பைக்

2023 பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் அறிமுகம்

Published On 2022-10-13 08:01 GMT   |   Update On 2022-10-13 08:01 GMT
  • பிஎம்டபிள்யூ நிறுவனம் 2023 எம் 1000 ஆர்ஆர் மற்றும் எம் 10000 ஆர் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இரு மாடல்களிலும் கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்ட பாகங்கள் மற்றும் எலெக்ட்ரிக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 2023 எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை சர்வேதச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் எம் 1000 ஆர் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் கார்பன் பைபர் பாகங்கள் மற்றும் ஏராளமான எலெக்ட்ரிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய எம் 1000 ஆர்ஆர் மற்றும் எம் 1000 ஆர் மாடல்களின் டிசைன் எஸ் மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏரோடைனமிக் விங்லெட் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய ஆர் சீரிஸ் மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது 11 கிலோ வரை டவுன்போர்ஸ் வழங்குகிறது.

மேலும் பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்ஆர் மற்றும் எம் 1000 ஆர் மாடல்களில் 999சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 210 ஹெச்பி பவர், 207 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள போர்ஜ் செய்யப்பட்ட பிஸ்டன்கள், சிஎன்சி மெஷின்டு இண்டேக் போர்ட் மற்றும் பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் தொழில்நுட்பம் காரணமாக இத்தனை செயல்திறன் சாத்தியமாகி இருக்கிறது.

இரு மாடல்களிலும் லீன்-சென்சிடிவ் எலெக்டிரானிக்ஸ், ரைடிங் மோட்கள், திராட்டில் மற்றும் என்ஜின் பிரேக் மோட்கள், லான்ச் கண்ட்ரோல், பிட் லேண் லிமிட்டர், ஹில் ஹோல்டு மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாடல்கள் ஸ்டாண்டர்டு மற்றும் எம் காம்படிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய எம் 1000 ஆர்ஆர் மாடலின் கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்ட முன்புற பிரேக் கூலிங் டக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News