ஆட்டோ டிப்ஸ்

மழை காலங்களில் கார் வைப்பர் பராமரித்தல் அவசியம் - எளிய டிப்ஸ்!

Published On 2023-06-19 07:57 GMT   |   Update On 2023-06-19 07:57 GMT
  • கார் பயன்படுத்துவோர் வைப்பர் பிலேடுகளை சீரான இடைவெளியில் மாற்ற தவறி விடுகின்றனர்.
  • வின்ட்ஷீல்டில் ஸ்கிராட்ச் ஏற்படுத்துவதோடு, வைப்பர் பிலேடுகளையும் சேதப்படுத்தும்.

கார் பாகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளில் ஒன்று வைப்பர் பிலேடுகள். இவற்றை எளிதில் சரி செய்யவும், குறைந்த செலவில் மாற்றியும் விட முடியும். எனினும், கார் பயன்படுத்துவோர் வைப்பர் பிலேடுகளை சீரான இடைவெளியில் மாற்ற பெரும்பாலும் தவறி விடுகின்றனர்.

மழை காலங்களில் வைப்பர் பிலேடுகளில் உள்ள ரப்பர் பாகம் வின்ட்ஸ்கிரீனில் உள்ள நீரை சுத்தப்படுத்தி, சாலையை தெளிவாக பார்க்க செய்கிறது. எனினும், இந்த ரப்பர் பாகம் நாளடைவில் பாழாகிவிடும். அந்த வகையில் காரின் வைப்பர் பிலேடுகளை பராமரிக்க எளிய டிப்ஸ்களை தொடர்ந்து பார்ப்போம்.

 

வின்ட்ஷீல்டு பயன்படுத்தாமலேயே இருக்கும் போது, அவைகளில் தூசு படியும். பிறகு வைப்பர் ஆன் செய்யப்பட்டால், தூசியும் வின்ட்ஷீல்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வின்ட்ஷீல்டில் ஸ்கிராட்ச் ஏற்படுத்துவதோடு, வைப்பர் பிலேடுகளையும் சேதப்படுத்தும். இதனால் வைப்பர் பயன்படுத்தும் முன், வின்ட்ஸ்கிரீனை சுத்தப்படுத்துவது அவசியம் ஆகும்.

 

கார்களை எப்போதும் மறைக்கப்பட்ட இடத்திலோ அல்லது மூடப்பட்ட பார்கிங்கில் நிறுத்துவது நல்லது. இவ்வாறு செய்யும் போது வைப்பர் பிலேடின் ரப்பர் பாகம் எளிதில் பாதிக்கப்படாது. மேலும் ரப்பர் பிலேடு மென்மையாகவும், சீராகவும் இயங்க செய்கிறது. வைப்பரில் உள்ள ரப்பர் பிலேடு பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் அதிக ரசாயனம் இல்லாத டிடர்ஜென்ட்களை கொண்டு காரின் வின்ட்ஷீல்டை சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது வைப்பர் பிலேடில் ஏற்படும் சேதம் குறைக்கப்படும்.

Tags:    

Similar News