ஆட்டோ டிப்ஸ்

நான்கு வேரியண்ட்களில் அறிமுகமான 2023 ஹூண்டாய் கோனா!

Published On 2022-12-20 11:43 GMT   |   Update On 2022-12-20 11:43 GMT
  • ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புது கோனா மாடல் பாலைவன பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
  • புதிய ஹூண்டாய் கோனா நான்கு வேரியண்ட்களிலும் தனித்துவம் மிக்க ஸ்டைலிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் 2023 கோனா மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் கோனா மாடல் நான்கு வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டிசைன் மொழி பின்பற்றப்பட்டு இருக்கிறது. நான்கு வேரியண்ட்களில் ஒரே மாதிரியான யுனிவர்சல் ஆர்கிடெக்ச்சர் பின்பற்றப்பட்டு இருக்கும் போதிலும், இவற்றை தனித்துவப்படுத்தும் ஸ்டைலிங் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கோனா மாடல் வழக்கமான ICE ரக என்ஜின், கோனா ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனம், கோனா N லைன் மற்றும் கோனா எலெக்ட்ரிக் என நான்கு வெர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் கோனா எலெக்ட்ரிக் மாடல் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை அடுத்த பாலைவன பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வந்த ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. கோனா EV மாடலில் பிக்சலெட் செய்யப்பட்ட சீம்லெஸ் ஹாரிசான் லேம்ப், பாராமெட்ரிக் கிரில் டிசைன் வழங்கப்பட்டுள்ளது.

காரின் உள்புறம் 12.3 இன்ச் ஹாரிசாண்டல் டிஸ்ப்ளேக்கள், ஒன்று இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆக உள்ளது. இத்துடன் சிங்கில் பேன் சன்ரூஃப், ஆட்டோ டிம்மிங் IRVM, ADAS மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. கோனா EV மாடலின் பவர்டிரெயின் அம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Tags:    

Similar News