tags:    

Similar News