ஆட்டோ டிப்ஸ்

இணையத்தில் வெளியான மஹிந்திரா பொலிரோ நியோ 9 சீட்டர் ஸ்பை படங்கள்

Published On 2023-02-14 12:57 GMT   |   Update On 2023-02-14 12:57 GMT
  • மஹிந்திரா நிறுவனம் புதிதாக 9 சீட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புதிய 9 சீட்டர் கார் மஹிந்திரா நிறுவனத்தின் TUV300 பிளஸ் காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ நியோ எஸ்யுவி மாடலை 2021 வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த கார் மஹிந்திரா ஏற்கனவே விற்பனை செய்து வந்த TUV300 காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த நிலையில், மஹிந்திரா பொலிரோ பிளஸ் 9 சீட்டர் எஸ்யுவி மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஸ்பை படங்கள் பொலிரோ நியோ பிளஸ் மாடல் கடுமையான போக்குவரத்து நெரிசலில் செல்லும் போது எடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் டெயில்கேட்டில் பொலிரோ பெயர் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்பை காரில் மஹிந்திரா லோகோவும் மறைக்கப்பட்டே இருக்கிறது. அதன்படி இந்த காரிலும் மஹிந்திராவின் புதிய டுவின் பீக் லோகோ வழங்கப்படும் என தெரிகிறது.

 

தற்போதைய தகவல்களின் படி பொலிரோய நியோ பிளஸ் மாடல் மூன்று வித வேரியண்ட்கள், 7-சீட்டர் மற்றும் 9-சீட்டர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் 9 சீட்டர் வேரியண்ட் மூன்று அடுக்கு இருக்கைகள் - முதல் அடுக்கில் இரண்டு, இரண்டாவது அடுக்கில் மூன்று இருக்கைகள், பின்புறம் நான்கு இருக்கைகள் இருக்கும் என தெரிகிறது. 7 சீட்டர் வேரியண்டில் அனைத்து இருக்கைகளும் முன்புறம் பார்த்தப்படி இருக்கும்.

என்ஜினை பொருத்தவரை தற்போது விற்பனை செய்யப்படும் பொலிரோ நியோ மாடல் 1.5 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் நியோ பிளஸ் மாடலில் இதைவிட சற்றே பெரிய என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த என்ஜின் புதிய RDE விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும்.

Photo Courtesy: Rushlane

Tags:    

Similar News