ஆட்டோ டிப்ஸ்

கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் பெற்று அசத்திய மஹிந்திரா கார்

Published On 2022-12-13 10:49 GMT   |   Update On 2022-12-13 10:49 GMT
  • மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் கிராஷ் டெஸ்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • மஹிந்திரா மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்களும் இந்த கிராஷ் டெஸ்டில் கலந்து கொண்டிருந்தன.

குளோபல் NCAP கிராஷ் டெஸ்டிஸ் மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N மாடல் சோதனை செய்யப்பட்டது. இதில் அந்த கார் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கியது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. கார் நேரடியாக மோதியது மட்டுமின்றி, பக்காவாட்டு பகுதியில் இடிக்கும் போதும் சோதனை செய்யப்பட்டது. அதிலும் புதிய ஸ்கார்பியோ நல்ல புள்ளிகளை பெற்று இருக்கிறது.

பக்கவாட்டு பரிசோதனையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N எஸ்யுவி மாடல் 17-க்கு 16 புள்ளிகளை பெற்றது. சைடு போல் டெஸ்டில் "OK" என்ற மதிப்பெண் பெற்றது. இந்த டெஸ்டில் பாடிஷெல் மற்றும் ஃபூட்வெல் பகுதிகள் மிகவும் திடமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பெரியவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட பரிசோதனையில் ஸ்கார்பியோ N மாடல் 34-க்கு 29.25 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

குழந்தைகள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 49-க்கு 28.93 புள்ளிகளை பெற்றது. இதில் மூன்று ஸ்டார்களையும், பெரியவர்கள் பயணம் செய்யும் போது நடத்திய சோதனையில் ஐந்து ஸ்டார்களை பெற்றது. குளோபல் NCAP வழிமுறைகளின் படி குறிப்பிட்ட புள்ளிகளை பெற்றால் மட்டுமே காருக்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.

Photo Courtesy: Global NCAP

Tags:    

Similar News